Homeஉணவுகள்விதைகள் மற்றும் கொட்டைகள்தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள்

தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள்

தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள், அதில் உள்ள சத்துக்கள் மருத்துவ பயன்கள் மற்றும் தண்ணீர் விட்டான் கிழங்கு தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் விட்டான் கிழங்கு :

தண்ணீர் விட்டான் கிழங்கு தாவரத்தின் வேர்களில் காணப்படுவது தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகும். இந்த தாவரத்தின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரேஸ்மோசஸ் ஆகும். மேலும் லிலியேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகையாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள்

தண்ணீர் விட்டான் கிழங்கு பூர்வீகம் ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனா என்று சொல்லப்படுகிறது. இது பல நூறு ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப் பட்டு வந்தாலும் தாவரவியல் ரீதியாக முதன்முதலில் 1799 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.

தண்ணீர் விட்டான் கிழங்கு மருத்துவ பயன்கள் :

தண்ணீர் விட்டான் கிழங்கு “மூலிகைகளின் ராணி” என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் சாதாவர் என்றும் ஹிந்தியில் ஷதாவரி என்றும் அழைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

ஹார்மோன் சமநிலை மற்றும் பெண் ஆரோக்கியம் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பொதுவான டானிக்காக பயன்படுத்தப்படுகிறது.

மேலும்  மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது, அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைத் தடுப்பது, மேலும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்கு எதிராக செயல்படுவது, மலட்டுத்தன்மை, மன அழுத்தம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுவது போன்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது..

தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள சத்துக்கள் :

தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணங்களுக்கு காரணம் அதிலுள்ள ஷாட்டாவரின்கள், ஒலிகோசாக்கரைடுகள், சளி, ஐசோஃப்ளேவோன்கள், ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகளான ருடின் மற்றும் குர்செடின் மற்றும் சிட்டோஸ்டெரால்கள் போன்ற ஸ்டெரால்கள் எனப்படும் ஸ்டீராய்டல் சபோனின்கள் போன்ற உயிரியல் இராசயன கூறுகள் ஆகும்.

இவை தவிர, தண்ணீர் விட்டான் கிழங்கில் உடல் ஒட்டு மொத்தா ஆரோக்கியத்திற்கு அவசிமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், கோபால்ட், பொட்டாசியம், செலினியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் மேலும் வைட்டமின் ஏ மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற வைட்டமின்களும் கனிசமான அளவில் உள்ளன.

மேலும் அத்தியாவிஷய கொழுப்பு அமிலமான காமா-லினோலெனிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலன்களும் உள்ளன.

தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள் :

தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள்

தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள் பின்வருமாரு

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது :

தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி எடுத்துக் கொள்வது கணையத்தின் β-செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியாவதை ஊக்குவிக்கிறது. இது மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைப்பதைக் குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க வழிவகுக்கிறது.

நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :

தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-பயாடிக் மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, சளி, இருமல், ஜலதோஷம், மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவுகிறது. இது மார்பு மற்றும் நாசி துவாரங்களுக்குள் உள்ள சளி படிவுகளை மெல்லியதாக்கி தளர்த்துவதன் மூலம் சுவாசத்தை எளிதாக்குகிறது மேலும் உடலில் இருந்து சளியை அகற்றுவதில் உதவுகிறது. இதை தினமும் உட்கொள்வது நுரையீரல் திசுக்களை பலப்படுத்தி நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடை குறைப்பில் உதவுகிறது :

தண்ணீர் விட்டானில் உள்ள ஃபிளாவனாய்டுகள் உடல் எடையை வேகமாக குறைப்பதில் உதவுகிறது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், பசியைக் குறைத்து அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் அதிக கலோரிகள் உடலில் சேர்வதைக் குறைத்து உடல் எடை குறைப்பை ஊக்கு விக்கிறது.

இதய ஆரோக்கியம் :

தண்ணீர் விட்டான் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கார்டியோ-பாதுகாப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், பல இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இதயத் தசைகளை வலுப்படுத்தவும், இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு, இரத்தக் கட்டிகள் போன்ற அபாயத்திற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

தண்ணீர் விட்டான் பொடியில் உள்ள வாயு எதிர்ப்புத் தன்மை உணவுக் குழாயில் வாயுக்கள் உருவாவதைக் குறைக்கிறது இதன் மூலம் வாய்வு, வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்தி உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சப் படுவதை ஊக்குவிக்கிறது.

1 டீஸ்பூன் தண்ணீர் விட்டான் வேர் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்

காயங்கள் ஆற உதவுகிறது :

தண்ணீர் விட்டான் கிழங்கு வயிற்றுப்புண், பெருங்குடல் அழற்சி மற்றும் வாய் புண்கள் போன்ற பல்வேறு வகையான புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் உதவுகிறது. இதிலுள்ள உயிரியல் கலவைகள் காயம் காரணமாக சேதம் அடைந்த திசுக்களின் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கின்றன. இதன் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கு தீமைகள் :

தண்ணீர் விட்டான் கிழங்கு பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மனிதர்களில் இதன் மருத்துவ பயன் பாடு குறித்து போதுமான ஆராய்ச்சித் தகவல்கள் இல்லை.

மருத்துவ நிலையிலும் இதைப் பரிந்துரைக்க மனிதர்களைப் பற்றிய போதுமான அறிவியல் ஆய்வுகள் செய்யப்படவில்லை. எனவே ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உட்கொள்வது சிறந்தது

தண்ணீர் விட்டான் கிழங்கு தீமைகள் சில பின்வருமாறு

தண்ணீர் விட்டான் கிழங்கு அதிகப்படியான அளவு எடுத்துக் கொள்வது சில சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அஸ்பாரகஸ் வகை தாவர குடும்பத்திற்கு ஒவ்வாமை எதிர்விளைவு உள்ளவர்கள் தண்ணீர் விட்டான் கிழங்கு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு சொறி, கண்கள் மற்றும் தோல் அரிப்பு, தலைச்சுற்றல், வேகமாக இதயத் துடிப்பு போன்ற ஒவ்வாமை எதிர் வினைகளை ஏற்படுத்தலாம்.

டையூரிடிக் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தண்ணீர் விட்டான் கிழங்கை தவிர்க்க வேண்டும்.

இரத்த சர்க்கரையை குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் தண்ணீர் விட்டான் கிழங்கு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular