வாழைக் காய் நன்மைகள் மற்றும் தீமைகள்

1

வாழைக்காய்

வாழைக்காய் அனைவருக்கும் தெரிந்த ஒரு காய்கறியாகும். வாழைக்காய் தோல் மற்றும் உள்பகுதி அதன் பழங்களை விட உறுதியாக இருக்கும் எனவே சமைத்து மட்டுமே சாப்பிட முடியும்.

வாழைக் காய்

வாழைக்காய் ஆங்கிலத்தில் ரா பனானா என்றும் பிளான்டைன் என்றும் அழைக்கப்படுகிறது.

வாழை ஒரு வெப்பமண்டல தாவர மாகும். எனவே அப்பகுதி மக்களுக்கு முக்கிய உணவாக உள்ளது.

தென் இந்திய சமையல் களில் சாம்பார், கூட்டு, பொரியல், அவியல் போன்ற பல வகை உணவுகளில் பயன் படுத்தப் படுகிறது.

இந்த பதிவில் வாழைக் காய் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாக காணாலாம்.

வாழைக் காய் நன்மைகள் :

இரத்த அழுத்தம் :

வாழைக்காயில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த போதுமான அளவு பொட்டாசியம் உள்ளது.

இது உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதில் உதவுகிறது.

இதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

கொழுப்பு :

பொதுவாக அதிக அளவு கொலஸ்ட்ரால் இதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

வாழைக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும், கார்போ ஹைட்ரேட்டுகளை இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப் படுவதையும் கட்டுப்படுத்துகிறது.

இதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகளை குறைக்கிறது

இரத்த சர்க்கரை :

வாழைக் காய் இரத்த குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

இது வாழைப்பழங்களை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

எனவே இவை மாவுச் சத்து மற்றும் சர்க்கரை உடலால் உறிஞ்சப் படும் விகிதத்தைக் விகிதத்தை குறைக்கிறது.

சிறுநீரகம் :

வாழைக்காய் உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரித்து சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

வாழைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரக புற்றுநோய் போன்ற சிறுநீரக பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

செரிமானம் :

பொதுவாக வாழைப்பழத்தில் நார்ச் சத்து நிறைந்துள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.

அதைப் போல் 100 கிராம் வாழ்க் காயில் கிட்டத்தட்ட 2.6 கிராம் நார்ச் சத்து உள்ளது. இது மலச் சிக்கலை போக்கி குடல் இயக்கத்தை எளிதாக்கு கிறது.

மேலும் இதிலுள்ள ப்ரீபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தில் உதவுகிறது.

வளர்ச்சிதை மாற்றம் :

வாழைக்காயில் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை கொழுப்பை ஆற்றலாக மாற்ற உதவுகின்றன.

மேலும் இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வாழைக்காயில் வைட்டமின் பி 6 இல் நிறைந்துள்ளன.

இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் நொதிகளை உடைக்க உதவுகிறது.

உடல் எடை :

பொதுவாக உடல் எடை குறைக்க விரும்புவர்களின் முக்கிய உணவுத் தேர்வாக நார்ச் சத்து நிறைந்த காய்கறிகள் உள்ளது.

வாழைக்காயிலும் கனிசமான அளவு நார்ச் சத்து உள்ளதால் அது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது.

தோல் :

வாழைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஃப்ரீ ரேடிக்கல்களால் தோல் மற்றும் முடிக்கு ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

மேலும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது மேலும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வயிற்றுப்போக்கு :

செரிமானத்தில் உதவக் கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், வாழைக்காய் வயிற்றுப்போக்கு காலங்களில் ஒரு சிறந்த உணவு தேர்வாக உள்ளது.

இது எளிதில் ஜீரணிக்கக்கூடியதாக இருப்பதுடன் வயிற்றுப்போக்குடன் கூடிய தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

ஊட்டச் சத்துக்கள் :

வாழைகாயில் நார்ச் சத்துக்கள் மற்றும் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் கொண்டுள்ளதால் இது ஊட்டச்சத்துக்கல் உடலால் உறிஞ்சப் படும் திறனை அதிகரிக்கும்.

குறிப்பாக கால்சியம் குடலால் உறிஞ்சப் படுவதை ஊக்கு விக்கிறது.

வாழைக்காய் தீமைகள் :

பொதுவாக வாழைக் காய் அளவோடு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை.

ஆனால் அளவுக்கு அதிகமாக உண்ணும் போதும் ஏதேனும் உடல் நலக் கோளாறு உடையவர்களுக்கும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பொதுவாக வாழைக்காய் அதிக அளவு சாப்பிடுவது வாயு, வயிறு உப்புசம் , தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

வாழைக்காயில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் வாழைக்காயில் மற்ற சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவுகளை விட அதிக கலோரிகள் உள்ளன. ஒரு நடுத்தர அளவிலான வாழைக் காயில் சுமார் 90 கலோரிகள் உள்ளன.

1 COMMENT