வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காய் குக்குர்பிடேசி குடும்பத்தைச் சேர்ந்தது. வெள்ளரிகள் பல அத்தியாவிசய ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளன.
ஆனால் மிக குறைந்த அளவு கலோரிகள், கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவற்றை கொண்டுள்ளன.
வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள் :
வெள்ளரிகளில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் பல முக்கியமான அத்தியாவிஷய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
ஒரு 11-அவுன்ஸ் அதாவது 300 கிராம் உரிக்கப்படாத, பச்சை வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்.
- கலோரிகள்: 15 கிலோ
- மொத்த கொழுப்பு: 0 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள்: 3.13 கிராம்
- புரதம் : 0.65 கிராம்
- நார்ச்சத்து :.5கிராம்
- வைட்டமின் சி: 2.8 மில்லி கிராம்
- வைட்டமின் கே: 16.4 மைக்ரோ கிராம்
- கால்சியம் : 16 மில்லி கிராம்
- மக்னீசியம்: 13 மில்லி கிராம்
- பொட்டாசியம் : 147 மில்லி கிராம்
- சோடியம் : 2 மில்லி கிராம்
வெள்ளரிகாயில் உள்ள ஊட்டச்சத்து சத்துக்களை முழுவதும் பெற, உரிக்காமல் தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
வெள்ளரிக்காய் நன்மைகள் :
வெள்ளரிக்காய் வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்கள் போன்ற ஊட்ட சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகளுக்கான தனித்துவமான பொருட்களைக் கொண்டுள்ளன.
வெள்ளரிக்காய் நன்மைகள் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நீரிழப்பு :
உயிர் வாழ்வதற்கு இந்தியமையாத திரவமாக நீர் கருதப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை விட குறையும் போது நீரிழப்பு ஏற்படுகிறது. இது ஆங்கிலத்தில் டீஹைட்ரேசன் எனப்படுகிறது.
உடலில் ஏற்படும் நீரிழப்பு பல நோய்கள் மற்றும் உள்ளுருப்பு சேதத்திற்கு வழி வகுக்கிறது.
பல உணவுகளை போல் வெள்ளரிக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது, உடலில் உள்ள இழந்த நீரை நிரப்பி, முழுமையாக நீரேற்றமாக வைத்திருக்கும்.
கடுமையான உடற்பயிற்சி அல்லது சோர்வை ஏற்படுத்தும் உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு, குறிப்பாக வெயில் காலங்களில் உச்சக்கட்டத்தில் சில வெள்ளரி துண்டுகளை சாப்பிடுவது நல்லது.
நார்ச்சத்து நிறைந்தது :
வெள்ளரிக் காய் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக கருதப்படுகிறது, இது செரிமான மண்டலத்தை சரியாக செயல்பட உதவுகிறது.
வெள்ளரிக் காய்களில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர் சத்தின் கலவை மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
எனவே தான், நீரிழிவு நோயாளிகள் இதைத் தவறாமல் உட்கொள்ளுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஏனெனில் இது கணையத்தில் சரியான அளவு இன்சுலின் சுரக்கச் செய்கிறது. இதன் மூலம் உடலில் உள்ள சர்க்கரையை சீராக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம் :
எலும்பு அடர்த்தி மற்றும் எலும்பு வலுவிற்கு கால்சியம் அவசியம் ஆகும். வெள்ளரிக்காயில் தேவையான அளவு கால்சியம் உள்ளது.
தினமும் வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கிறது :
வெள்ளரியில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் காரணமாக உடல் முழுவதும் புற்றுநோய் செல்கள் பரவலைக் குறைத்து, புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
புற்றுநோயியல் நிபுணர்கள் நோயாளிகளின் உடலில் உள்ள சேதமடைந்த செல்களை சரி செய்ய வெள்ளரிகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைப்பாதாக சொல்லப்படுகிறது.
எடை குறைப்பு :
வெள்ளரிக்காய் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து கொண்டுள்ளதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி நிறைவாக உணர உதவுகிறது.
பதப்படுத்தப்பட்ட அதிக கலோரிகள் நிறைந்த சிற்றுண்டிகளுக்கு பதிலாக வெள்ளரிக் காய் சாப்பிடுவது அதிக கலோரிகள் உடலில் சேர்வதை தவிர்த்து உடல் எடை குறைவதில் உதவி செய்யும்.
இதய ஆரோக்கியம் :
வெள்ளரிக்காயில் குறைந்த சோடியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.
மேலும் கொழுப்புகள் இல்லை. இந்த சத்துக்கள் இரத்தக் கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உதவுகிறது.
நீரிழிவு மேலாண்மை :
வெள்ளரிக் காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை.
மேலும், அவற்றில் உள்ள ஆக்சிஜனேற்ற சேர்மங்கள் காரணமாக ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
அவற்றில் உள்ள அதிக அளவு நீர் மற்றும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தவும் நீரழிவைத் தடுக்கவும் உதவுகிறது.
குடல் ஆரோக்கியம் :
வெள்ளரிக் காய்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அவை குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், குடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
வெள்ளரிக்காய் தினமும் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
முடி ஆரோக்கியம் :
வெள்ளரிக்காயில் உள்ள கந்தகம் மற்றும் சிலிக்கான் முடியை வலுப்படுத்தவும், மென்மையாக்கவும் உதவுகிறது.
மேலும் முடி மிருதுவாகவும், எளிதில் உடையாமல் இருக்கவும் உதவுகிறது.
மலச் சிக்கலைத் தடுக்கிறது :
உடலில் போதிய அளவு நீர் மற்றும் நார்ச்சத்து இல்லாதது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.
உடலில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து குறைவை போக்க தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லது.
இதன் மூலம் மலச்சிக்கல் நீங்கி எளிதி மலம் வெளியேற உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம் :
வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுவதில் உதவுகிறது.
மேலும் சிறுநீர்ப்பையில் இருக்கும் கற்கள் மற்றும் கழிவுகள் சிறுநீர் கழிப்பதன் மூலம் உடலில் இருந்து அகற்றப்படும்.
மற்றும் உடலின் யூரிக் அமில அளவைக் கட்டுப் படுத்துவதில் வெள்ளரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒற்றைத் தலைவலி நிவாரணம் :
வெள்ளரிக்காயை உணவில் சேர்த்து கொள்வது மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலை வலியை குறைப்பதாக சொல்லப்படுகிறது.
வெள்ளரிக்காயில் உள்ள மெக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஊக்கமளிக்கிறது.
ஆரோக்கியமான சருமம் :
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற விரும்புபவர்கள் தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். இது தோல் சுருக்கங்களை நீக்கி சருமத்தை ஒளிரச் செய்கிறது.
சிறந்த ஆக்சிஜனேற்றியாகும் :
வெள்ளரிக்காயில் ஆக்சிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற சேர்மங்கள் உள்ளன – இது செல்களில் நடக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்துவதன் மூலம் செல் சேதத்தைக் குறைக்கின்றன.
வாய் ஆரோக்கியம் :
வெள்ளரிக் காய் சாப்பிடுவது ஈறுகள் மற்றும் பற்களில் காணப்படும் பாக்டீரியாவை நீக்குவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
வெள்ளரிக்காய் தீமைகள் :
வெள்ளரிக்காய் பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பான உணவாக உள்ளது. ஆனால் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை
அரிதாக சிலருக்கு சில வகை வெளளரிகள் ஜீரணிக்க கடினமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
வெள்ளரிக்காய் ஒப்பீட்டளவில் அதிக அளவில் வைட்டமின் கே கொண்டுள்ளது.
எனவே இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக அளவு சாப்பிட கூடாது.
அரிதாக சிலருக்கு வெள்ளரிக்காய் ஒவ்வாமை எதிர்வினை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.