தேன் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்

1

 

தேன் :

தேன் தனியாகவும் பிற பழங்கள், காய்கறிகள், பால், மற்றும் மருந்து பொருட்களுடனும் சேர்த்து உண்ணும் போது பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

தேன்

புராண கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் தேவலோக அமிர்தத்திற்கு இணையாக இவ்வுலகில் உள்ள எந்த பொருளையும் சொல்ல முடியாது.

ஆனால் தேன் அமிர்தத்திற்கு எடுத்துகாட்டிற்காக சொல்லப்படும் அளவு சுவையும், ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ பயன்ளையும் கொண்டுள்ளது.

தேன் நன்மைகள் :

தேன் மருத்துவ பயன்களுக்காக பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது.

தேன் நன்மைகள்

பொதுவாக சித்த மருத்துவத்தில் தேன் மருந்துகளுடன் கலந்து சாப்பிட பரிந்துரைக்கப் படுகிறது.

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும் என்று சொல்லப்படுகிறது.

தேன் நன்மைகள் பின்வருமாறு 

உடனடி ஆற்றல் கிடைக்க :

தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வெகு விரைவாக குடலால் உறிஞ்சப் படுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கிறது.

நோய் வராமல் தடுக்க :

அதிகாலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தேனை நாவால் நக்கி சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் வராது என்று பொதுவாக சொல்லப்படுகிறது.

ஜீரணப் பாதை சீராக :

பொதுவாக இஞ்சி தேன் மருத்துவ முறைகள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுகிறது.

பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி இஞ்சியுடன் தேனில் ஊறவைத்து உட்கொன்று வர நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், ஜீரணப்பாதை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க :

ஒரு தேக்கரண்டி தேனுடன், ஒரு கரண்டி  இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, நல்ல ஜீரண சக்தியும், இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் உண்டாகும் மற்றும் நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

பித்தப் பை நோய்கள் குணமாக :

ஒன்று முதல்மூன்று டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் அல்லது சாப்பாடுக்கு முன் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

உடல் எடை குறைய :

தேன் மருத்துவ பயன்களில் அனைவரும் அறிந்த ஒன்று உடல் எடை குறைப்பதில் பயன்படுவதாகும்.

உடல் உறுதியாக :

வெந்நீரில் தேன் கலந்து குடித்து வர கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை வற்றி குறைந்து எடை குறைந்து உடல் உறுதி அடையும்.

தலைவலி குணமாக :

எலுமிச்சம் பழச்சாறுடன் ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

கண் பார்வை பிரகாசமாக :

வெங்காயச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

நுரையீரல் ஆரோக்கியமாக :

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும்.

இரத்தம் ஊற :

மாதுளம் பழ சாற்றுடன் சம அளவு தேன் சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும், பித்தம் தணியும். புதிய இரத்தம் ஊறும்.

பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் நீங்கும்.

கட்டிகள் பழுக்க :

சுண்ணாம்புடன் தேன் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

புண்கள் விரைவில் ஆற :

மீன் எண்ணெயுடன் தேனைக் கலந்து உண்டு வந்தால், உடலில் ஆறாத புண்கள் இருந்தால் விரைவில் ஆற உதவும்.

கீழ் வாதம் குணமடைய :

கருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட்டு வர  கீழ் வாதம் குணமடையும்.

வயிற்று வலி நீங்க :

தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவி மசாஜ் செய்தால் வயிற்று வலி நீங்கும்.

அல்சர் குணமாக :

சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

கொழுப்பு குறைய :

பூண்டை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர வாயுக்கோளாறுகள், அஜீரணம், உடல் பருமன், கொழுப்பு நீங்கும்.

இரத்தம் விருத்தியாக :

ரோஜாப்பூ இதழ்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கி இரத்த விருத்தி உண்டாகும். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

கடுக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர பித்தம் தணியும், மலச்சிக்கல் தீரும், மன அழுத்தம் நீங்கி தூக்கத்தை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஊட்டச் சத்துக் குறைபாடு நீங்க :

நெல்லிக்காயை  தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு அத்தியாவிஷய ஊட்ட சத்துக்களான வைட்டமின் C , இரும்பு சத்துகால்சியம் மற்றும் மினரல்களை பெறலாம்.

கண் பார்வை தெளிவு பெற :

உடல் சூடு குறையும், குடல் புண்கள் ஆறும். மலச்சிக்கல் நீங்கும், இரத்த விருத்தி உண்டாகும், எலும்புகள் பலம் பெறும் மற்றும் கண் பார்வை தெளிவு பெறும்.

இருமல் குணமாக :

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு தினமுக் ஒரு தேக் கரண்டி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

இளமையுடன் வாழ :

என்றென்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும்.

நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்தி வறுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

தேன் தீமைகள் :

தேன் தேவலோக அமிர்தம் என்று அழைக்கப்பட்டாலும், மருந்தாக இருந்தாலும் அதிக அளவு உட்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துக்கின்றன.

தேன் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் (தேன் தீமைகள்)

1 COMMENT

  1. தேன் பூலோக அமிர்தமாக அமைந்துள்ளது.நோயுள்ளவர்களும் நோயற்றவர்களும் தினமும் தேனை சாப்பிட்டுவந்தால் மனம் நலம் சார்ந்த மற்றும் உடல்நலம்சார்ந்த பலன்களை பெறலாம்.