காபி குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்

0

காபி நன்மைகள் :

காபி என்பது காபி தாவரத்தின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான பானமாகும். இதன் ஒருவித சுவை மற்றும் நறுமணத்திற்காக மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

காபி நன்மைகள்

உலகில் மக்களில் பலர் காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்தகைய காபி குடிப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி காணலாம்.

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன :

காபியில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் குயினின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.

இதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் செல்கள் மற்றும் டிஎன்ஏவை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

எனவே வழக்கமான காபி நுகர்வு ஆக்ஸிஜனேற்றிகளை சற்று அதிகரிப்பதன் மூலம் உடல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது.

வகை 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது :

மிதமான காபி நுகர்வு, வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதாகச் சொல்லப்படுகிறது.

காபியில் உள்ள சில பயோ ஆக்ட்டிவ் சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த செயல்பாடு நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

கல்லீரல் பாதுகாப்பு :

மிதமான அளவு காபி நுகர்வு பேட்டி லிவர், கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் போன்ற கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறதும்.

மேலும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் காபியில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற கலவைகள் காபியில் உள்ளன.

உடல் எடை குறைப்பில் உதவுகிறது :

காபியில் உள்ள காஃபின் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

மேலும் இதன் பசியைக் குறைக்கும் பண்பு மற்றும் தெர்மோஜெனிக் பண்புகள் காரணமாக எடை குறைப்பில் உதவுகிறது.

எனவே இது பெரும்பாலும் எடை இழப்பு சப்ளிமெண்ட்ஸில் ஒரு கூட்டுப் பொருளாக சேர்க்கப்படுகிறது. (உடல் எடை குறைக்க காபி எவ்வாறு உதவுகிறது).

உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது :

காபியில் உள்ள காஃபின் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, அட்ரினலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது.

அட்ரினல் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் சக்தியைச் செலுத்தும் திறனை மேம்படுத்துகிறது. இது சிறந்த தடகள மற்றும் உடல் செயல்திறனுக்கு வழிவகுக்கும்.

மனநிலையை மேம்படுத்துகிறது :

காபி நுகர்வு மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காபியில் உள்ள காபின், டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளில் செயல்பாட்டை மேம்படுத்தி மனச்சோர்வைக் குறைக்கிறது.

அறிவாற்றலை மேம்படுத்துகிறது :

காபியில் உள்ள காஃபின் அடினோசிஸ் நரம்பியக் கடத்திகளின் செயல்பாட்டைக் குறைக்கிறது. அடினோசின் நரம்பியக்கடத்தி சோர்வாக உணர வைக்கிறது.

காபி குடிப்பது அடினோசின் ஏற்பிகளைத் தடுப்பதன் மூலம், டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற நரம்பியக்கடத்திக.ளின் வெளியீட்டை அதிகரிக்கிறது,

இது கவனம், மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பார்கின்சன் நோயின் ஆபத்தை குறைக்கிறது:

காபியில் உள்ள காஃபின் மற்றும் பிற சேர்மங்கள் டோபமைன்-உற்பத்தி செய்யும் நியூரான்களின் சிதைவைத் தடுக்க உதவும் நரம்பியல் விளைவுகளைக் கொண்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்களால் நம்பப் படுகிறது.

இவை மூளையில் டோபமைனின் அளவை பராமரிக்க உதவுவதன் மூலம் பார்கின்சன் நோய் அபாயத்தைக் குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது..

அல்சய்மர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது :

காபியில் உள்ள உயிர்வேதியியல் சேர்மங்கள், மூளை செல்களைப் பாதுகாக்க உதவுவதோடு, அல்சைமர் நோயின் அடையாளமான அமிலாய்டு பிளேக்குகள் உருவாவதைக் குறைக்கும்.

காபியின் வழக்கமான நுகர்வு அறிவாற்றல் செயல்பாட்டை பராமரித்து மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியை தாமதப்படுத்த உதவுகிறது.

முடிவுரை :

காபி மிதமான அளவு குடிப்பது மட்டுமே உடலுக்கு நன்மைகளை அளிப்பதாக சொல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமாக குடிப்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.