வேர்க்கடலை நன்மைகள், வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் மற்றும் வேர்க்கடலை தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.
வேர்க்கடலை :
கண்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதற்கு பதிலாக அதிகம் சத்துக்கள் நிறைந்த பாதாம், வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவமும் பரிந்துரை செய்கின்றது.
பாதாம், முந்திரி, வால்நட்ஸ் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த நட்ஸ் வகைகளின் விலை அதிகம்.
மாத சம்பளம் வாங்கும் சராசரி மக்களால் தினமும் இவைகளை வாங்கி சாப்பிடுவது என்பது கடினமான விஷயம்.
வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் :
விலை உயர்ந்த பாதாம், வால்நட்ஸ் மற்றும் முந்திரியை விட, இரு மடங்கு சத்துக்கள் வேர்க்கடலையில் இருக்கின்றது. அவை
வைட்டமின்கள் :
நிலக்கடலையில் விட்டமின் பி3 அதாவது நியாசின், பீ 9 எனப்படும் ஃபோலேட்டுகள், பி1 எனப்படும் தையாமின், வைட்டமின் இ ஆகியவை அதிக அளவிலும், விட்டமின் பி2 எனப்படும் ரிபோப்லோவின், பி5 எனப்படும் பான்டோதெனிக் அமிலம், பி6 எனப்படும் பைரி டாக்சின் காணப்படுகின்றன.
தாதுச் சத்துக்கள் :
மேலும், இதில் தாது உப்புக்களான செம்புச் சத்து, இரும்புச் சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவிலும் செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் காணப் படுகின்றன.
இதில் அதிக அளவு புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவையும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன.
தினமும் 25 கிராம் வேர்க்கடலை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பல ஊட்ட சத்துக்களை பெறலாம்.
வேர்க்கடலை நன்மைகள் :
விலை உயர்ந்த உணவு பொருள்களை விட வேர்க்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வேர்க்கடலை நன்மைகள் அதிலுள்ள ஊட்ட சத்துக்கள் காரணமாக கிடைக்கின்றன.
வேர்க்கடலை நன்மைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியமாக :
நிலக்கடலையில் காணப்படும் வைட்டமின் இ, நியாசின், போலேடுக்கள், புரதங்கள், மாங்கனிஸ் போன்றவை இதய நலத்தை மேம்படுத்துகின்றன.
இதில் நிறைவுறா கொழுப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இவை இதய நலத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நினைவாற்றல்:
வேர்கடலையிலுள்ள பி விட்டமின் நியாசின் மூளையின் நினைவாற்றலை அதிகரித்து மூளையை சிறப்பாக செயல்படவும் தூண்டுகிறது.
மேலும் இதில் உள்ள ரெஸ்வேரட்ரால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நினைவாற்றல் அதிகரிக்க காரணமாகிறது.
மேலும் வேர்க் கடலையை சாப்பிடும்போது பார்கின்சன், அல்சைமர் நோய் பாதிப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கின்றன.
உடல் எடை குறைய :
வேர்க்கடலையில் புரதச் சத்து, நார்ச்சத்து, கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது.
இதனை சாப்பிடு பொழுது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படுவதில்லை.
அதே நேரத்தில் இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. எனவே இதனை சாப்பிட்டு ஆரோக்கியமான உடல் எடை இழப்பினை பெறலாம்.
கர்ப்பிணிகளுக்கு நல்லது :
வேர்க்கடலையில் காணப்படும் போலேட்டுகள், கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்தாகும்.
போலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தையானது குறைபாடுகள் இல்லாம ஆரோக்கியமாக இருக்க அவசியமான ஒன்று.
குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது :
வேர்க்கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது.
வேர்க்கடலையில் உள்ள பீட்டா கோமரிக் அமிலமானது குடலில் நச்சுப் பொருட்கள் உருவாவதை தடை செய்து, குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்கின்றது.
வாரம் இரண்டு முறை வேர்க் கடலையை சாப்பிடுவதால் இருபத்தி ஐந்து முதல் ஐம்பத்தி எட்டு சதவீதம் வரை புற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது :
வேர்க் கடலையில் உள்ள சர்க்கரை அளவு இரத்தத்தில் மிகக்குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.
மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் தாதுப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோன் அளவை துரிதப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது.
ஆகவே சர்க்கரை நோயாளிகள் தினமும் இருபத்தி ஐந்து கிராம் அளவிற்கு வேர்க் கடலையை சாப்பிடலாம்.
முடி உதிர்வை குறைகிறது :
முடி உதிர்தல் பொதுவாக, ஊட்டச்சத்து குறைவு, மற்றும் உடலில் சுரக்கின்ற ஹார்மோன்களின் சீரற்ற தன்மை போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது.
வேர்க்கடலையில் வைட்டமின் பி சத்து வகையைச் சேர்ந்த பயோட்டின் எனப்படும் வேதிப்பொருள் உள்ளது.
இது தலைமுடியின் ஆரோக்கியத்தை காப்பதோடு அதிக அளவில் முடி உதிர்வதை தடுக்கின்றது. முடி உதிர்ந்த இடங்களிலும் மீண்டும் முடி வளரச் செய்ய தூண்டுகோலாகவும் செயல்படுகின்றது.
பித்தநீர் கட்டி உருவாவதை தடுக்கிறது :
வேர்க் கடலையினை உண்ணும் பொழுது, அதிலுள்ள நிறைவுறா கொழுப்புகள், உடலில் கொழுப்பு சேர்வதை தடை செய்வதன் மூலம் பித்தநீர் கட்டி உருவாக்கம் தடுக்கப் படுகிறது.
மேலும், இதில் காணப்படும் செம்புச் சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவைகள், ஆரோக்கியத்தை மேம் படுத்துகிறது.
வேர்க்கடலை தீமைகள் :
வேர்க்கடலை பயன்கள் மற்றும் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும் சில பக்க விளைவுகளும் உள்ளன. சில வேர்க்கடலை தீமைகள் பின்வருமாறு
இதயநோய்க்கான ஆபத்து :
வேர்க்கடலையில் உள்ள பெரும்பாலான கொழுப்பு ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானது என்றாலும், வேர்க் கடலையில் சில நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளன.
இது காலப்போக்கில் அதிகமாக உட்கொள்ளும்போது இதயப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்க வாய்ப்புகள் உள்ளன.
ஆன்டி நியூட்ரிண்ட்ஸ் :
வேர்க் கடலையில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது, இது துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற மற்ற தாதுக்களை உடலால் உறிஞ்சப் படுவதை கட்டுப்படுத்துகிறது.
எடை அதிகரிப்பு:
வேர்க்கடலையில் கலோரிகள் அதிக அளவில் உள்ளது. எனவே அதிக அளவில் உண்பது எடை அதிகரிப்புக்கும் பங்களிக்கும்.
செரிமான பிரச்சனைகள்:
வேர்க்கடலையில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அதிக அளவில் உண்பது வயிற்று உப்புசம் அல்லது வாயு போன்ற செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
ஒவ்வாமை எதிர்வினைகள் :
மேலும் வேர்க்கடலையின் மிகப்பெரிய பக்க விளைவு என்னவென்றால், அவை சிலருக்கு கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை ஆகும். வாந்தி, தலை சுத்தல் போன்ற ஒவ்வாமை எதிர் வினை சிலருக்கு ஏற்படலாம்.