சுரைக்காய் பயன்கள், சுரைக்காய் ஜூஸ் நன்மைகள், சுரைக்காய் தீமைகள், சுரைக்காயில் உள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.
சுரைக்காய் :
புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் அதிகம் உள்ள சுரைக்காயில் நீர் சத்து மிக அதிகம்.
இது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான உணவு.
சுரைக்காய் நன்மைகள் :
வெயில் காலங்களில் உடலை குளிர்வித்து உடல் சூடு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது
சுரைக்காய் உடலிக் கொழுப்பு சேர்வதை குறைத்து உடலுக்கு உறுதியை தருகிறது.
சிலருக்கு முகத்தில் உள்ள எண்ணெய் வழிந்து காணப்படும். எத்தனை முறை சோப்பு போட்டு கழுவினாலும் மீண்டும் எண்ணெய் வழியும். அப்படிப்பட்டவர்கள் சுரைக்காய் சாறுடன் சிறிது இந்துப்பு சேர்த்து குடித்து வர எண்ணெய் வழிவது குறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.
அதிக குளிர்ச்சி தன்மை மிக்க சுரைக்காய் போன்ற காய்கறிகளை குளிர்காலத்தில் சாப்பிடும்போது அதில் இந்துப்பு சுக்கு, மிளகு, மல்லித்தூள் இவற்றைக் கலந்து காய்கறி கலவை போல சாப்பிடுவதன் மூலம் குளிர்ச்சியான உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும் சளி பிடிப்பை தவிர்க்கலாம்.
நோயால் பாதித்து உடல் தேறியவர்களுக்கு பித்தத்தை சரி செய்து உடல் வலுவாக்கும் தன்மை சுரைக்காய்க்கு உண்டு.
சுரைக்காய் ஜூஸ் :
சுரைக்காய் சாறு உடல் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக உடல் எடையை குறைக்கும் தன்மை உடையது.
தலைமுடி உதிரிவதை கட்டுப்படுத்தி முடி கருமையாக வளர்வதையும் செயல் படுத்தும்.
சுரைக்காய் ஜூஸ் செய்முறை :
சுரைக்காயின் சதை பாகங்களை எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து எடுக்க, சுரைக்காய் ஜூஸ் தயாராகும்.
சுரைக்காய் ஜூஸ் பயன்கள் :
சுரைக்காய் ஜூஸில் சுவைக்கேற்ப தேன் அல்லது பனை வெல்லம் கலந்து பருக சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் வயிற்றில் தங்கி தொல்லைகள் கொடுத்த உணவுகள் யாவும் செரிமானமாகி வயிறு அமைதியாகும்.
சுரைக்காய் ஜூஸின் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்தும் இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் சுரைக்காய் ஜூஸ் பருகிவர கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி சீராக விளங்கும்.
நீர்ச்சத்து மிக்க, சுரைக்காய் ஜூஸ் பருகும் உடல் எடை மிகுந்தவர்களுக்கு அவர்களின் கொழுப்புகளைக் கரைத்து உடலில் அவர்களின் கொழுப்புகளை கரைத்து, உடலில் மெட்ட பாலிசத்தை தூண்டி உடலின் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
சுரைக்காய் சாற்றில் சிறிது நல்லெண்ணெய் கலந்து பருகி வர இரவில் உறக்கமின்மை வியாதி நீங்கி நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
பெண்களின் ரத்த சோகை வியாதியைப் போக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும் அருமருந்தாக சுரைக்காய் ஜூஸ் விளங்குகிறது.
சுரைக்காய் சாரில் தேன் கலந்து குடிக்க உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலின் சீரான இயக்கத்திற்கு வழி செய்கிறது.
உடலில் வெளியேறாமல் தேங்கும் சிறுருநீரை வெளியேற்றி சிறுநீரக நச்சுத் தொற்றுகள், கற்கள் மற்றும் சிறுநீரகத்தை தூய்மை செய்து இதயத்தைக் காக்கிறது.
சுரைக்காய் சாறு கல்லீரலை சிறப்பாக செயல் பட வைத்து கல்லீரல் சம்பந்தமான நோயை போக்கும் ஆற்றல்மிக்கது.
வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும் தன்மை மிக்கது. மேலும், மன அழுத்தத்தை குறைத்து மன இறுக்கத்தை சரி செய்கிறது.
சுரைக்காய் பொரியல் செய்முறை :
சுரைக்காயை வேகவைத்து வெள்ளத்தை இட்டு நன்கு குழைத்து இதில் கடுகு பருப்புகள் தாளித்து கருவப்பிலை சேர்த்து சமைத்தால் குழந்தைகளின் விருப்பமான இனிப்பு உணவான சுரைக்காய் பச்சடி தயார்.
இதை, மதிய உணவில் சாதமுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இதனால், குழந்தை பசி உணர்வு அதிகரித்து நன்கு சாப்பிடுபவர்.
பெண்களின் உடல் உபாதைகளும் சரியாகிவிடும். சுரைக்காயை வேகவைத்து மேல் சொன்ன முறையில் வெல்லம் சேர்க்காமல் சமைக்க சுரைக்காய் கூட்டு தயார். இதுவும் அவர்களுக்கு ஏற்ற எளிதில் செரிமானமாகும் தன்மைமிக்க ஒரு உணவாகவும் இது இருக்கிறது.
சுரைக்காய் தீமைகள் :
நலன்கள் பல நமக்கு தந்தாலும், சுரைக்காயை ஒரு போதும் பச்சையாக சாப்பிடக் கூடாது.
பெரிய வயிறு உள்ளவர்கள், குரலைக் காக்க வேண்டிய பாடகர்கள் யாவரும் சுரைக்காய் உணவில் தவிர்க்க வேண்டும்.
அது போல பெண்களின் மாதவிலக்கின் போது சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டும் என வைத்திய சாத்திரங்கள் சொல்கின்றன.