Homeவாழ்க்கை முறைஅழகு குறிப்புஉதடுகள் சிவப்பாக எளிய வழிகள்

உதடுகள் சிவப்பாக எளிய வழிகள்

வீட்டில் உள்ள அல்லது சமையல் அறையில் உள்ள பொருட்களை பயன்படுத்தி சிவப்பான உதடுகளை பெற பல வழிகள் உள்ளன. உதடுகள் சிவப்பாக குறிப்புகள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

உதடுகள் சிவப்பாக எளிய வழிகள் :

முக அழகை அதிகரித்து வசீகரிப்பதில், உதடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சிவப்பான உதடுகள்
அவற்றை மேலும் அழகு படுத்துவதற்காக, பயன்படுத்தும் உதட்டுச்சாயங்கள் பெரும்பாலும் ரசாயனம் கலந்தவையாகவே உள்ளன.

 

ரசாயன உதட்டு சாயங்கள் பக்க விளைவுகள் :

உண்ணும் போது மற்றும் குடிக்கும் போது போது உணவுடன் சேர்த்து உதட்டு சாயத்தில் சேர்க்க பட்டுள்ள ரசாயன துகள்களையும் சேர்த்து விழுங்குவதால், பல பிரச்சினைகள் உருவாகின்றன.

உதடுகள் சிவப்பாக சித்த மருத்துவம் மற்றும் இயற்கை முறைகளை கையால்வதன் மூலம் இவ்வித ரசாயன சேர்மங்கள் உடலுக்குள் செல்லாமல் தவிர்க்க முடியும்.

அதனைத் தவிர்ப்பதற்காக, இயற்கை முறையில் உதடு களின் வண்ணத்தை பராமரிக்கும் வழிகள் பல உள்ளன அவற்றில் சிறந்த மற்றும் எளிதான வழிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

உதடுகள் சிவப்பாக எளிய வழிகள் :

தனி கவனம் :
முகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உதடுகளுக்கும் கொடுக்க வேண்டும். அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தும்போது, உதட்டிற்கு தனி கவனம் செலுத்துவது நல்லது.
 
தண்ணீர் :
உதடுகள் சிகப்பாகவும், ஆரோக் கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கியமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது, மிகவும் தவறான செயலாகும்.
 
இதன் மூலம் உதடுகள் கருமை அடைவதோடு, வறண்டு போகவும் நேரிடும். இதைத் தவிர்ப்பதற்கு போது மான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உதடுகள் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும்.
 
உதடுகள் சிவப்பாக வைட்டமின் சி  :
உதடு கருப்பாக காரணம் பல இருந்தாலும் அதில் புகை பிடிப்பது மற்றும் அடிக்கடி தேநீர் அருந்தவதும் அடங்கும். இதனைத் தவிர்க்க தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக, வைட்டமின் ‘சி’ நிறைந்த ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழச்சாறை அருந்தலாம். இது ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன் உதடுகளை மெருகேற்றும்.
 
உதடு சிவப்பாக தேன் :

தேன் ஒரு அற்புதமான இயற்கை மூலப்பொருள், இது கருமையான உதடுகளை சிகப்பாக மாற்றுவதற்கு பல பயன்படுகிறது.

இது உதடுகளை பள பளக்க வைப்பது மட்டுமல்லாமல் மென்மையாகவும் ஆக்குகிறது.

இரவு தூங்க போகுமுன் தினமும் தேனை உதட்டில் தடவ வேண்டும். இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வர உதடு சிவப்பாகும்.

உதடுகளைத் தூய்மைப் படுத்த, தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு. 1/2 தேக்கரண்டி சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு. 4 துளிகள் தேன் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு போன்ற வற்றை நன்றாக கலந்து, சர்க்கரை கரைவதற்கு முன்பு உதட்டின் மீது பூசி, 2 முதல் 3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, உதடுகள் மிருதுவாகும்.

 
உதடுகள் சிவப்பாக பீட்ரூட்  :

கருப்பு உதடு சிவப்பாக பீட்ரூட் சாறு 2 தேக்கரண்டி, எலு மிச்சை சாறு கால் தேக்கரண்டி, நாட்டுச் சர்க்கரை 3 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாக கலந்து, ஒரு கண்ணாடி குப்பியில் காற்றுப் புகாதவாறு மூடி, குளிர்சாதனப் பெட்டியில் பாது காக்கவும். இதனை தினமும் 2 முறை தடவி வந்தால், உதடுகள் மென்மையாகவும், சிகப்பாகவும் மாறும்.

உதடுகள் சிகப்பாக ரோஜா இதழ் :

பன்னீர் ரோஜா இதழ்கள் 20 கிராம் (அரைத்தது), பசுவின் பால் 1 தேக்கரண்டி, இவை இரண்டையும் நன்றாக கலந்து, தினமும் உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிகப்பாகவும், மிருதுவாகவும் காட்சி யளிக்கும்.

உதடு சிவப்பாக மஞ்சள் :
உதட்டில் வெள்ளை நீங்க சிறிது கஸ்தூரி மஞ்சளுடன் பசும்பால் கலந்து, பூசி வந்தால் உதடுகள் பளபளப்பாகவும், சிகப்பாகவும் மாறும்.
 
மேலும் மஞ்சள் கருமை நிரத்திற்கு காரணமான மெலனின் தடுப்பானாக செயல்பட்டு உதடுகளை ஒளிரச் செய்ய உதவுகிறது.

 

உதடுகள் சிகப்பாக வெள்ளரி காய் :

வெள்ளரிக்காயை சிறு துண்டாக நறுக்கி தினமும் 5 நிமிடங்களுக்கு உதடுகளில் தேய்க்கவும். தினமும் செய்து வர உதடுகளில் நிரமாற்றம் ஏற்படுவதை காணலாம்.

உதடு சிவப்பாக தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு கலந்து தினமும் தூங்க செல்வதற்கு முன் உதடுகளில் தடவ வேண்டும். இது உதடுகளை சிவப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

உதடுகள் சிகப்பாக மசாஜ்  :

பொதுவாக மசாஜ் செய்யும் பொழுது உதட்டில் இரத்த ஓட்டம் அதிகமாகி உதடு இளஞ்சிவப்பாக மாறும். சிறிதளவு பாதம் எண்ணெய் கொண்டு உதடுகளை மாசஜ் செய்து வர உதடுகள் ஈரப் பதமாகவும், இளஞ்சிவப்பாகவும் மாறும்.

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular