வெந்தயக்கீரை நன்மைகள் மற்றும் தீமைகள்

1

வெந்தயக்கீரையில் உள்ள சத்துக்கள், நன்மைகள், மருத்துவ குணங்கள் மற்றும் தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

வெந்தயக்கீரை:

வெந்தயம் தாவரத்தின் இலைகள் வெந்தயக்கீரை ஆகும். வெந்தயம் இந்திய சமயல்களில் மசாலா பொருட்களில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது.

வெந்தயக் கீரை

இதன் இலைகள் ஒரு இயற்கை மூலிகையாகும். இது கீரை உணவாகவும் உண்ணப்படுகிறது.

இது உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை தருவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

வெந்தயக்கீரை நன்மைகள் :

வெந்தயத்தை போன்றே அதன் இலைகளாகிய வெந்தய கீரைகளிலும் ஏராளமான ஊட்ட சத்துக்கள், ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது :

வெந்தயக்கீரைகள் உணவுக்கு பிறகு சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது.

மேலும் இரத்த சர்க்கரைக்கு எதிரான இன்சுலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

கொலஸ்ட்ராலை குறைக்க :

வெந்தயக்கீரை கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.

இதயத்திற்கு நல்லது :

வெந்தயக்கீரை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்து வதாக அறியப்படுகிறது.

வெந்தய கீரை கெட்ட கொழுப்பை (எல்டிஎல்) குறைக்கின்றன. இது பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.

செரிமான அமைப்புக்கு நல்லது :

வெந்தயக் கீரைகளில் உள்ள கரையாத நார்ச்சத்து மலச்சிக்கலின் அபாயத்தைக் குறைத்து சீரான மற்றும் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. வாய்வு மற்றும் அஜீரண சிகிச்சையில் பயன்படுகிறது.

வாய் புண்களை குணமாக்குகிறது :

வெந்தயக் கீரைகள் வாய் புண்களை குணப்படுத்த உதவுகின்றன. ஒரு கப் வெந்தய கீரைகளை 2 கப் தண்ணீருடன் கொதிக்க வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி, வாய் கொப்பளிக்க வாய்ப்புன் குணமாகும்.

இரத்த சோகை :

வெந்தய கீரையில் ஃபோலேட் உள்ளது. இது எலும்பு மஜ்ஜையில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த வெள்ளை யனுக்களின் விரைவான வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு அவசியமாகும்.

1 கப் நறுக்கிய வெந்தயக்கீரையில் 21.07 மைக்ரோ கிராம் ஃபோலேட் உள்ளது. இது தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவில் (RDA) 10.57% ஆகும். போலேட் தேவைகள் அதிகரிக்கும் போதும், கர்ப்பத்திற்கு முன்பும், கர்ப்ப காலத்திலும் சாப்பிடுவது நல்லது.

1 கப் நறுக்கிய வெந்தயக்கீரையில் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட இரும்பு சத்தில் 7.57 சதவீதம் உள்ளது.

இளைய பெண்கள் முதல் கருவுற்ற தாய்மார்கள் வரை இரத்த உருவாக்கத்திற்கு இந்த சத்துக்கள் மிகவும் அவசியமாகும்.

இரும்பு இரத்த சிவப்பணுக்களில் உள்ள முக்கிய பொருளாகும். இது நுரையீரலில் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட் களான பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜ னேற்றிகளால் செறிவூட்டப் பட்டிருப்பதால், நோய்களுக்கு எதிராக போராட உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

எலும்பு ஆரோக்கியம் :

வெந்தயக்கீரையில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது எலும்பு வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமாகும்.

எலும்பு வளர்சிதை மாற்றம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல் முறையாகும்.

அதாவது முதிர்ந்த எலும்பு திசு எலும்புக் கூட்டிலிருந்து அகற்றப்பட்டு புதிய திசுக்களால் நிரப்படுகிறது.

எலும்பு முறிவுகள் அல்லது எலும்பு சிராய்ப்பு போன்ற காயங்கள் ஏற்படும் போது வைட்டமின் கே காயத்தை குணப்படுத்துதலை துரிதப் படுத்துகிறது.

மேலும் வைட்டமின் கே எலும்பு அடர்த்தி இழப்பு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வருவதைத் தடுக்கிறது.

ஒரு கப் நறுக்கிய வெந்தய கீரையில் 110 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட (RDA) கால்சியம் அளவில் 18.4 சதவீதம் ஆகும். கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு கனிமமாகும்.

காய்ச்சல் நிவாரணி :

வெந்தய கீரைப் பொடியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மூலிகை தேநீர், அதிக காய்ச்சல் உள்ள நேரங்களில் உடலின் வெப்பநிலையைக் குறைக்கும் ஒரு சிறந்த வழியாகும்.

இதனால் காய்ச்சலுக்கான சிறந்த வீட்டு மருந்தாக இது பயன்படுத்தப் படுகிறது.

தலைமுடி ஆரோக்கியம் :

நீளமான மற்றும் பளபளப்பான தலை முடியை பெற வெந்தய கீரை உதவுகிறது.

வெந்தய கீரையை தேங்காய்ப் பாலுடன் கலந்து உச்சந்தலையில் தடவி வர , முடி உதிர்வதை தடுத்து, முடி நரைக்கப்படுவதை குறைத்து, முடியை பட்டுப் போலவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

பொடுகு நீங்க :

வெந்தயக்கீரை சிறிதளவு வினிகருடன் கலந்து தலையில் நேரடியாகப் பூசுவதன் மூலம் பொடுகுத் தொல்லையைத் தடுக்க உதவுகிறது.

சருமத்திற்கு நன்மை பயக்கிறது :

வெந்தயக்கீரை சருமத்தில் காணப்படும் புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்க உதவுகிறது. வெந்தயகீரையை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் போன்று தயார் செய்து சருமத்தில் பூசி வர கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் வராமல் தடுக்கிறது.

வெந்தயக்கீரையின் மருத்துவப் பயன்கள் :

வெந்தயக் கீரையில் நார்ச் சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை வலிமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயகீரை.

பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. வெந்தயக் கீரையுடன், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச்சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

2. வெந்தயகீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அரைத்து சட்னியாகச் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

3. வெந்தயகீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் சரியாகும்.

4. வெந்தயகீரையுடன் சிறிது உளுந்தைத் தட்டிப்போட்டு கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

5. வெந்தயகீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.

6. வெந்தயகீரையுடன் குடை மிளகாய், கசகசா, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

7. வெந்தய கீரையுடன் சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

8. வெந்தயக்கீரையை அரைத்து, அதில் மாதுளை ஓடு, வில்வ ஓடு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கலந்து காயவைத்துப் பொடியாக்கித் தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் நல்ல உடல் வலிமை உண்டாகும். சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

வெந்தயக்கீரை தீமைகள் :

சில வெந்தயக்கீரை தீமைகள் பின்வருமாறு

வெந்தயக்கீரையில் ஏராளமான ஆரோக்கிய  பயன்கள் உள்ளன. ஆனால் அதை அளவோடு உட்கொண்டால் மட்டுமே இந்த பயன்களை பெற முடியும்.

வெந்தயக்கீரை மிகவும் கசப்பான சுவையை கொண்டிருப்பதால், அதிக அளவில் உட்கொள்வது எளிதல்ல. ஆனால் அதிக அளவில் உட்கொண்டால் ஒவ்வாமை போன்ற  எதிர் வினை பல ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

வெந்தயம் மற்றும் வெந்தய கீரையின் மிகவும் பொதுவான பிரச்சினை குமட்டல் உணர்வு ஆகும்.

வெளிப்புற பூச்சாக தோலில் பயன்படுத்தும் முன் சிறிதளவு பயன்படுத்தி சோதிக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் வெந்தயக்கீரைகள் சாப்பிடுமுன் மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.

1 COMMENT