ஜிங்க் அல்லது துத்தநாகம் நிறைந்த உணவுகள் மற்றும் ஜிங்க் நன்மைகள் பயன்பற் றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜிங்க் அல்லது துத்தநாகம் :
ஜிங்க் அல்லது துத்தநாகம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமமாகும். இது பல உணவுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது.
துத்தநாகம் செல்லுலார் வளர்சிதை மாற்றத்தின் பல செயல்பாடுகளில் பயன்படுகிறது. இது சுமார் 100 நொதிகளின் வினையூக்கச் செயல்பாட்டிற்கு அவசியம் ஆகும்.
மேலும் இது நோயெதிர்ப்பு செயல்பாடு, புரத தொகுப்பு, காயம் குணப்படுத்துதல், டிஎன்ஏ தொகுப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சுவை மற்றும் வாசனையின் சரியாக உணர்வதில் இது உதவுகிறது.
ஜிங்க் குறைபாடு உடலில் ஜிங்க் சேமித்து வைப்பதற்கு என்று ஒரு சிறப்பு அமைப்பு இல்லாத காரணத்தினால் ஏற்படுகிறது. எனவே உடலுக்கு தேவைப்படும் ஜிங்க் தினசரி உண்ணும் உணவின் மூலம் கிடைக்கிறது.
ஜிங்க் நன்மைகள் :
நோய் எதிர்ப்பு அமைப்பு :
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதில் சிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜிங்க் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து நிமோனியா போன்ற நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும்
சரும ஆரோக்கியம் :
ஜிங்க் ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதில் பங்கு வகிக்கிறது. நாள் பட்ட காயங்கள் அல்லது புண்கள் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் துத்தநாக குறைபாடு உள்ளதாக சொல்லப்படுகிறது.
நாள்பட்ட காயங்கள் உள்ளவர்களுக்கு துத்தநாகச் சத்துக்களை சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கலாம்.
சிறந்த ஆக்சிஜனேற்றி :
துத்தநாகம் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். எனவே, இது செல்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்கள் போன்ற போன்ற நோய்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பார்வை ஆரோக்கியம் :
விழித்திரையில் முதுமை தொடர்பான மாகுலர் சிதைவினால் ஏற்படும் செல் சேதத்தைக் குறைப்பதில் சிங்க் உதவுகிறது.
இதன் மூலம் வயதான காலங்களில் ஏற்படும் பார்வை இழப்பை தாமதப்படுத்த உதவும் என்று தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) நம்பகமான ஆதாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், சிதைவைத் தடுப்பது சாத்தியம் என்பது போதுமான ஆதாரங்கள் இல்லை..
பாலியல் ஆரோக்கியம் :
துத்தநாகம் குறைபாடு, கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் ஆண்களில் பிற பாலியல் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்க வாய்ப்புகள் உள்ளன.
இருப்பினும், அதிகப்படியான துத்தநாகம் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும் மற்றும் விந்தணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் சப்ளிமெண்ட்ஸைக் கருத்தில் கொள்ளும் எவரும் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.
ஜிங்க் பயன்கள் :
சில விளையாட்டு வீரர்கள் செயல்திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதற்காக ஜிங்க் எடுத்து கொள்கின்றனர்.
முகப்பரு, நீரிழிவு நோயால் ஏற்படும் கால் புண்கள், டயபர் சொறி, மருக்கள், வயதான தோல், முகத்தில் பழுப்பு நிற திட்டுகள், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் தொற்றுகள், ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் மற்றும் காயம் குணப் படுத்துவதை விரைவுபடுத்தவும் சிங்க் மேற்புற பூச்சாக தோலில் பயன்படுத்தப்படுகிறது.
குடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளவர்களுக்கு சிங்க் ஆசனவாயில் பயன்படுத்த ப்படுகிறது.
துத்த நாக சிட்ரேட் ஈறு அழற்சியைத் தடுக்க பற்பசை மற்றும் மவுத்வாஷில் பயன்படுத்தப்படுகிறது.
ஜலதோஷத்திற்கு சிகிச்சையளிக்க நாசியில் தெளிக்கக்கூடிய மருந்துகளில் துத்த நாகம் படுத்தப் படுகிறது.
கண் எரிச்சலுக்கு சிகிச்சையளிக்க துத்த நாக சல்பேட் கண் சொட்டு மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது.
தீக்காயங்களில் இருந்து குணமடைந்து வருபவர் களுக்கு ஊட்டச் சத்தை மேம்படுத்த துத்த நாகம் நரம்புக்குள் செலுத்தப்படுகிறது.
ஜிங்க் நிறைந்த உணவுகள் :
ஜிங்க் நிறைந்த உணவுகள் காய்கறிகள், பழங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள்
மாட்டிறைச்சி :
100 கிராம் பச்சை மாட்டிறைச்சி தினசரி மதிப்பில் 44% வழங்குகிறது.
அலாஸ்கன் வகை நண்டு :
அலாஸ்கன் நண்டு 100 கிராமில் 7.6 மி.கி ஜிங்க் உள்ளது. இது தினசரி தேவையாக பரிந்துரைக்கப் பட்டுள்ள அளவில் 69 சதவீதம் ஆகும்
இறால் :
100 கிராம் இறால் மற்றும் சிறிய செல் பிஷ்களில் தினசரி தேவையாக பரிந்துரைக் கப்பட்ட துத்த நாகம் அளவில் 14 சதவீதம் உள்ளது.
சிப்பி :
6 நடுத்தர அளவுல்லா சிப்பியில் 32 மிகி துத்த நாகம் உள்ளது. இது தினசரி தேவையில் 291 சதவீதம் ஆகும்.
பருப்பு :
100 கிராம் சமைத்த பருப்பு சிங்க்கின் எளிய மூலமாகும். இதில் தினசரி சிங்க் தேவையில் சுமார் 12 சதவீதம் உள்ளது. இருப்பினும், அவற்றில் பைடேட்டுகள் எனப்படும் ஆன்டி நியூட்ரியண்ட்களும் உள்ளன. அவை துத்த நாகம் மற்றும் பிற தாதுக்கள் உடலால் உறிஞ்சப் படுவதை தடுக்கிறது.
சணல் விதை :
3 தேக்கரண்டி அல்லது 30 கிராம் சணல் விதையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிந்துரைக் கப்பட்ட தினசரி அளவில் முறையே 31 சதவீதம் மற்றும் 43 சதவீதம் உள்ளன.
பூசணி விதை, எள் :
ஸ்குவாஷ், பூசணி மற்றும் எள் போன்ற விதை வகைகளிலும் கனிசமான அளவு சிங்க் உள்ளது.
நட்ஸ் :
பைன் நட்ஸ், வேர்க்கடலை, முந்திரி மற்றும் பாதாம் போன்ற கொட்டைகளிலும் கனிசாமான அளவு சிங்க் உள்ளது.
முந்திரி :
1 அவுன்ஸ் அல்லது 28 கிராம் முந்திரியில் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட சிங்க் அளவில் 15 சதவீதம் உள்ளது.
சீஸ் :
100 கிராம் சீஸில் 28 சதவீதம் ஜின்க் உள்ளது. அதே சமயம் ஒரு கப் முழு கொழுப்புள்ள பாலில் 9 சதவீதம் உள்ளது.
முட்டை :
முட்டையில் மிதமான அளவு சிங்க் உள்ளது. ஒரு பெரிய முட்டையில் சிங்க் தினசரி தேவையில் 5 சதவீதம் உள்ளது.
உருளைக்கிழங்கு :
ஒரு பெரிய உருளைக் கிழங்கில் தோராயமாக 1 மி கி சிங்க் உள்ளது. இது தினசரி தேவையான சிங்க் மதிப்பில் 9 சதவீதம் ஆகும்.
பச்சை பீன்ஸ் :
100 கிராம் பச்சை பீன்ஸ் மற்றும் கேல் போன்ற பிற காய்கறிகளில் தினசரி துத்த நாகம் மதிப்பில் 3% சதவீதம் உள்ளது.
டார்க் சாக்லேட் :
100 கிராம் அல்லது 3.5-அவுன்ஸ் 70-85% டார்க் சாக்லேட்டில் 3.3 மி. கி ஜிங்க் உள்ளது. இது தினசரி மதிப்பில் 30 சதவீதம் ஆகும்..
[…] மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகச் சத்தும் […]
[…] பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நல்ல அளவில் […]
[…] ஜிங்க் : 0.17 மி. கி […]
[…] வைட்டமின்கள் பி மற்றும் சி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், […]
[…] பி6, பொட்டாசியம், தாமிரம், செலினியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற […]
[…] பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் மிக அதிகமாக […]