கருப்பட்டி பயன்கள், நன்மைகள், மருத்துவ பனண்புகள் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
கருப்பட்டி :
பனை மரத்தின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் பனை வெள்ளம் கருப்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
இது சுத்திகரிக்கப்படாத சர்க்கரை என்றும் சொல்லலாம். பொதுவாக சீனி அல்லது வெள்ளை சர்க்கரையில் சல்பர் டை ஆக்சைடு, சுண்ணாம்பு மற்றும் பிற ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் போன்ற இரசாயனங்களை தயாரிப்பு செயல்முறையின் போது பயன்படுத்தப் படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கருப்பட்டி தாதுக்களை அகற்றாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.
கருப்பட்டி நன்மைகள் :
கருப்பட்டி ஊட்டச் சத்துக்களால் நிரம்பியுள்ளதோடு மட்டு மல்லாமல் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும் இருமல் மற்றும் சளிக்கு எதிரான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது.
இது வெள்ளை சர்க்கரை அல்லது கரும்பு வெல்லத்தை விட இது மிகவும் ஆரோக்கியமானதாகும். ஆனால் அதன் பலன்களைப் பெற மிதமான அளவு உட்கொள்ள வேண்டும்.
ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன :
கருப்பட்டி சுத்திகரிக்கப்படாதது மற்றும் வடிகட்டப்படாதது எனவே கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துக்களால் நிறைந்துள்ளது.
கருப்பட்டியில் உடலுக்கு அவசிமான அத்தியாவசிய தாதுச் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது சர்க்கரையை விட ஆரோக்கியமானதாக கருதப் படுகிறது. மேலும் இதில் வைட்டமின்களும் நிறைந் துள்ளன.
செரிமான ஆரோக்கியம் :
கருப்பட்டி செரிமான அமைப்பிற்கு நன்மை பயக்கிறது. இது செரிமானத்திற்கு தேவைப்படும் நொதிகளை செயல்படுத்துவதை துரிதப் படுத்துகிறது. மேலும் குடல் பாதைகளை சுத்தப்படுத்துவதில் உதவுகிறது.
நச்சு நீக்கி :
கருப்பட்டி சுவாசப் பாதை, குடல், உணவுக் குழாய், நுரையீரல் மற்றும் வயிறு ஆகிய உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது.
இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. .
மலச் சிக்கலை போக்குகிறது :
கருப்பட்டியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
இது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் குடல் இயக்கத்தை தூண்டுகிறது.
எலும்பு ஆரோக்கியம் :
கருப்பட்டியில் கால்சியம் சத்து அதிக அளவு உள்ளதால் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இது எலும்புகளை பலப்படுத்துவதால் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு தொடர்புடைய பிரச்சனைகளை குறைக்கிறது.
உடல் எடை :
கருப்பட்டியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் நீர் தேக்கம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.
சிறந்த ஆற்றல் ஊக்கி :
தரமான மாவுச் சத்து நிறைந்துள்ளதால் வெள்ளை சர்க்கரையை விட ஜீரணிக்க எளிதானது. கருப்பட்டி சாப்பிடுவது நீண்ட நேரத்திற்கு ஆற்றலுடன் இருக்க உதவுகிறது
கருப்பட்டி மருத்துவ குணங்கள் :
கருப்பட்டி பழங்காலத்தில் இருந்தே அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருமல் மற்றும் சளி :
இது இருமல் மற்றும் சளி மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பனை வெல்லம் சளியை கரைத்து சுவாச பாதையை சுத்தம்.
செய்ய உதவுவதாக நம்பப் படுகிறது. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கருப்பட்டியை பயன்படுத்தலாம்.
இரத்தம் சுத்திகரிப்பு :
கருப்பட்டி இரத்த சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தினமும் குறைந்த அளவில் தொடர்ந்து கருப்பட்டி சாப்பிடுவது இரத்தம் சுத்திகரிக்க எளிய வழி ஆகும்.
மேலும் இது இரத்தக் கோளாறுகளைத் தடுக்கிறது மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை :
கருப்பட்டியில் கனிசமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களால் உள்ளன.
எனவே கருப்படி செல்களை சேதப் படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.
ஒற்றைத் தலைவலி :
தலை வழிகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒற்றைத் மிகவும் வேதனையானது.
கருப்பட்டியில் உள்ள இயற்கையான மருத்துவ குணம் ஒற்றை தலை வலியைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.
ஒற்றை தலைவலி உள்ளவர்கள் ஓரு டீ ஸ்பூன் கருப்பட்டியை வாயில் போட்டு முயற்சி செய்து பார்க்கலாம்.
கருப்பட்டி பயன்கள் :
கருப்பட்டி இனிப்பு சுவைக்காக சாக்கலேட், கருப்படி மிட்டாய், கடலை மிட்டாய் போன்ற தென் இந்தியா உணவுகளில் பயன்படுத்தப் படுகிறத.
கருப்பட்டி வெள்ளை சர்க்கரை அல்லது கரும்பு சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப் படுகிறது.
வெள்ளை சர்க்கரை அல்லது கரும்புச் சர்க்கரையை விட கருப்பட்டி அதிக ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணம் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இது பி வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். மேலும் இதில் அஸ்கார்பிக் அமிலமும் உள்ளது.
இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சோகைக்கு நல்லது.
மேலும் கருப்பட்டியில் உள்ள மெக்னீசியம் நரம்பு மண்டலங்களின் சரியான செயல் பாட்டிற்கு இன்றியமையதது.
மேலும் பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துகிறது. வாத நோய் மற்றும் பித்த கோளாறுகளை தடுக்கிறது.
இருமல் மற்றும் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு பயன்படும் மருந்து பொருட்களிலும் பயன்படுகிறது.
கருப்பட்டி தீமைகள் :
பொதுவாக கருப்பட்டி அளவோடு தேவையான அளவு பயன்படுத்துவது பாதுகாப்பானது தான்.
ஆனாலும் அரிதாக வெகு சிலருக்கு கருப்பட்டி ஒவ்வாமை இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இருந்தால், மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைத்தல், சொறி, தலைவலி, சோர்வு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
எனவே இத்தகைய கோளாறுகளை உணருபர்கள் கருப்பட்டியை தவிர்ப்பது நல்லது.