உடல் எடை குறைய காபி
பெரும்பாலோனோர் காலையில் எழுந்ததும் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அந்த காபி உடல் எடை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் உடல் எடை குறைக்க உதவும் என்று சப்ளிமெண்ட்ஸ்களிலும் காபியில் உள்ள காபின் எனும் பொருள் மூலப் பொருள்களில் ஒன்றாக சேர்க்கப்படுகிறது. (காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்)
காபி உண்மையில் உடல் எடை குறைப்பில் உதவுமா? உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு காபி நுகர்வை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மேலும் காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், சாத்தியமான பக்க விளைவுகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாகக் காணலாம்.
காபி உடல் எடை குறைய எவ்வாறு உதவுகிறது?
காபியில், காபின் எனும் மூலப் பொருள் பெறுவாரியாக உள்ளது. காபியின் பண்புகள், நன்மை மற்றும் தீமைகளுக்கு காபின் முக்கிய காரணமாக அமைகிறது.
காபி குடிப்பது எவ்வாறு உடல் எடை குறைப்பில் உதவுகிறது என்பது பற்றி விரிவாக காணலாம்.
வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது :
காபின் ஒரு இயற்கை வளர்சிதை மாற்ற ஊக்கி ஆகும். இந்த பண்பு உடல் எடையைக் குறைப்பதில் உதவுகிறது. காஃபி பருகிய பிறகு தற்காலிகமாக வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகள் எரிக்கப் படுவதை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் எடை குறைக்கும் சப்ளிமெண்ட்ஸ்களில் காபின் ஒரு பொருளாக சேர்த்துக்கொள்ளப் படுகிறது.
பசியைக் கட்டுப்படுத்துகிறது :
காபி குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரிகளை எரிப்பதோடு பசியைக் கட்டுப்படுத்தி அதிக அளவு உண்பதைக் குறைப்பதன் மூலம் அதிக கலோரிகள் உடலில் சேர்வதையும் குறைக்கிறது.
உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது :
காபி குடிப்பது உடல் செயல் திறனை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சியின் போது உடல் செயல் திறனை அதிகப்படுத்தி சோர்வைக் குறைத்து உடற்பயிற்சி செய்யும் கால அளவை அதிகரிப்பதன் மூலம் கலோரிகள் எரிக்கப் படுவதை ஊக்குவிக்கிறது.
கொழுப்பைக் கரைக்க உதவுகிறது :
காபியில் உள்ள காஃபின் உடலில் நடைபெறும் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்தி உடலுக்கு ஆற்றலை அளிப்பதில் உதவுகிறது. இதன் மூலம உடலில் உள்ள கூடுதல் கொழுப்பைக் குறைத்து உடல் எடை குறைப்பில் உதவுகிறது.
தெர்மோஜெனெசிஸ் பண்புகள் :
காபி உடலில் தெர்மோஜெனிக் விளைவை ஏற்படுத்துகிறது. தெர்மோஜெனிக் விளைவு என்பது உடலின் வெப்ப உற்பத்தியை சற்று அதிகரிப்பதன் மூலம் ஆற்றல் செலவு செய்யப் படுவதை சற்று அதிகரித்து கலோரிகளை எரிப்பதாகும். தெர்மோஜெனிக் விளைவு கூடுதலாக சில கலோரிகளை எரிப்பதால் உடல் எடை இழப்பில் சிறிது பங்கற்றுகிறது.
உடற்பயிற்சிக்குப் பிந்தைய பலன்கள் :
உடற்பயிற்சிக்குப் பிறகு, காபி உட்கொள்வது கிளைகோஜனை சரி செய்வதன் மூலம் தசை வலியைக் குறைக்க உதவுகிறது. இது காலப்போக்கில் உடற்பயிற்சி முறையை மறைமுகமாக மேம்படுத்தி உடல் எடை குறைப்பில் சற்று பங்களிக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட் :
காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இவை எடை இழப்புக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், உடல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தில் பங்காளிப்பது மூலம் உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது.
முடிவுரை :
உடல் எடை குறைப்பில் காபியின் பங்கு ஒவ்வொரு தனி நபருக்கு நபர் மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், உடல் எடை குறைப்பில் காப்பியின் பங்கு மிதமானது மற்றும் தற்காலிகமானது. எடை இழப்புக்கு காப்பி மட்டுமே முக்கியமான மற்றும் முதன்மையான தீர்வு என்று எங்கும் பரிந்துரைக்கப் படவில்லை. உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப் பாட்டுடன் காபி அருந்தவது உடல் எடை குறைப்பில் சிறிது கூடுதல் பலன் தரும்.