தேன் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள்

0

தேன் தீமைகள் :

தேன் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் சிலருக்கு சில ஆரோக்கியம் தொடர்பான தீமைகளையும் ஏற்படுத்துகிறது.

தேன் தீமைகள்

தேன் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி கீழே விரிவாக காணலாம்.

அதிக கலோரிகள் :

தேன் இயற்கையில் கிடைக்கும் சர்க்கரை என்றாலும் இதில் அதிக அளவில் கலோரிகள் உள்ளன. எனவே அதிக அளவில் தேன் உண்பது உடல் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கும்.

சர்க்கரை உள்ளடக்கம் :

தேன் இயற்கையான சர்க்கரைகளைக் கொண்டிருந்த போதிலும், தேன் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். இது நீரிழிவு நோயாளிகளும் அல்லது இரத்த சர்க்கரை உட்கொள்ளலைக் கண்காணிப்பவர்களும் தேவை ஏற்படின் மட்டும் தேன் உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வாமை :

அரிதாக சிலருக்கு தேன் ஒவ்வாமை இருக்கலாம் அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

இரத்த அழுத்தம் :

தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் அதை அதிக அளவில் எடுத்துக் கொள்வது ஹைபர்டென்ஷன் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

பல் பிரச்சினைகள் :

தேனில் உள்ள அமிலத்தன்மை காரணமாக அதிக அளவில் உட்கொள்ளும் போது பல் சிதைவை ஊக்குவிக்கும். எனவே தேன் பருகிய பிறகு வாய் மட்டும் பற்களை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

மாசுபாடு :

பொதுவாக சுத்தமான தேன் கிடைப்பது அரிதானது. லாப நோக்காத்துக்காக சீனிப் பாகு கலந்து சந்தைகளில் விற்கப் படுகிறது. எனவே சுத்தமான தேன் என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும்.

பொதுவாக தேன் ஆரோக்கியமான உணவு மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்தது மேலும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது.

மேற் சொல்லப்பட்ட குறைபாடுகள் தேன் அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கும், ஏதேனும் உடல் நலக்கோளாறு உடையவர்களுக்கும் மட்டும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன