வேப்பிலை நன்மைகள் மற்றும் தீமைகள்

0

வேப்பிலை நன்மைகள், மருத்துவ பயன்கள் மற்றும் வேப்பிலை தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

வேப்பிலை

வேப்பிலை என்பது இந்தியா முழுவதும் அதிகமாகக் காணப்படும் வேப்ப மரத்தின் இலைகளாகும்.

வேப்பிலை

அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் காரணமாக சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதில் பயன்படுத்தப் படுகின்றன.

வேப்பிலை நன்மைகள் :

வேப்ப இலைகளில் நிம்பின், நிம்போலைடு, நிமண்டியல் போன்ற 130க்கும் மேற்பட்ட உயிரியல் ரீதியாக செயல்படும் தாவர சேர்மங்கள் உள்ளன.

அவை தோல் மற்றும் ஈறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், இரத்தத்தை பெருக்கவும், சுத்திகரிக்கவும், முகப்பருவைப் போக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன.

வேப்பிலை நன்மைகள் பின்வருமாறு

இரும்புச் சத்து நிறைந்துள்ளது

உடலில் இரத்தம் உற்பத்திக்கு மிகவும் அவசியமான ஊட்டச் சத்துக்களில் இரும்புச் சத்து முக்கியமானதாகும்.பொதுவாக கீரை வகைகளில் கனிசமான அளவு இரும்புச் சத்து உள்ளது. ஒரு கப் வேப்பிலையில் தினசரி இரும்புத் தேவையில் 28.47% உள்ளது.

எலும்புகளுக்கு நல்லது

வேப்பிலையில் எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியம் மற்றும் வலிமைக்கு அவசியமான கால்சியமும் கனிசமான அளவில் உள்ளது. வேப்ப எண்ணெயைக் கொண்டு மூட்டுகளில் மசாஜ் செய்வது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைப் போக்க உதவுகிறது.

ஆன்டிஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளது

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வேப்பிலையில் குவெர்செடின் மற்றும் நிம்போலைடு என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. செல் சேதம் நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் போன்ற பிற உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து மென்று சாப்பிடுவது தீவிர வைரஸ் மற்றும் தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இரத்த சர்க்கரையை சீராக்குகிறது

வேப்பிலையில் கஷாயம் செய்து தினமும் உட்கொண்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகும். ஒரு ஆய்வில், வேப்ப இலை சாறு மற்றும் வேப்பெண்ணெய் இரத்தச் சர்க்கரை அளவுகளை குறைப்பதாக தெரிய வந்துள்ளது.(10) (11). மேலும் இது நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது தாமதப்படுத்தவும் உதவியாக இருக்கும்.

பாக்டீரியா எதிர்ப்பு

வேப்பிலை பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது குடலில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும், பூஞ்சகளையும் அழித்து குடலை சுத்தப்படுத்துகிறது.

சரும பளபளப்பு

வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் தடவி வர வடுக்கள், மருக்கல் மற்றும் கருமையை நீக்கி சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது :

வேப்பிலையின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வேப்பிலையை வேகவைத்த நீர் கொண்டு தலைமுடியைக் கழுவிவர பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.

நச்சுக்களை நீக்குகிறது

பல்லாயிரம் ஆண்டுகளாக வேப்ப இலைகள் அதன் சுத்திகரிகுக் பண்புகளுக்காக பயன்படுத்தப் படுகிறது.

பண்புகள். வேப்பிலை சாறு குடிப்பது குடலில் உள்ள கிருமிகளை அழித்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

வேப்பிலை தீமைகள்

வேப்பிலை பொதுவாக பாதுகாப்பானது என்றாலும் அதிக அளவில் உண்பது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துக்கின்றன. வேப்பிலை தீமைகள் பின்வருமாறு

பல்வேறு ஆய்வுகளில் வேப்பிலை தொடர்ந்து உண்பது அல்லது வேப்பிலைச் சாறு தொடர்ந்து குடிப்பது கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே, கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் வேப்பிலை எடுத்துக் கொள்வதற்கு முன் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமாக தொடர்ந்து வாய் வழியாக எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.