நீர்முள்ளி விதை நன்மைகள், தீமைகள் மற்றும் பயன்கள்

2

நீர்முள்ளி விதை நன்மைகள், பயன்கள் மற்றும் நீர்முள்ளி விதை தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

நீர்முள்ளி விதை :

நீர்முள்ளி நேபாளம் மற்றும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட மூலிகை வகை ஆகும். இது ஆங்கிலத்தில் டெம்பிள் பிளாண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

நீர்முள்ளி விதை

இது ஈரமான இடங்களில் செழித்து வளரும் தன்மை கொண்டது. இது 2 மீட்டர் அல்லது அதற்கும் சற்று அதிகமாக வளரக் கூடியது. இதன் பூக்கள் ஊதா நிறத்தில் காணப்படும.

நீர்முள்ளி ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பல்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

நீர்முள்ளி விதை நன்மைகள் :

நீர்முள்ளி விதை சிறுநீர்க்குழாய் சம்பந்தமான நோய்கள், வாய்வு, வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, இரைப்பை சம்பந்தமான நோய்கள், பவாத நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகளிள் பயன்படுத்தப்படுகிறது.

மனச் சோர்வைக் குறைக்கிறது :

நீர்முள்ளி உடல் பலவீனத்திற்கு எதிராக செயல்படும் சிறந்த மருந்தாக உள்ளது. இது அட்ரீனல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மனச் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

சத்துக்கள் உறிஞ்சப் படுவதை ஊக்குவிக்கிறது :

உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச் சத்துக்கள் உடலால் உறிஞ்சப் படும் திறனை அதிகரிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கச் செய்து ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது.

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

நீர்முள்ளி விதையில் உள்ள் லேசான கார்மினேட்டிவ் மற்றும் சிறந்த செரிமான பண்புகள் உள்ளன.

இது வாய்வு, வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு போன்ற அனைத்து செரிமான கோளாறுகளுக்கும் நம்ப முடியாத அளவில் நிவாரணம் அளிக்கிறது.

மேலும் இதில் கனிசமான அளவு உள்ள நார்ச்சத்து, குடலின் பெரிஸ்டால்டிக் இயக்கங்களை பெரிதும் மேம்படுத்தி மலத்தை முழுமையாக வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் நச்சுகள் உருவாவதைத் குறைக்கிறது.

கல்லீரல் பிரச்சனைகளை குறைக்கிறது :

நீர் முள்ளி விதையில் கல்லீரல் பாதுகாப்பு பண்புகள் உள்ளன. மஞ்சள் காமலை நோயாளிகளுக்கு பித்தத்தின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை உடலில் இருந்து அகற்றவும் உதவுகிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நீர்முள்ளி விதையில் உள்ள தாவர சேர்மங்கள் சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பார்வையை தெளிவுபடுத்துவதற்கும் உதவுகிறது.

மாலைக் கண் என்றழைக்கப்படும் இரவு குருட்டுத்தன்மை மற்றும் பிற கண் தொற்றுகளைத் தடுக்க நீர் முள்ளி பரிந்துரைக்கப்படுகிறது.

ஆண்மைக் குறைவு சிகிச்சையளிக்க உதவுகிறது :

நீர்முள்ளி சிறந்த ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் ஆகும். இது ஒரு இயற்கை பாலுணர்வூட்டியாக உள்ளது.

நீர்முள்ளி விதை பொடி விந்தணு எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கிறது.

எனவே இது பாரம்பரிய மருத்துவத்தில் ஆண்மை குறைவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது

இரத்த சர்க்கரை பராமரிப்பில் உதவுகிறது :

நீர் முள்ளியில் உள்ள தாவர கலவைகள் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைப் பாதுகாப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.

உடல் சூட்டைக் குறைக்கிறது :

நீர் முள்ளி விதை பொடி டையூட்ரிக் பண்புகள் காரணமாக சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம் சிறுநீர் கோளாறுகளைக் குறைக்கிறது மற்றும் உடல் சூட்டைக் குறைப்பதில் உதவுகிறது.

நீர்முள்ளி விதை தீமைககள் :

கோகிலாக்ஷா கஷாயத்துடன் எந்த பக்க விளைவுகளும் காணப்படவில்லை.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நீர் முள்ளி பாத்துகாப்பானதா என்பது பற்றி போதுமான தகவல்கள் இல்லை. எனவே மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

நீர்முள்ளி விதை பொடி சாப்பிடும் முறை :

  • கால் அல்லது அரை டீஸ்பூன் நீர்முள்ளி பொடி எடுத்துக் கொள்ளவும்
  • அதனை தேன் அல்லது பாலுடன் சேர்த்துக் கொள்ளவும்
  • மதிய மற்றும் இரவு உணவு சாப்பிடட பிறகு இதனை குடிக்க வேண்டும்.

2 COMMENTS