தக்காளி பழம் நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

0
தக்காளி பழம் நன்மைகள், பயன்கள் தக்காளி பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் தக்காளி பழம் தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

தக்காளி பழம் :

அறிவியல் பெயர் சோலனம் லைக்கோபெர்சியம் (Solanum lycopersicum) ஆகும். இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா என்று சொல்லப்படுகிறது.

தக்காளி

தக்காளி பழ வகைகளுள் ஒன்றாக இருந்த போதும் இது காய்கறிகளை போல் உண்ணப்படுகிறது.

தக்காளி லைகோபீன் எனப்படும் ஆக்சிஜனேற்றியின் சிறந்த மூலமாகும்.

இது இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

மேலும் தக்காளி வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

பொதுவாக நன்றாக பழுக்கும் போது சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை மற்றும் ஊதா உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன.

தக்காளியில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் சமைக்கப்படாத நன்றாக பழுத்த தக்காளி பழத்தில் பின்வரும் சத்துக்கள் தோராயமாக உள்ளன.

வைட்டமின்கள் :

தாதுச் சத்துக்கள் :

தக்காளி நன்மைகள் :

தக்காளி பழம் நன்மைகள் பின்வருமாறு…

இதய ஆரோக்கியம் :

தக்காளியில் உள்ள லைகோபீன் மற்ற ஆக்ஸிஜனேற்றிகளான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி போன்றவற்றுடன் இணைந்து இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

சில ஆய்வுகள் தக்காளியில் உள்ள லைகோபீன் ஆக்ஸிஜனேற்றப்பட்ட எல்டிஎல் மற்றும் தமனி பிளேக் குறைப்புக்கும் உதவுவதாக நிரூபித்துள்ளன

இரத்த அழுத்தம் :

தக்காளியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்கிறது :

தக்காளி கெட்ட கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைக்கிறது. எனவே, இதய நோய்கள் உள்ளவர்கள் தக்காளியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி :

தக்காளியில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் சி, லைக்கோபின் போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

புற்றுநோய் :

தக்காளியில் உள்ள லைக்கோபின் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

லைகோபீன் பல்வேறு  புற்றுநோய் செல்கள் வளர்ச்சி மற்றும் பரவுவதை தடுக்க உதவுகிறது.

பதப்படுத்தப்பட்ட தக்காளி உணவுகளான கெட்ச்அப் போன்றவற்றில் லைகோபீன் அதிகமாக உள்ளது.

கண் ஆரோக்கியம் :

தக்காளி வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும்.  குறிப்பாக, டுடீன் மற்றும் ஜியாக்சாண்டின். வைட்டமின் A இன் இந்த இரண்டு வடிவங்களும் விழித்திரையில் குவிந்து, வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கின்றன.

சூரிய ஒளி சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் புற ஊதா கதிர்களின் பாதிப்பின் சில விளைவுகளுக்கு எதிராகப் பாதுகாக்கின்றன.

நீரிழிவு நோய் :

நீரிழிவு நோயினால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தக்காளி குறைப்பதாக சொல்லப்படுகிறது.

அவை வீக்கம், பெருந்தமனி தடிப்பு மற்றும் திசு சேதம் போன்ற நீரிழிவு நோயின் அனைத்து பொதுவான சிக்கல்களையும் குறைக்கின்றன.

தக்காளியில் உள்ள கூமரிக் அமிலம் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் பீடி மற்றும் சிகரெட் புகையின் பாதகமான விளைவுகளை குறைக்க உதவுகின்றன.

மலச்சிக்கல் :

செரிமானம், செரிமான அமைப்பு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தக்காளி உதவுகிறது. தக்காளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது மலச்சிக்கலையும் தடுக்கிறது.

எனவே கொஞ்சம் அதிகமாகவோ அல்லது காரமான உணவை சாப்பிட்டிருந்தால், உணவின் முடிவில் ஒரு சிறிய பழுத்த தக்காளியை உண்பது நல்லது.

விந்தணு எண்ணிக்கை :

தக்காளி ஆண்மை அதிகரிக்கும் அதாவது விந்தனுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பழங்களில் ஒன்று.

இதற்கு முக்கிய காரணம் தக்காளியில் லைக்கோபின் எனும் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றி உள்ளது.

ஆலிவ் ஆயில் சேர்த்து தக்காளி சூப் செய்வதன் மூலம் லைக்கோபின் உடலால் உறிஞ்சப் படுவதை அதிகப் படுத்தலாம்.

தக்காளி தீமைகள் :

தக்காளி இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது. எனவே ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலால் அவதிப் படுபவர்கள் தக்காளி மற்றும் தக்காளியில் செய்யப்பட்ட உணவு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.

ஒவ்வாமை தக்காளியை சாப்பிட்ட பிறகு வெகு சிலருக்கு ஒவ்வாமையை  ஏற்படுத்தலாம். அறிகுறிகளில் வாய், காது அல்லது தொண்டை அரிப்பு அல்லது உதடுகள், வாய், நாக்கு மற்றும் தொண்டை வீக்கம் ஆகியவை அடங்கும்.