அதிசய சத்துக்கள் நிறைந்த வெண்ணெய் பழம் (அவகாடோ)

0

அவகோடா பழம் (அ) வெண்ணெய் பழம் நன்மைகள், பயன்கள் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் வெண்ணெய் பழம் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

அவகேடோ பழம் :

அவகோடா பழம் தமிழில் வெண்ணெய் பழம் என்றும் ஆங்கிலத்தில் பட்டர் ப்ரூட்  என்றும் தெலுங்கில் வெண்ணா பாண்டு என்றும் கன்னடத்தில் பென்னே ஹன்னு என்றும் ஹிந்தியில் மகன்பால் என்றும் மராத்தியில் அல்புகட் என்றும் அழைக்கப்படுகிறது.

வெண்ணெய் பழம்

இதன் அறிவியல் பெயர் பெர்சியானா அமெரிக்கான ஆகும்.

இது மற்ற பழங்களைப் போல இனிப்பு சுவை உடையதாக இல்லை என்றாலும் இது பழத்திற்கான வரையறையைக் கொண்டுள்ளது.

அவகோடா பழத்தில் உள்ள சத்துக்கள் :

அவகோடா பழம் 100 கிராமில் 160 கலோரிகள் உள்ளது. வெண்ணெய் பழத்தில் சுமார் 73% நீர், 15% கொழுப்பு, 8.5%  மாவு சத்து உள்ளது. பெரும்பாலும் நார்ச்சத்து மற்றும் 2% புரதம் உள்ளது.

வெண்ணெய் பழத்தில் உள்ள மாவுசத்தில் (79%) ஃபைபர் உள்ளது. அதாவது 100 கிராம் வெண்ணெய் பழத்தில் 6.7 கிராம் நார் சத்து உள்ளது.

இது தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட அளவில் 24% ஆகும்.

வெண்ணெய் பழத்தில் உள்ள விட்டமின்கள்

அவகோடோ பழம் பயன்கள் :

வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ பழம் நன்மைகள் மற்றும் பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொழுப்பை கட்டுப் படுத்துகிறது :

கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்துகிறது. வெண்ணெய் பழம் சாப்பிடுவது சிலருக்கு கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துவதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன.

குறிப்பாக, அவகோடா பழம் சாப்பிடுபவர்களுக்கு அதிக அளவு HDL கொலஸ்ட்ரால் இருப்பதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது .

அதிக அளவு HDL கொலஸ்ட்ரால் இருதய நோய் அபாயத்த்தை குறைக்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது :

அவகோடோ பழங்களில் கார்போ ஹைட்ரேட்டுகள் இருந்தாலும், அவற்றின் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பீடு 15 க்கும் குறைவாக இருப்பதால் அவை இரத்த சர்க்கரையில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கிளைசெமிக் இன்டெக்ஸ் 1 முதல் 100 வரையிலான அளவாகும். அதிக எண்ணிக்கையில் உள்ள கிளைசெமிக் குறியீடு உணவுகள் இரத்த சர்க்கரையை வேகமாக உயர்த்துகிறது.

நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த, அவகேடோ பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாகும்.

குறிப்பாக அதிக கிளைசெமிக் உணவுகளை தவிர்க்கும் போது வகை 2 நீரிழிவு நோயாளிகளிடையே வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப் படுகிறது.

புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது :

அவாகேடா பழத்தில் உள்ள ஃபோலேட்,  புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறபழங்களில் உள்ள சத்துக்களும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் : 

அவகேடோ பழங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சாறுகள் பற்றிய ஆய்வுகள், அவை கீல்வாதம் அறிகுறிகளைக் குறைக்கும் என்பதைக் காட்டுகின்றன.

அவகேடோ பழத்தில் உள்ள வைட்டமின் கே எலும்பு இழப்பைக் குறைத்து ஆஸ்டியோ போரோசிஸைத் தடுப்பதன் மூலம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது :

பி குரூப் வைட்டமின் ஆன ஃபோலேட் பற்றாக் குறை மன அழுத்தம் மற்றும் மன சோர்வுக்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டீன் என்ற பொருள் உருவாக்குவதை தடுக்க உதவுகிறது.

ஹோமோசிஸ்டீன் உங்கள் மூளைக்கு ஊட்டச் சத்துக்களின் ஓட்டத்தை குறைத்து மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.

அவகோடாவில் உள்ள அதிக அளவு ஃபோலேட் மனச்சோர்வு அறிகுறிகளைத் தடுக்க உதவும்.

வீக்கத்தை குறைக்கிறது :

நாள்பட்ட அழற்சி நீரிழிவு, அல்சைமர் நோய் மற்றும் கீல்வாதம் உள்ளிட்ட பல நோய்களைத் தூண்டுகிறது. அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.

செரிமான ஆரோக்கியம் :

அவாகேடா பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் கழிவுகளை நீக்க உதவுகிறது. நார் சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது :

அவாகேடோ பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இரத்தத்தில் சோடியம் அளவைக் குறைத்து இரத்த நாளச் சுவர்களில் பதற்றத்தைத் தணிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை சமன் செய்ய பொட்டாசியம் உதவுகிறது.

பார்வை ஆரோக்கியம் :

அவாகேடோ பழத்தில் உள்ள லுடீன் மற்றும் ஜீஆக்ஸாந்தின் என்ற இரண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண்களுக்கு மிகவும் நல்லதாகும்.

அவை கண்களில் உள்ள திசுக்களை புற ஊதா ஒளி சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு இரண்டையும் தடுக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் சிறந்த உணவு :

குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மைக்ரோகிராம் ஃபோலேட் தேவைப்படுகிறது.

ஒரு வெண்ணெய்ப் பழம் தினசரி தேவையில் 41 சதவீதம் வழங்குகிறது.

வைட்டமின் கேயின் சிறந்த மூலமாகும் :

அவாகோடா பழம் வைட்டமின் கேயின் சிறந்த மூலமாகும். வைட்டமின் கே உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியமான வைட்டமின் ஆகும்.

மேலும் இது இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த உறைவு வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அது இல்லாமல் இரத்தம் உறைவதில்லை.

உடலில் போதுமான வைட்டமின் கே இல்லையெனில் காயங்களில் அதிகமாக இரத்தம் வர வாய்ப்பு உள்ளன.

சில ஆய்வுகள் வைட்டமின் கே வயதானவர்களுக்கு வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது என்று கூறுகின்றன.

ஊட்ட சத்து ஊக்கியாக செயல்படுகிறது :

அவாகோடா பழங்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப் படுவதை அதிகரிக்க உதவுவதன் மூலம் “ஊட்டச்சத்து ஊக்கியாக” செயல்படுகிறது.

அவகோடா பழம் தீமைகள் :

அவகோடா பழம் தீமைகளில் லேடெக்ஸ் ஒவ்வாமையும் ஒன்றாகும். லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் , உணவில் அவகேடா பழத்தை சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும்.

லேடெக்ஸுக்கு கடுமையான ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அவகோடா பழம் சாப்பிட்ட பிறகு அறிகுறிகளும் இருக்கலாம். இதை லேடெக்ஸ்-ஃபுட் சிண்ட்ரோம் அல்லது லேடெக்ஸ்-ஃப்ரூட் ஒவ்வாமை என்றும் அழைக்கப்படுகிறது.

லேடெக்ஸ் பொருட்கள் பிரேசிலிய ரப்பர் மரத்தின் (ஹெவியா பிரேசி லியென்சிஸ்) சாற்றில் உள்ள புரதத்திலிருந்து தயாரிக்கப் படுகின்றன.

அவகேடா பழத்தில் லேட்டக்ஸ் பொருட்களை ஒத்த புரதம் காணப்படுகிறது. இது ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்துகிறது.