வைட்டமின் ஏ நன்மைகள், பயன்கள், குறைபாடு, குறைபாட்டு அறிகுறிகள் தினசரி தேமற் றும் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் ஏ :
வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின் ஆகும். இதில் ரெட்டினல் மற்றும் ரெட்டினைல் எஸ்டர்கள் அடங்கும்.
விட்டமின் A நோயெதிர்ப்பு செயல்பாடு, பார்வை ஆரோக்கியம், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் செல்லுலார் தொடர்பு ஆகியவற்றிற்கு அவசியம் ஆகும்
வைட்டமின் ஏ வகைகள் :
விட்டமின் ஏ இரண்டு வடிவங்களில் உணவில் மூலம் கிடைக்கின்றன. அவை வைட்டமின் A (ரெட்டினோல் மற்றும் அதன் எஸ்டெரிஃபைட் வடிவம், ரெட்டினைல் எஸ்டர்) மற்றும் புரோவிட்டமின் ஏ கரோட்டினாய்டுகள் ஆகும்.
பால் பொருட்கள், மீன் மற்றும் இறைச்சி (குறிப்பாக கல்லீரல்) உள்ளிட்ட அசைவ உணவுகளில் வைட்டமின் A காணப்படுகிறது. புரோவிட்டமின் ஏ கரோட்டினாய்டுகள் உடலில் விட்டமின் A வாக மாற்றப்படுகிறது.
புரோ விட்டமின் A கரோட்டினாய்டுகளில் பீட்டா கரோட்டின், ஆல்பா-கரோட்டின், மற்றும் பீட்டா-கிரிப்டோக்சாந்தின் என மூன்று வகைகள் காணப்படுகின்றன.
மேலும் உணவில் காணப்படும் மற்ற கரோட்டினாய்டுகளான லைகோபீன், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்றவை வைட்டமின் எ ஆக மாற்றப்படுவதில்லை.
வைட்டமின் ஏ தினசரி தேவை :
தினசரி தேவையாக வைட்டமின் ஏ பரிந்துரைக்கப் பட்ட அளவு ஆண்களுக்கு 900 மற்றும் பெண்களுக்கு 700 மைக்ரோகிராம் ஆகும்.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் குறைந்தது 770 மைக்ரோகிராம் விட்டமின் ஏ உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் ஏ குறைபாடு :
வைட்டமின் A அன்றாட உணவுகள் மூலம் கிடைப்பதால் வைட்டமின் எ குறைபாடு அரிதானதாகும.
இருந்தாலும் வைட்டமின் A அறவே இல்லாத உணவுகளை மட்டும் தொடர்ந்து உண்ணுதல் விட்டமின் ஏ குறைபாட்டை ஏற்படுத்தலாம்.
வைட்டமின் ஏ குறைபாடு நோய்கள் வரிசையில் உலகளவில் மாலைக்கன் நோய் மற்றும் குருட்டு தன்மையும் அடங்கும்.
வைட்டமின் A குறைபாடு, தட்டம்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த் தொற்றுகளின் அபாயத்தையும் இறக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
வைட்டமின் A தீவிர குறைபாடு கர்ப்பிணிப் பெண்களில் இரத்த சோகை மற்றும் கரு வளர்ச்சியில் எதிர்மறையாக பாதிக்கிறது.
வைட்டமின் ஏ நன்மைகள் :
விட்டமின் ஏ உள்ள உணவுகளை சாப்பிடுவது நீரிழிவு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
செல்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் இந்த நோய்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை செல்களில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
பார்வை திறன் :
வைட்டமின் A இன் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று பார்வை திறனை மேம்படுத்துவது ஆகும்.
இரவு குருட்டுத்தன்மை அதாவது மாலை கண் நோயைத் தடுக்க உதவுகிறது.
எனவே உணவில் போதுமான அளவு வைட்டமின் A சேர்ப்பது வயது மூப்பால் ஏற்படும் பார்வை தொடர்பான குறைபாடுகளை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு திறன் :
பல வகையான நோய்களின் பரவலை மற்றும் தாக்கத்தை எதிர்த்துப் போராட வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு தேவைப்படுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவை அதிகரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே விட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
முகப்பருவை தடுக்கிறது :
வைட்டமின் எ செல்களின் உள்ளே நடைபெறும் செயல்பாட்டின் செயல்முறைகள் மற்றும் உடலில் உள்ள அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் முக்கியமானது.
முகப்பரு மிகவும் பொதுவான தோல் பிரச்சனைகளில் ஒன்றாகும். விட்டமின் A குறைபாடும் முகப்பருவுக்கு ஒரு காரணம் என்று சில ஆய்வுகள் தெரிய வந்துள்ளன.
எனவே சில முகப்பரு மருந்துகளிலும் விட்டமின் ஏ சேர்க்கப் படுகின்றன.
எலும்பு ஆரோக்கியம் :
விட்டமின் ஏ எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.
உடலில் போதுமான அளவு வைட்டமின் எ இருந்தால் வயது தொடர்பான பெரும்பாலான எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
மேலும் தசை மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியிலும் விட்டமின் ஏ இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சிவப்பு இரத்த அணுக்கள் :
விட்டமின் ஏ, ஸ்டெம் செல்களிலிருந்து அதிக அளவில் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக ஊக்குவிக்கிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்க இந்த செல்களை தொடர்ந்து உற்பத்தி செய்ய வேண்டும்.
இரும்பு சத்து உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் கனிமமாகும். இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களில் முக்கியம் அம்சம் ஆகும்.
புற்றுநோய் அபாயம் :
விட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுவதன் மூலம் புற்று நோயைக் கட்டுப்படுத்துகிறது.
இனப் பெருக்க ஆரோக்கியம் :
விட்டமின் A ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கரு வளர்ச்சியை செயல்படுத்துகிறது.
கருவில் இருக்கும் குழந்தையின் எலும்புக்கூடு, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கணையம், கண்கள் மற்றும் நரம்பு மண்டலம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் மற்றும் வளர்ச்சியிலும் விட்டமின் ஏ இன்றியமையாதது.
இளமையோடு வைத்திருக்கிறது :
விட்டமின் ஏ ஃப்ரீ ரேடிக்கல்களினால் தோல் செல்களில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும் சரும செல்களை புதுப்பிக்கவும் உதவுகின்றன.
வைட்டமின் ஏ வகையான ரெட்டினாய்டுகள் சுருக்கங்களைத் தடுக்கின்றன. மேலும் கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் ஒரு நபர் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் :
வைட்டமின் ஏ உள்ள பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை பற்றி பார்க்கலாம்.
மாட்டிறைச்சி கல்லீரல் :
- 1 துண்டு : 6,421 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 713%)
- 100 கிராம் : 9,442 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 1,049% )
காட் லிவர் ஆயில் :
- 1 தேக்கரண்டி : 1,350 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 150% )
- 100 கிராம் : 30,000 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 3,333% )
சால்மன் மீன் :
- அரை ஃபில்லட் : 229 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 25%)
- 100 கிராம் : 149 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 17%)
வெண்ணெய் :
- 1 தேக்கரண்டி : 97 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 11% )
- 100 கிராம் : 684 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 76% )
நன்றாக வேகவைத்த முட்டை :
- 1 பெரிய முட்டை : 74 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 8% )
- 100 கிராம் : 149 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 17%)
சர்க்கரை வள்ளி கிழங்கு :
- 1 கப் : 1,836 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 204% )
- 100 கிராம் : 1,043 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 116% )
கேரட் (சமைத்தது) :
- வைட்டமின் ஏ உள்ள காய்கறிகள் பட்டியலில் கேரட் முக்கியமான இடத்தில் உள்ளது.
- ஒரு நடுத்தர அளவு கேரட் : 392 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 44%)
- 100 கிராம் : 852 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 95% )
இனிப்பு சிவப்பு மிளகாய் (பச்சையாக) :
- 1 பெரிய மிளகாய் : 257 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 29% )
- 100 கிராம் : 157 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 17% )
கீரை (பச்சையாக) :
- 1 கப் கீரை : 141 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 16% )
- 100 கிராம் : 469 மைக்ரோ கிராம் (தினசரி தேவையில் 52% )
[…] நட் 100 கிராமில் 20 ஐயூ வைட்டமின் ஏ, 6.3 மி.கி வைட்டமின் சி, 15.03 கிராம் […]
[…] கிராம் திராட்சை பழத்தில் 345 IU வைட்டமின் ஏ, 39.5 மில்லி கிராம் வைட்டமின் சி […]
[…] கிராம் பலாப் பழத்தில் வைட்டமின் A 110 IU, வைட்டமின் சி 13.7 மில்லி கிராமும் […]
[…] கிராம் அன்னாசிப் பழத்தில் வைட்டமின் ஏ 54 ug, வைட்டமின் சி 47.8 மில்லிகிராமும், […]
[…] கிராம் கிவி பழத்தில் 4 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ, 92.7 மில்லி கிராம் வைட்டமின் சி […]
[…] உள்ள லைகோபீன் மற்ற ஆக்ஸிஜனேற்றிகளான வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி […]
[…] C, வைட்டமின் A, வைட்டமின் E, வைட்டமின் பி6, வைட்டமின் K, […]
[…] சி உள்ளது. இதில் கனிசமான அளவு வைட்டமின் ஏ […]