தேங்காய் நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

தேங்காய் நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், தீமைகள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

தேங்காய் :

தேங்காயில் நிரம்பியுள்ள ஊட்ட சத்துக்கள் அதன் நன்மைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தேங்காய்

இதில் தாமிரம், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் மிக அதிகமாக உள்ளது.

மேலும், அதில் உள்ள கொழுப்பு சத்து உடலுக்கு நன்மை பயக்கும் நல்ல கொழுப்பு ஆகும்.

தேங்காயில் குறைந்த அளவில் ஊட்டசத்துக்கள் இருந்தாலும், தொடர்ந்து உண்ணும் போது ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் தியாமின் போன்ற சத்துக்கள் காலப்போக்கில் உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும்.

தேங்காயில் உள்ள சத்துக்கள் :

யூ. எஸ். டிப்பார்ட்மென்ட் ஆப் அக்ரிகல்ச்சர் (USDA), தரவுகளின் படி 100 கிராம்  தேங்காயில் உள்ள சத்துக்கள் பற்றி காணலாம்.

100 கிராம் தேங்காயில் 354 கலோரிகள் உள்ளன. அதில் 33 கிராம் கொழுப்பு, 3.3 கிராம் புரதம் மற்றும் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதில் 9 கிராம் நார்ச்சத்து அடங்கும்.

வைட்டமின்கள் :

வைட்டமின் சி 3.3 மில்லி கிராமும், வைட்டமின் ஈ 0.24 மில்லி கிராமும், வைட்டமின் கே 0.2 மைக்ரோ கிராமும் உள்ளன.

தியாமின் [வைட்டமின் பி1] 0.066 மில்லி கிராமும், ரைபோஃப்ளேவின் [வைட்டமின் பி2] 0.020 மில்லி கிராமும், நியாசின் [வைட்டமின் பி3] 0.540 மில்லி கிராமும், பாந்தோதெனிக் அமிலம் [வைட்டமின் பி5] 0.300 மில்லி கிராமும், போலேட் 26 மைக்ரோ கிராமும் மற்றும் கோலின் 12.1 மில்லி கிராமும் உள்ளன.

தாதுச் சத்துக்கள் :

கால்சியம் சத்து 14.00 மில்லி கிராமும், தாமிரம் 0.43 மில்லி கிராமும், இரும்புச் சத்து 2.43 மில்லி கிராமும், மெக்னீசியம் 32.00 மில்லி கிராமும், மாங்கனீஸ், 1.500 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 113 மில்லி கிராமும், பொட்டாசியம் 356 மில்லி கிராமும், செலினியம் 10.10 மைக்ரோ கிராமும், சோடியம், 20.00 மில்லி கிராமும், துத்தநாகம் 1.10 மில்லி கிராமும் உள்ளன.

தேங்காய் நன்மைகள் :

தேங்காயில் உள்ள அற்புதமான ஆரோக்கிய பலன்களைப் பெற, தொடர்ந்து  தேங்காய் சிறிதளவாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் நன்மைகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மலச்சிக்கல் : 

தேங்காயில் 61% நார்ச்சத்து உள்ளது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

மேலும் மலச் சிக்கல் பிரச்சனையால்  பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

தோல் மற்றும் முடி ஆரோக்கியம் : 

தேங்காயில் உள்ள கொழுப்பு சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. இது சருமத்தை ஈரப் பதமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சரும வறட்சி மற்றும் சுருக்கங்கள் தோன்றும் வாய்ப்பை குறைக்கிறது.

தேங்காய் மோனோலாரின் மற்றும் லாரிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும்.

இவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பணபுகள் உள்ளன.

எனவே, முகப்பரு, தலை மற்றும் தலை முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராக செயல் படுகிறது.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தை குறைத்து சருமத்தை இளமையோடு வைத்திருக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது :

தேங்காய் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக அறியப் படுகிறது.

தேங்காயில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் உடல் கொழுப்பை வேகமாக எரித்து மற்றும் பசியை அடக்கும் செயல்முறையை ஊக்குவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி : 

இயற்கையில் தேங்காய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்டதால், தொற்று நோய்க்கு எதிராக போராட உடலுக்கு சக்தி அளிக்கிறது.

மேலும் இது தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும் இது மிகவும் நல்லது.

அல்சைமர் நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கலாம் : 

நியூட்ரியண்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் தேங்காயில் காணப்படுகின்றன.

மேலும் இதில் அல்சைமர்  மற்றும் பிற அறிவாற்றல் கோளாறுகளைத் தடுக்க உதவும் கீட்டோஜெனிக் பண்புகள் உள்ளன.

தேங்காய் தீமைகள் :

தேங்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், தேங்காய் அதிக அளவில் உட்கொள்வது சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளன.

பெரும்பாலான நேரங்களில், இந்த பக்க விளைவுகள் அதிக அளவு சாப்பிடுவதால் ஏற்படுகிறது.

அதிக அளவு சாப்பிடுவதால் விளையும் தேங்காய் தீமைகள் சிலவற்றை காணலாம்

கொழுப்புகள் :

தேங்காய் அதிக அளவில் உட்கொள்வது என்பது ஒரு நபர் பாலிஅன்சாச்சுரேட்டட், மோனோ சாச்சுரேட்டட் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் உட்பட கொழுப்புகளை அதிக அளவில் சாப்பிடுவதற்கு சமம். அதிக அளவு கொழுப்பு உடலில் சேர்வது ஆரோக்கித்திற்கு தீங்கு விளைவிக்கும்.

உடல் எடை அதிகரிப்பு :

தேங்காயில் அதிக கலோரிகள் இருப்பதால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, அது எடை அதிகரிப்பதற்கும் பங்களிக்கும்.

ஒவ்வாமை :

பெரும்பாலான உணவுகளைப் போலவே, தேங்காய்களுக்கு ஒவ்வாமை இருப்பதற்கான ஒரு சிறிய வாய்ப்பு எப்போதும் உள்ளது.