காட்டு யானம் அரிசி நன்மைகள் தீமைகள்

0

காட்டு யானம் அரிசி

காட்டு யானம் அரிசி தென்னிந்தியாவில் பயிரிடப் படும் பல வகையான பாரம்பரிய நெல் வகைகளில் மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்றாகும்.

காட்டு யானம் அரிசி

காட்டுயானம் அரிசி என்பது சிவப்பு அரிசி வகைகளில் ஒன்றாகும். காட்டில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு யானையை மறைக்கும் அளவிற்கு வளர்வதால் இதற்கு காட்டு யானம் அரிசி என்று பெயர் வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

காடு + யானை என்ற இரு சொற்கள் இணைந்து இந்த அரிசியின் பெயர் உருவாக்கப் பட்டுள்ளது.

காட்டு யானம் அரிசியில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் காட்டு யானம் அரிசியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

காட்டு யானம் அரிசியின் பயன்கள் :

காட்டுயானம் அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம், சாதம், பாயாசம் மற்றும் கஞ்சி போன்ற பலவகையான உணவுகள் செயலாம்.

பொதுவாகவே சிவப்பு அரிசி வெள்ளை அரிசியை விட ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லத.

கட்டுயானம் அரிசி நன்மைகள்

பொதுவாகவே சிவப்பு அரிசி வெள்ளை அரிசியை விட ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

காட்டுயானம் அரிசியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதில் இயற்கையாகவே உள்ள அந்தோசயனின் எனப்படும் சிவப்பு நிறமி அகும்.

இந்த தலைப்பில் காட்டு யானம் அரிசி நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

தோல் ஆரோக்கியம்

காட்டு யானம் அரிசியில் அந்தோசயனின் எனும் ஆக்சிஜனேற்றி உள்ளது உள்ளது.

இது சரும ஆரோக்கியாத்தைப் பராமரிப்பதில் திறம்பட உதவுகிறது. இது தோல் மற்றும் சருமத்தை இளமையாக வைத்திருப்பதிலும்

தோல் அழற்சி போன்ற நோய்களுக்கு எதிராட போராடவும் உடலுக்கு சக்தியை அளிக்கிறது.

புற்றுநோய் எதிர் பண்பு :

அந்தோசயனின் என்பது ஒரு வகை பிளவனாய்டுகள் ஆகும். இது புற்று நோய்க்கு எதிராக போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கல்லீரல் ஆரோக்கியத்தில் உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

கட்டுயானம் அரிசியை மற்ற வகை அரிசிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

மேலும் மாவுச் சத்து சற்று குறைவாக காணப்படுகிறது. எனவே இது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.

மேலும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மற்ற வகை அரிசிகளை விட சிறந்த உணவாக உள்ளது.

மலச்சிக்கலைத் தடுக்கிறது :

காட்டுயானம் அரிசி மலச்சிக்கலைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவும் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து என இரண்டும் உள்ளது.

கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதில் உடுவுகிறது.

கரையாத நார்ச்சத்து, செரிமான அமைப்பில் உணவுப் பொருள்களை சீராக நகர்த்த உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கலைப் போக்குகிறது.

ஆண்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன :

மற்ற அரிசிகளை விட காட்டு யானம் சிவப்பு அரிசியில் கனிசமான அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. மேலும்

இரும்பு, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களும் கனிசமான் அளவில் உள்ளன.

அவை உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களையும் செல்களையும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

மேலும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் காயங்கள் ஆறும் திறனை ஊக்குவிக்கின்றன.

காட்டுயானம் அரிசி தீமைகள் :

கட்டுயானம் அரிசியை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.

ஏனெனில் அதிக அளவு உண்பது, மயக்கம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், உடல் நலக் குறைபாடு உடைவர்கள் காட்டு யானம் அரிசியை உண்பதற்கு முன் மருத்துவர் ஆலோசனைப் பெற்றுக்கொள்வது நல்லது.