சுண்டைக்காய் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

0

சுண்டைக்காய் :

சுண்டை காய்  அறிவியல் பெயர் சோலனும் டார்வம் ((Solanum torvum) ஆகும். இது ஆங்கிலத்தில் துருக்கி (Turkey Berry) பெர்ரி என்று அழைக்கப் படுகிறது.

சுண்டைக் காய் நன்மைகள்

சுண்டை காய் பூர்வீகம் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகள் ஆகும்.

சுண்டை சமையலுக்கு பயன் படுகிறது மற்றும் பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. மேலும் மூலிகை மருந்துகளிலும் பயன் படுத்தப் படிக்கிறது.

இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

மேலும் கலோரிகள், கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

சுண்டைக் காய் நன்மைகள் :

சுண்டைக் காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் மருத்துவ பயன்கள் உள்ளன. அவை

செரிமான ஆரோக்கியம்  :

சுண்டைக்காயில் உள்ள ஆக்சிஜனேற்றிகளான பினால்கள் மற்றும் குளோரோஜெனின்கள் குடல் இரைப்பை அழற்சி மற்றும் வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவுகிறது.

மேலும் இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது.

இரத்த சோகையை போக்குகிறது :

சுண்டைக்காயில் இரும்பு சத்து உள்ளது. இது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசிமான கனிமமாகும்.

சுண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வது இரத்த சோகையை சரிசெய்வதற்கும், இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கும், அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச் சத்துக்களை கொண்டு செல்லவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுகிறது :

சுண்டைக்காயில் உள்ள கிளைகோசைடு என்ற ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது.

எனவே, இரத்த சர்க்கரையின் திடீர் உயர்வை கட்டுப்படுத்துகிறது. இது உணவை உட்கொண்ட பின் ஏற்படும் உயர் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

மாத விடாயை சீராக்குகிறது :

சுண்டைக்காயில் உள்ள சபோஜெனின் என்ற ஸ்டீராய்டு உள்ளது.

இது ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

எனவே, உலர்ந்த சுண்டைக்காயை மென்று சாப்பிடுவது பெண்களுக்கு ஹார்மோன் ஏற்ற தாழ்வினால் ஏற்படும் மாத விடாய் கோளாறுகளை சரி செய்கிறது.

இதய ஆரோக்கியம் :

சுண்டைக் காயில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் புரதம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.

இது இதயத் தசைகளை வலுப்படுத்தி இதய துடிப்பை சீராக்குகிறது.

மேலும் உடலின் மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் இரத்தத்தை செலுத்துகிறது.

சுண்டைக்காய் சாப்பிடுவது இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் குறைக்கிறது.

காய்ச்சலை திறம்பட எதிர்த்துப் போராடுகிறது :

சுண்டைக்காய் சாப்பிடுவது அதிக உடல் வெப்பநிலையை கணிசமாகக் குறைக்கிறது.

இருமல், தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதலை நீக்குகிறது.

இதில் உள்ள பாலிபினால் என்ற ஆக்ஸிஜனேற்றிகள் கபம், நாசிப் பாதைகளில் இருந்து சளி, நுரையீரல் ஆகியவற்றை அகற்ற உதவுகிறது, இதன் மூலம் ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

சிறுநீரக ஆரோக்கியம் :

சுண்டைக் காயில் உள்ள சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளின் சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.

வழக்கமான உணவில் சுண்டைக் காயை சேர்த்துக் கொள்வது சிறுநீரகங்களை சுத்தப் படுத்து வதற்கும், குடல், சிறுநீர்ப்பை இயக்கம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவி செய்கிறது.

தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு  :

சுண்டைக் காயில் உள்ள வைட்டமின் சி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒவ்வாமை, நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்த் தொற்று களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

சுண்டைக் காய் தீமைகள் :

சுண்டைக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் இருந்தாலும் அளவோடு அல்லது குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.

சுண்டைக் காயை அதிக அளவு சாப்பிட்டால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அவை

சுண்டைக்காயில் கிளைகோல் கலாய்டுகள் எனப்படும் ஒரு வகை சேர்மங்கள் உள்ளன.

அவை அதிக அளவுகளில் உட் கொள்ளும் போது  குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் போன்ற பாதகமான செரிமான மற்றும் நரம்பியல் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.