வைட்டமின் கே நிறைந்த உணவுகள் நன்மை தீமைகள்

10

வைட்டமின் கே

வைட்டமின் கே என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். வைட்டமின் K எனும் வைட்டமின் 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளின் இடையே தற்செயலாக கண்டுபிடிக்கப் பட்டது.

வைட்டமின் கே நிறைந்த உணவுகள்

பல்வேறு வகையான விட்டமின் K இருந்தாலும், மனித உணவில் பெரும்பாலும் காணப்படும் இரண்டு  வகை வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் கே 2 ஆகும்.

வைட்டமின் கே1, பில்லோகுயினான் (Phylloquinone) என்றும் அழைக்கப்படுகிறது.

இது பெரும்பாலும் கீரைகள், பச்சை காய்கறிகள் போன்ற தாவர உணவுகளில் காணப்படுகிறது.

இது மனிதர்களால் உட் கொள்ளப்படும் மொத்த வைட்டமின் K இல் 75 முதல் 90 சதவீதம் ஆகும்.

வைட்டமின் கே2 புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் மற்றும் விலங்குப் பொருட்களில் காணப்படுகிறது.

மேலும் குடல் பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மெனாக்வினோன்கள் (MKs) எனப்படும் பல துணை வகைகளைக் கொண்டுள்ளது.

அவை அவற்றின் பக்கச் சங்கிலியின் நீளத்தால் பெயரிடப்படுகின்றன. அவை MK-4 முதல் MK-13 வரை இருக்கும்.

வைட்டமின் கே 1 வைட்டமின் கே 2 வேறுபாடு :

அனைத்து வகையான விட்டமின் கே இன் முக்கிய செயல்பாடு இரத்த உறைதல், இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தில் உதவி புரிவது ஆகும்.

இருந்தாலும் உடல் முழுவதும் கொண்டு செல்லப் படுதல் மற்றும் அனைத்து திசுக்களாலும் உறிஞ்சப் படுதல் போன்ற செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, வைட்டமின் கே1 மற்றும் கே2 ஆகியவற்றின் நன்மைகள் வேறுபடுகின்றன.

பொதுவாக, தாவரங்களில் காணப்படும் வைட்டமின் கே1 உடலால் மோசமாக உறிஞ்சப்படுகிறது.

தாவரங்களில் காணப்படும் வைட்டமின் கே1 இல் 10 சதவீதத்திற்க்கும் குறைவான அளவே உறிஞ்சப்படுவதாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப் படுகிறது.

ஆனால் வைட்டமின் கே2 உறிஞ்சுதல் பற்றி போதுமான தகவல்கள் இல்லை. இருப்பினும், கே2 பெரும்பாலும் கொழுப்பு உள்ள உணவுகளில் காணப்படுவதால், அது கே1  ஐ விட சிறப்பாக உறிஞ்சப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஏனெனில் விட்டமின் கே கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் கொழுப்பு உணவுடன் சாப்பிடும்போது மிகச் சிறப்பாக உறிஞ்சப்படுகின்றன.

மேலும், வைட்டமின் கே2 இன் நீண்ட பக்க சங்கிலி இரத்தத்தில் கே1 ஐ விட நீண்ட நேரம் சுற்ற அனுமதிக்கிறது.

வைட்டமின் கே1 இரத்தத்தில் பல மணிநேரங்கள் தங்கியிருக்கும் போது, ​​கே2 இன் சில வடிவங்கள் இரத்தத்தில் பல நாட்கள் இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் நம்புகின்றனர்.

வைட்டமின் K2 உடலில் நீண்ட நேரம் இருப்பதால் உடல் முழுவதும் அமைந்துள்ள திசுக்களில் சிறப்பாகப் பயன் படுத்தப்படுவதை அனுமதிக்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

வைட்டமின் K1 கல்லீரலுக்கு கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப் படுகிறது.

வைட்டமின் கே குறைபாடு :

பொதுவாக நாம் உண்ணும் பல உணவுகளில் போதுமான அளவு K1 உள்ளதாலும், உடல் தானாகவே K2 ஐ உருவாக்குவதாலும், வைட்டமின் K குறைபாடு பெரியவர்களுக்கு அரிதாகவே காணப்படுகிறது. மேலும் உடல் விட்டமின் K யை மறுசுழற்சி செய்து கொள்கிறது.

இருப்பினும், சில ஆரோக்கிய குறைபாடுகள் மற்றும் சில மருந்துகள் உட்கொள்வதன் காரணமாக விட்டமின் கே உறிஞ்சப் படுதல் மற்றும் உருவாக்கத்தில் குறைபாடு ஏற்படலாம்.  வைட்டமின் கே குறைபாடு குழந்தைகளில் மிகவும் பொதுவானது.

வைட்டமின் கே குறைபாடு காரணம் :

விட்டமின் கே குறைபாடு பொதுவாக வயது வந்தவர்களில் அரிதானது. இருப்பினும் சில கரணங்களினால் தோன்றுகிறது. அவை

  • இரத்தத்தை மெல்லியதாக்கும் மருந்துகள் எடுத்து கொள்வது
  • ஆன்டி பயோட்டிக் என்று சொல்லப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எடுத்து கொள்வது
  • உடல் கொழுப்பை சரியாக உறிஞ்சாத ஒரு நிலை உள்ளது
  • விட்டமின் கே சிறிதும் இல்லாத உணவுகளை தொடர்ந்து உண்ணுதல்.

வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள் :

  • வைட்டமின் கே குறைவினால் ஏற்படும் நோய் இரத்த உரைதல் தாமதப் படுதல்
  • காயங்களில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகும்.
  • நகங்களுக்கு அடியில் சிறிய அளவிலான இரத்தக் கட்டிகள் தோன்றுதல்
  • கருமை நிறத்தில் மலம் வெளியேறுதலும் ஒரு அறிகுறியாக சொல்லப்படுகிறது.

வைட்டமின் கே பயன்கள் :

வைட்டமின் கே  இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் காயங்கள் மற்றும் பிற காரணங்களால் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

இரத்த உறைதலின் போது இரத்த புரதங்களை உற்பத்தி செய்ய உடலுக்கு விட்டமின் கே தேவைப்படுகிறது.

எலும்பு ஆரோக்கியம் :

விட்டமின் கே எலும்புகள் வளரவும் ஆரோக்கியமாக இருக்கவும் அவசியம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதய நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது :

2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் விட்டமின் கே குறைவாக உண்பவர்களுக்கு கரோனரி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிய வந்துள்ளது.

ஒருவேளை இதயத்திற்கு செல்லும் இரத்த விறைப்பாகவும் குறுகலாகவும் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

மேலும் “விட்டமின் கே அதிகம் உள்ள உணவுகளை சரியான அளவில் உட்கொள்பவர்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

கீழ் வாதம் வரும் வாய்ப்பை குறைக்கிறது :

விட்டமின் கே உணவுகளை அதிகமாக உண்பவர்களுக்கு எலும்புகள் வலுவாக இருப்பதாகவும், இடுப்பு எலும்பு முறிவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

உலகின் சில பகுதிகளில், ஆஸ்டியோ போரோசிஸ் சிகிச்சையாக விட்டமின் கே பரிந்துரைக்கப் படுகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம் பாதுகாப்பு : 

விட்டமின் கே நோயெதிர்ப்பு மண்டலத்தையும் செரிமான அமைப்பையும் பாதுகாக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக மாற்றவும் வைட்டமின் K அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

இரத்த சர்க்கரையை சீராக்குகிறது :

கணையம் உடலில் இன்சுலினை உற்பத்தி செய்கிறது மற்றும் அவற்றில் அதிக அளவு வைட்டமின் K உள்ளது.

கணையத்தின் சரியான செயல்பாட்டிற்கு  வைட்டமின் K அவசியம் ஆகும்.

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதை ஒழுங்குபடுத்துகிறது.

எனவே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வைட்டமின் K இன்றியமையாதது என்று கூறலாம்.

சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்கிறது :

வைட்டமின் K சிறுநீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடலில் இருந்து கரையக்கூடிய நச்சுகளை அகற்றுகிறது.

போதுமான அளவு சிறுநீர் வெளியேறவில்லை என்றால் உடலில் குறைந்த அளவு விட்டமின் K உள்ளதா என்பதை நீங்களே பரிசோதித்துக்கொள்வது நல்லது.

புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது :

பெருங்குடல், புரோஸ்டேட், வயிறு, மூக்கு மற்றும் வாய் புற்றுநோய்களைத் தடுப்பதில் விட்டமின் K பயனுள்ளதாக இருக்கும் என்பது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆய்வின்படி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த விட்டமின் K பயனுள்ளதாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

கல்லீரல் பாதுகாப்பு :

மஞ்சள் காமாலை , ஊட்டச் சத்துக்களை மோசமாக உறிஞ்சுதல் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது ஆஸ்பிரின்  போன்றவற்றை நீண்டகாலமாகப் பயன்படுத்துவதால் கல்லீரலில் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க உதவுகிறது.

மேலும் வைட்டமின் K குறைபாட்டால் சிலருக்கு இரைப்பை குடல் பிரச்சனைகளில் ஸ்ப்ரூ, தடைகள், பெருங்குடல் அழற்சி மற்றும் க்ரோன் நோய் போன்ற கோளாறுகளும் ஏற்படுகின்றன.

மாதவிடாய் வலியைக் குறைக்கிறது : 

விட்டமின் K ஹார்மோன்களின் ஒழுங்குமுறையை சீராக்குகிறது. மேலும் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது.

அதிக மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்கள் வைட்டமின் K குறைபாடு உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு நல்லது :

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப் படியான இரத்த போக்கிற்கு பல காரணங்கள் இருந்தாலும், விட்டமின் கே குறைபாடும் அவற்றில் ஒன்றாகும்.

விட்டமின் கே உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்த போக்கை குறைக்கலாம்.

வைட்டமின் கே நிறைந்த உணவுகள் :

வைட்டமின் கே உள்ள உணவுகள் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது

பரட்டை கீரை சமைத்தது :

அரை கப் : 531 மை. கி (தினசரி தேவையில் 443% )

100 கிராம் : 817 மை. கி (தினசரி தேவையில் 681% )

கடுகு கீரைகள் (சமைத்தது) :

அரை கப் : 415 மை. கி (தினசரி தேவையில்346%)

100 கிராம் : 593 மை. கி (தினசரி தேவையில் 494% )

சீமை பரட்டை கீரை (சமைத்தது)   :

அரை கப் : 386 (மை. கி தினசரி தேவையில் 322%)

100 கிராம் : 407 மை. கி (தினசரி தேவையில் 339% )

பீட்ரூட் கீரை (சமைத்தது)   

அரை கப் : 349 (மை. கி தினசரி தேவையில் 290%)1

00 கிராம் : 484 (மை. கி தினசரி தேவையில் 403% )

பசலி கீரை (பச்சை)   :

1 கப் : 145 மை. கி (தினசரி தேவையில்121% )

100 கிராம் : 483 மை. கி (தினசரி தேவையில் 402% )

ப்ரோக்கோலி (சமைத்தது) 

அரை கப் : 110 மை. கி (தினசரி தேவையில் 92%)

100 கிராம் : 141 மை. கி (தினசரி தேவையில் 118% )

முட்டைக் கோஸ் (சமைத்தது)

அரை கப் : 82 மை. கி (தினசரி தேவையில் 68% )

100 கிராம் : 109 மை. கி (தினசரி தேவையில் 91% )

மாட்டிறைச்சி கல்லீரல்  :

1 துண்டு : 72 மை. கி (தினசரி தேவையில் 60% )

100 கிராம் : 106 மை. கி (தினசரி தேவையில் 88%)

கோழி இறைச்சி

3 அவுன்ஸ் : 51 மை. கி (தினசரி தேவையில் 43% )1

100 கிராம் : 60 மை. கி (தினசரி தேவையில் 50% )

10 COMMENTS

  1. […] ஹேசல் நட் 100 கிராமில் 20 ஐயூ வைட்டமின் ஏ, 6.3 மி.கி வைட்டமின் சி, 15.03 கிராம் வைட்டமின் இ, மற்றும் 14.2 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது. […]

  2. […] 100 கிராம் மல்பெர்ரி பழத்தில் 36.4 மில்லி கிராம் வைட்டமின் சி 0.87 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 7.8 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது. […]