வால்நட் (அ) அக்ரூட் (அ) வாதுமைப் பருப்பு நன்மைகள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் வால்நட் தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
வால்நட் (அ) அக்ரூட் :
அஃரூட்டின் அறிவியல் பெயர் ஜூக்லன்ஸ் ஆகும். ஆங்கிலத்தில் அக்ரூட், வால்நட் என்றும் தமிழில் வாதுமைப் பருப்பு என்றும் அழைக்கப்படுகிறது..
இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இது ஒமேகா -3 கொழுப்பின் வளமான மூலமாகும். இது சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
வால்நட்டில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் வால்நட்டில் 654 கலோரிகள் உள்ளன. 65 கிராம் கொழுப்பு, 15 கிராம் புரதம் மற்றும் 14 கிராம் மாவு சத்து உள்ளது. மாவு சத்தில் 2.6 கிராம் சர்க்கரை மற்றும் 6.7 கிராம் நார் சத்தும் அடங்கும்.
100 கிராம் வாதுமைப் பருப்பில் 1.3 மி.கி வைட்டமின் சி மற்றும் 0.70 மில்லி கிராம் வைட்டமின் இ உள்ளன.
மேலும் 100 கிராம் அக்ரூட்டில் 2.91 மி.கி இரும்பு சத்து, 98.00 மி.கி கால்சியம் மற்றும் 441 மி.கி பொட்டாசியம் உள்ளது.
வால்நட் நன்மைகள் :
வால்நட் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் அவற்றில் வளர்சிதை மாற்றம் முதல் இதய ஆரோக்கியம் மற்றும் அழகு வரையிலான நன்மைகள் உள்ளன.
வால்நட் நன்மைகள் சிலவற்றைக் கீழே காணலாம்.
எடை குறைப்பு :
ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, வாதுமைப்பருப்பு, வேர்க்கடலை, பிரேசில் கொட்டை, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளை தினமும் உணவில் சேர்த்து கொள்வது ஓய்வின் போது அதிக அளவு ஆற்றல் பயன்பாட்டுடன் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது.
பித்தப்பை ஆரோக்கியம் :
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் மற்றொரு ஆய்வின்படி, அடிக்கடி வாதுமைப்பருப்பு போன்ற கொட்டை வகைகளை உட்கொள்வது பித்தப்பை சம்பந்தமான நோய்கள் அபாயத்தை குறைப்பதாக தெரிவிக்கின்றன.
எலும்பு ஆரோக்கியம் :
வால்நட் பருப்புகள் தாமிரத்தின் சிறந்த மூலமாகும். காப்பர் சத்து குறைபாடு எலும்பு அடர்த்திக் குறைவு மற்றும் ஆஸ்டியோ போரோசிஸ் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
ஆஸ்டியோ போரோசிஸைத் தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தாமிரம் குறைபாட்டின் விளைவுகள் மற்றும் தாமிர சப்ளிமெண்ட்ஸின் நன்மைகள் குறித்து மேலும் பல ஆராய்ச்சி தேவைப்படுகிறது
அஃரூட்டில் அதிக அளவு மாங்கனீசு உள்ளது. மாங்கனீசு கால்சியம் மற்றும் தாமிரம் தாதுக்களுடன் இணைந்து ஆஸ்டியோ போரோசிஸைத் தடுக்கிறது.
வாதுமை பருப்புகளில் உள்ள மற்றொரு கனிமமான மெக்னீசியம், எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுவதால் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிvaaறது.
மூளைக்கு நல்லது :
வாதுமைப் பருப்பில் முக்கியமான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அத்துடன் அதிக அளவு பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மூளை ஆரோக்கியத்திற்கும் செயல் பாட்டிற்கும் உதவுகின்றன.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுவதன் மூலம் மூளையை பாதுகாக்கின்றன.
மேலும் மூளை சமிக்ஞை மற்றும் நியூரோஜெனீசிஸை மேம்படுத்த உதவுகிறது. நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் வாதுபருப்புகளில் உள்ளன.
மனநிலை ஆரோக்கியம் :
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு அவசியம் ஆகும்.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சில மனநிலைக் கோளாறுகளில் நேர் மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சான்றுகள் உள்ளன.
செரிமான ஆரோக்கியம் :
சமீபத்திய விலங்கு ஆய்வில், வாதுமைப் பருப்புகளை உட்கொள்வது குடல் நுண்ணுயிரிகளை வளப் படுத்தலாம் மற்றும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கலாம் என்று தெரிய வந்துள்ளன.
இது மனிதர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கலாம் என்கிற கோணத்தில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதயம் ஆரோக்கியம் :
வாதுமைப் பருப்புகளை உட்கொள்வது இருதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும் என்றும், நமது இரத்தம் மற்றும் நிணநீர் நாளங்களின் உட்புறத்தில் உள்ள எண்டோ டெலியல் செயல்பாட்டிற்கு வாதுமைப்பருப்பு எண்ணெய் அதிக சாதகமான நன்மைகளை அளிக்கிறது என்றும் “The Journal of Nutrition” ஊட்டச்சத்து இதழ் கூறுகிறது.
வாதுமைப் பருப்புகள் கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்தை எவ்வாறு கட்டுப் படுத்துகின்றன என்பது பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் நடத்திய ஆய்வில், வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் கொட்டைகளை உட் கொள்பவர்கள் கரோனரி இதய நோய் அபாயம் 37 சதவிகிதம் வரை குறைவதாக தெரிய வந்துள்ளது.
தாம்பத்திய நலம் :
ஆண்களில் பாலியல் செயல்பாட்டில் தினமும் கொட்டைகளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் விளைவுகளை பகுப்பாய்வு செய்வதற்கான மிகப்பெரிய மருத்துவ சோதனை 2019 இல் ஊட்டச்சத்துகள் இதழில் வெளியிடப்பட்டது.
பங்கேற்பாளர்களுக்கு 14 வரங்களுக்கு மேலாக 50% வாதுமைப்பருப்புகள், 25% பாதாம் மற்றும் 25% ஹேசல்நட் கலந்து தினமும் இரண்டு அவுன்ஸ் சாப்பிட கொடுக்கப்பட்டது.
ஆய்வின் முடிவில் புணர்ச்சி செயல்பாடு மற்றும் பாலியல் ஆசையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டதாக கண்டறியப் பட்டுள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு :
வால் நட் புற்றுநோய் அபாயங்களை எதிர்த்துப் போராட முடியும். அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை.
அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. குறிப்பாக புரோஸ்டேட், மார்பக மற்றும் கணைய புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது.
வளர்சிதை மாற்றம் :
வாதுமைப்பருப்புகள் மந்தமான வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்கத்தை அளிக்கின்றன.
அவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களால் நிரம்பியுள்ளன. மற்றும் செரிமானம், வளர்ச்சி மற்றும் பிற வளர்சிதை மாற்ற செயல் முறைகளை ஊக்க படுத்துக்கின்றன.
தூக்கத்தை தூண்டுகிறது :
வாதுமைப்பருப்பு மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இது தூக்கத்தை தூண்ட உதவும் ஒரு ஹார்மோன். இரவு உணவிற்குப் பிறகு அக்ரூட் சாப்பிடுவது தூக்கத்தை தூண்டுகிறது.
கருவுறுதலை மேம்பாடு :
வாதுமைப்பருப்பு விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன. விந்தனுக்களின் இயக்கம் மற்றும் கருவுறும் தன்மையை அதிகரிக்கின்றன.
தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது :
சுற்றுச்சூழலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. சருமத்தில் வறட்சி மற்றும் சுருக்கங்களை உருவாக்குகின்றன
கர்ப்ப காலத்தில் பயனுள்ளதாக இருக்கிறது :
கருவின் சரியான வளர்ச்சிக்கு, கர்ப்பிணிப் பெண்கள் போதுமான அளவு ஃபோலேட் அதாவது வைட்டமின் பி 9 எடுத்துக்கொள்ள வேண்டும்.
அக்ரூட் பருப்புகளில் பி குழு வைட்டமின் பி நிறைந்துள்ளன மற்றும் ஃபெவின் ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
வால் நட் தீமைகள் :
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல அளவுக்கு அதிகமான வாதுமைப் பருப்புகளை உட்கொள்வதாலும் சில தீமைகள் ஏற்படலாம்.
வாதுமைப் பருப்புகள் கலோரிகளில் அதிக அளவில் உள்ளன எனவே அதிகப்படியான வால்நட் நுகர்வு உடல் எடையை அதிகரிக்கும்.
மேலும் அதிகமாக வாதுமை பருப்பு சாப்பிடுவது வயிற்றுப்போக்கை தூண்டலாம். ஏனெனில் அவற்றில் அதிக அளவு எண்ணெய் அல்லது நார்ச்சத்து உள்ளது