வெண் பூசணி
வெண் பூசணி அறிவியல் பெயர் பெனின்கசா ஹிஸ்பிடா (Benincasa hispida)ஆகும்.
இது ஆங்கிலத்தில் அஷ் கார்டு, விண்டர் கார்டு, வைட் பம்ப்கின், வேக்ஸ் கார்டு மட்டும் சைனீஸ் வாட்டர்மெலான் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இதன் பூர்வீகம் தெற்காசிய நாடுகள் ஆகும். பூசணி பல நிறங்கள் மற்றும் வகைகளில் காணப்படுகின்றன.
வெண் பூசணி நன்மைகள் :
வெண் பூசனியின் நன்மைகளைப் பெற கூட்டு, சாம்பார், பச்சடி போன்ற உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.
வெண் பூசணி நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
உடல் எடை :
வெண் பூசணிக்காய் ஊட்ட சத்துக்கள் நிறைந்திருந்தாலும் பூஜ்ய கொழுப்பு மற்றும் குறைந்த கலோரிகள் காரணமாக உடல் எடை குறைக்க விரும்புவோரின் சிறந்த காய்கறி தேர்வாகும்.
மனச் சோர்வைப் போக்குகிறது :
பொதுவாக டிரிப்டோபனின் குறைபாடு மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது.
வெண்பூசணியில் எல்-டிரிப்டோபான் கனிசமான அளவு நிறைந்துள்ளது. இது உடலால் உற்பத்தி செய்ய முடியாத ஒரு அத்தியாவசிய அமினோ அமிலம் ஆகும். (2), (3).
இந்தச் சேர்மம் மனச்சோர்வைப் போக்கி மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது.
கண்களுக்கு நல்லது :
வெண் பூசணியில் கண் ஆரோக்கித்திற்கு அவசியமான ஆக்சிஜனேற்றிகளான வைட்டமின் ஏ, லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின், கனிசமான அளவு உள்ளது.
அவை கண்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாத்து, கண்புரை, மாகுலர் சிதைவு மற்றும் ஆஸ்டிஜிமாடிசம் எனும் கண் குறைபாடு (4), (5) உருவாவதைத் தடுப்பதில் உதவுகிறது.
கொழுப்பைக் கட்டுப் படுத்துகிறது :
வெள்ளை பூசணியில் கனிசமான அளவு பைட்டோஸ்டெரால்கள் எனும் சேர்மம் உள்ளது. அவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த (1) உதவுவதாக சொல்லப்படுகிறது
ஆஸ்துமாவில் நன்மை பயக்கும்:
வெள்ளை பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சுவாச மண்டலத்தை தொற்று மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. இதன் மூலம் ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைத்து குணப்படுத்துகின்றன (7).
அல்சருக்கு நல்லது :
வெண் பூசணியில் உள்ள மருத்துவக் குணங்கள் செரிமான அமைப்பு மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவதில் உதவுகிறது.(8).
நோய் எதிர்ப்பு சக்தி :
வெள்ளை பூசணிக்காயில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்திறனை அதிகரித்து பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உடலை தயார் செய்கிறது.
உடல் சூடு :
வெள்ளை பூசணிக்காய் 90 சதவீதம் நீர்ச் சத்தைக் கொண்டுள்ளது. எனவே வெண் பூசணி சாப்பிடுவது உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது.
முடி வளர்ச்சி :
வெள்ளை பூசணிக்காயில் தலை முடி ஆரோக்கித்திற்கு நன்மை பயக்கும் பல ஊட்ட சத்துக்கள் உள்ளன.
இதில் உள்ள வைட்டமின் ஏ உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை துரிதப் படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் முடியின் மறு வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது.
சருமம் :
வெள்ளை பூசணிக்காயில், வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கனிசமான அளவில் உள்ளன.
இதில் உள்ளது வைட்டமின் ஏ சருமத்தை மென்மையாக்குகிறது. வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது.
முகப்பரு :
வெண் பூசணிக்காயில் வைட்டமின்கள் ஈ மற்றும் வைட்டமின் டி அல்லது டோலுய்டின் உள்ளது. இவை முகப்பருக்களுக்கு எதிராக செயல் படும் தன்மையுடையன. எனவே வெள்ளை பூசணி பல முகப்பரு மருந்து தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளைப் பூசணியின் சதைப் பற்றுள்ள பகுதியை முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகப்பருவிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வெண்பூசணி தீமைகள் :
வெண்பூசணி என்பது பொதுவாக எந்த பாதகமான பக்க விளைவுகள் மற்றும் தீமைகளை ஏற்படுத்தாத காய்கறி வகைகளுள் ஒன்றாகும்.இருப்பினும்,
ஏதேனும் ஒவ்வாமை போன்ற எதிர்வினைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
ஏதேனும் பரிந்துரைக்கப் பட்ட மருந்து எடுத்துக் கொல்பவர்களுக்கு வெண் பூசணி பாத்துக்காபனதா என்பது பற்றி தகவல்கள் இல்லை. அப்படிப்பட்டவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.