வெள்ளரி விதை நன்மைகள், பயன்கள் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் வெள்ளரி விதை தீமைகள், பக்க விளைவுகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளரி விதை
வெள்ளரிக்காய் மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் வெள்ளரி விதைகளிலும் உயிர்ச் சத்துக்கள் அதிகம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
வெள்ளரி விதைகளில் புரதம், நார்ச் சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. மேலும் குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதிலும் எள் விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், சியா விதைகள் போன்று வெள்ளரி விதைகளும் அதிலுள்ள ஊட்டச் சத்து மதிப்பிற்காகவும் சுவைக்காகவும் உண்ணப்படுகிறது.
வெள்ளரி விதையில் உள்ள சத்துக்கள் :
வெள்ளரி விதையில் பல்வேறு வகையான அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கரோட்டின், தியாமின், ரிபோஃப்ளேவின், சைலோஸ், பிரக்டோஸ், கிளைகோசைடுகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் கனிசமான அளவு உள்ளன.
100 கிராம் வெள்ளரி விதைகளில் சுமார் 90 மில்லிகிராம் கால்சியம் மற்றும் 45 மில்லி கிராம் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. மேலும் பாஸ்பரஸ் கால்சியம் உறிஞ்சப் படுவதை ஊக்குவிக்கிறது.
வெள்ளரி விதை நன்மைகள் :
வெள்ளரி விதைகளை முலாம்பழம் மற்றும் பூசணி போன்ற விதைகளை உட்கொள்ளும் முறையில் உண்ணலாம். வெள்ளரி விதை நன்மைகள் பின்வருமாறு
உடல் எடை
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு வெள்ளரி விதை உதவுவதாக சொல்லப்படுகிறது. வெள்ளரி விதைகளில் நீர் சத்து மற்றும் தாதுச் சத்துக்கள் உள்ளன.
அவை கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டுள்ளது.
சிறுநீர் தொற்று :
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலான உணர்வு தோன்றுவது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதை தொடர்பான நோய்த்தொற்றின் அறிகுறியாகும்.
இதற்கு விதையுடன் வெள்ளரி ஜுசை தொடர்ந்து சாப்பிட்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.
சரும பராமரிப்பு :
வெயிலில் அலைவது, மாசுபாடு மற்றும் ஊட்டச் சத்துக்கள் குறைபாடு காரணமாக மேற்புறத் தோல் பாதிக்கப் படுகிறது.
வெள்ளரி விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்து, சுருக்கங்களை நீக்கி இளமையோடு வைத்திருக்க உதவுகிறது.
புற்றுநோய் செல்களைக் குறைக்கிறது
வெள்ளரி விதைகளில் நிறைந்துள்ள பைட்டோ கூறுகள் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
இதை தினமும் உட்கொள்வது உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகின்றன.
மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உடல் பலவீனத்தை குணப்படுத்துகிறது.
சிறுநீரக கல்
சிறுநீரக கல் இருப்பது கண்டறியப்பட்டால், வெள்ளரி விதைகள் ஒரு தீர்வாக இருக்கலாம்.
வெள்ளரி விதைகளை தொடர்ந்து பொடியாகவோ அல்லது அரைத்து சாராகவோ எடுத்து வந்தால் சிறு நீரக கல்லிலிருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.
முடி உதிர்தல் :
வெள்ளரி விதைகள் கந்தகத்தின் சிறந்த மூலமாகும். வெள்ளரி விதைகளுடன் சாறு குடித்து வர இது முடி உதிர்ந்தலைக் குறைத்து வளர்ச்சியை அதிகரித்து அடர்த்தியான முடியைப் பெற உதவுகிறது.
வெள்ளரி விதை தீமைகள் :
வெள்ளரி விதைகளை சிறியஅளவில் உண்பது ஆரோக்கியமான நபருக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனால், சிலருக்கு ஒவ்வாமை எதிர் வினை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். வெள்ளரி விதை தீமைகள் சில பின்வருமாறு
செரிமான கோளாறு :
அதிக அளவு வெள்ளரி விதைகளை சாப்பிடுவது அதிலுள்ள அதிக நார்ச்சத்து காரணமாகா வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.
நீரிழப்பு :
வெள்ளரி விதைகள் டையூரிடிக் பண்புகள் காரணமாக அதிக அளவில் உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
இரத்த சர்க்கரை :
வெள்ளரி விதைகளை உண்பது இரத்த சர்க்கரையை குறைக்கலாம். இரத்த சர்க்கரையை அளவைக் குறைக்க நீரிழிவு நோய்க்கான மருந்தை உட்கொள்பவர்களுக்கு கூடுதல் கவனதுடன் வெள்ளரி விதைகளை உண்ணா வேண்டும்.