உருளைக்கிழங்கு நன்மைகள், பயன்கள், உருளைக் கிழங்கில் உள்ள சத்துக்கள் மற்றும் உருளைக்கிழங்கு தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கு அறிவியல் பெயர் சோலானம் டுபரோசம் (Solanum tuberosum) ஆகும். இது பூக்கும் தாவரங்களின் சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைகளில் தோன்றிய தாவரமாக சொல்லப்படுகிறது.
அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக மனிதனால் அதிக அளவில் உண்ணப்படும் மூன்றாவது முக்கியமான உணவுப் பயிர் ஆகும்.
உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் :
யூ. எஸ் டிப்பார்ர்ட்மென்ட் ஆப் அக்ரிகல்ச்சர் (USDA) தரவுகளின் படி 100 கிராம் உருளைக் கிழங்கில் உள்ள சத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- 94 கலோரிகள்
- கொழுப்பு : 0.15 கிராம்
- கொலஸ்ட்ரால் : 0 கிராம்
- கார்போஹைட்ரேட் : 21.08 கிராம்
- நார்ச்சத்து : 2.1 கிராம்
- புரதம் : 2.10 கிராம்
- கால்சியம் : 10 மில்லிகிராம்கள்
- இரும்புச்சத்து : 0.64 மி.கி
- மெக்னீசியம் : 27 மி.கி
- பாஸ்பரஸ் : 75 மி.கி
- பொட்டாசியம் : 544 மி.கி
- வைட்டமின் சி : 12.6 மி.கி
- வைட்டமின் பி6 : 0.211 மி.கி
- ஃபோலேட் : 38 மைக்ரோகிராம்
பிற சத்துக்கள் :
உருளைக்கிழங்கில் நியாசின், கோலின் மற்றும் துத்தநாகமும் காணப்படுகிறது. உருளை கிழங்கின் வெவ்வேறு வகைகள் சற்று வித்தியாசமான ஊட்டச் சத்துக்களை வழங்குகின்றன.
சோடியம் :
பதப்படுத்தப்படாத உருளைக் கிழங்கில் மிகக் குறைந்த அளவே சோடியம் உள்ளது.
அதாவது 100 கிராமுக்கு 10 மி.கி இது தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவில் 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
இருப்பினும் பொரியல் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு வகை தயாரிப்புகளில் இது பெரிதும் மாறுபாடுகிறது.
ஆல்பா-லிபோயிக் அமிலம் :
உருளைக்கிழங்கில் ஆல்பா-லிபோயிக் அமிலம் (ALA) உள்ளது. இது குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற உடலுக்கு உதவுகிறது.
ஆல்ஃபா-லிபோயிக் அமிலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், வாசோடைலேஷனை மேம்படுத்தவும், நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை நோயிலிருந்து பாதுகாக்கவும் மற்றும் மூளை மற்றும் நரம்பு திசுக்களைப் பாதுகாக்கவும் உதவும் என்று சில சான்றுகள் நம்பிக்கையான ஆதாரத்தை பரிந்துரைக்கின்றன.
குர்சிடின் :
உருளைக்கிழங்கின் தோலில் காணப்படும் குர்சிடின் என்ற ஃபிளாவனாய்டு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
இது செல்களில் ஃப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ஃபிளாவனாய்டுகள் என்பது ஒரு வகையான பைட்டோ நியூட்ரியண்ட், கரிம சேர்மங்கள் ஆகும். அவை நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் :
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி இயற்கையான ஆக்ஸிஜ னேற்றியாக செயல்படுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல் சேதம் மற்றும் புற்றுநோயைத் தடுக்கவும் ஆரோக்கியமான செரிமானம் மற்றும் இருதய செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.
உருளைக்கிழங்கு நன்மைகள் :
உருளைக்கிழங்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பது அதனுடன் சேர்க்கப் படும் பொருட்கள் மற்றும் சமைக்கப்படும் முறையை பொறுத்து மாறுபடுகிறது.
உருளைக்கிழங்கு நன்மைகள் பற்றி கீழே கொடுக்கப்படுள்ளது.
புற்றுநோய் பாதுகாப்பு :
உருளைக் கிழங்கில் பி வைட்டமின்களில் ஒன்றான ஃபோலேட் உள்ளது. டிஎன்ஏ தொகுப்பு மற்றும் பழுதுபார்ப்பதில் ஃபோலேட் ஒரு பங்கு வகிக்கிறது.
எனவே டிஎன்ஏவில் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக பல வகையான புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறதது.
உருளைக்கிழங்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து நார்ச் சத்து உட் கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
செல் சேதத்தை குறைக்கிறது:
வைட்டமின் சி மற்றும் குவெர்செடின் ஆகியவை ஆன்டி ஆக்ஸிடன்ட்களாகவும் செயல் படுகின்றன.
இவை ஃப்ரீ ரேடிக்கல்களினால் செல்களில் ஏற்படும் சேதத்தை குறைக்கின்றன.
செரிமான ஆரோக்கியம் :
உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.
மேலும் செரிமானப் பாதை ஆரோக்கியத்தையும் சீரான தன்மையை ஊக்குவிக்கிறது.
எடை மேலாண்மை :
நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எடை மேலாண்மை மற்றும் எடை குறைப்புக்கு உதவுகின்றன.
அவை பசியை குறைப்பதன் மூலம் அதிக கலோரிகள் உட்கொள்ளப் படுவதை குறைத்து எடை குறைப்பை ஊக்குவிக்கின்றன.
வளர்சிதை மாற்றம் :
உருளைக்கிழங்கு வைட்டமின் பி6 இன் சிறந்த மூலமாகும். கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களாக உடைப்பதன் மூலம் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
தோல் ஆரோக்கியம் :
உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.
இது சூரியன், மாசு மற்றும் புகை ஆகியவற்றால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
வைட்டமின் சி கொலாஜன் சுருக்கங்களை மென்மையாக்க உதவுகிறது மற்றும ஒட்டுமொத்த தோல் அமைப்பை மேம்படுத்துகிறது. கொலாஜன் என்பது தோலின் முக்கியமான கட்டுமான அமைப்பாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி :
வைட்டமின் சி சளியின் தீவிரத்தையும் கால அளவையும் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. உருளைக் கிழங்கு வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும்.
உருளைக்கிழங்கு தீமைகள் :
உருளைக்கிழங்கு தீமைகள் பின்வறுமாறு
உருளைக்கிழங்கு செடி, தக்காளி மற்றும் கத்திரிக்காய் ஆகியவை நைட்ஷேட்குடும்பத்தைச் சேர்ந்தது.
இந்த தாவரங்களின் முளைகள் மற்றும் இலைகள் நச்சுத்தன்மையுடையவை மற்றும் சாப்பிடக்கூடாது.
முளைத்த அல்லது பச்சை நிறமாற்றம் கொண்ட உருளைக்கிழங்கில் சோலனைன் எனும் நச்சு கலவை இருக்கக்கூடும்.
இது சுவாசப் பிரச்சனைகள், தலைவலி, தசைப் பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
உருளைக் கிழங்கு முளைத்திருந்தால் அல்லது “கண்கள்” உருவாகியிருந்தால், அனைத்து முளைகளையும் அகற்றினால் போதும்.
ஆனால் உருளைக்கிழங்கு சுருங்கி அல்லது பச்சை நிறத்தில் இருந்தால், அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உருளைக் கிழங்கை 248 ஃபாரன்ஹீட் அல்லது 120 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடுபடுத்தி சமைக்கும் போது, அக்ரிலாமைடு எனப்படும் இரசாயனத்தை உற்பத்தி செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த கலவை பிளாஸ்டிக், பசைகள், சாயங்கள் மற்றும் சிகரெட் புகை ஆகியவற்றில் காணப்படுகிறது.
இது பல புற்றுநோய்களின் வளர்ச்சிக்கு காரணமாக அமைவதாக சொல்லப்படுகிறது.
அக்ரிலாமைடு நியூரோடாக்ஸிக் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இதை தொடர்ந்து உட்கொள்வது மரபணுக்கள் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.