துவரம் பருப்பு நன்மைகள், பயன்கள், துவரம் பருப்பில் உள்ள சத்துக்கள் மற்றும் துவரம் பருப்பு தீமைகள் பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு :
துவரம் பருப்பு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான உணவு தானியமாகும்.
இதில் புரதம், ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
ஒரு கப் சமைத்த துவரம் பருப்பில் கிட்டத்தட்ட 11 கிராம் புரதம் உள்ளது. அரிசி போன்ற தானியங்களுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது துவரம் பருப்பு நன்கு சுவை மற்றும் சரிவிகித உணவை உருவாக்குகிறது.
இந்த பருப்பை அரிசியுடன் சேர்க்கும்போது, ஒரு முழுமையான புரதம் கிடைக்கும்.
துவரம் பருப்பு நன்மைகள் :
துவரம் பருப்பு நன்மைகள் சிலவற்றைக் கீழே காணலாம்
நீரிழிவு நோய் :
நீரிழிவு நோயாளிகள் தினமும் உணவில் துவரம் பருப்பை சேர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன.
இதன் காரணமாக துவரம் பருப்பு விரைவில் செரிமானமாகி திடீரென இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
இரத்த அழுத்தம் :
துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் வாசோடைலேட்டராக செயல்பட்டு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு உணவில் துவரம் பருப்பைச் சேர்ப்பது மிகவும் நல்லது.
இதய ஆரோக்கியம் :
துவரம் பருப்பில் நிறைவுற்ற கொழுப்புகள் முற்றிலும் இல்லை. எனவே இது இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்கு புரதச் சத்தை பெற சிறந்த உணவாக உள்ளது.
மேலும் இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் நல்ல (HDL) கொழுப்பின் அளவை அதிகரித்து கெட்ட (LDL) கொழுப்பின் அளவை குறைக்கிறது.
இதன் மூலம் இதய நாளங்களில் பிளேக் படிவதைத் தடுக்கிறது. மேலும் இதய தசையின் செயல்பாட்டை எளிதாக்குகிறது மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியம் :
துவரம் பருப்பில் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசிமான கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் கனிசமான அளவு உள்ளன.
எனவே இவை வளரும் குழந்தைகளின் எலும்புகளை பலப்படுத்தவும் வயதானவர்களுக்கு இழந்த எலும்பு அடர்த்தியை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தி :
துவரம் பருப்பில் மெக்னீசியத்தின் சிறந்த மூலமாகும். மெக்னீசியம் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி தொற்றுநோய்களைத் தடுக்கிறது.
மெக்னீசியம் உடலில் நடைபெரும் 300 க்கும் அதிகமான செயல்முறைகளுக்கு அவசிமான தாதுக்களில் ஒன்றாகும்.
மேலும் இது ஒட்டு மொத்த மற்றும் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதில் உதவுகிறது..
உடல் எடை குறைப்பு :
துவரம் பரூப்பில் குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. மேலும் இதில் கொலஷ்டிரால் இலை.
நார்ச்சத்து நிறைந்த உணவு நிறம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் அதிக கலோரிகள் உட்கொள்ளப் படுவதைக் குறைக்கிறது.
மேலும் நார்ச்சத்தும் உடலின் கொலஸ்ட்ராலை பிணைத்து உடலில் இருந்து வெளியேற்றுவதில் உதவுகிறது.
வளர்ச்சிதை மாற்றம் :
துவரம் பருப்பில் அதிக அளவு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. அவை வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு இன்றியமையாதவை ஆகும்.
கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் ரிபோஃப்ளேவின் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் இது கொழுப்புச் சேமிப்பைத் தடுக்கிறது மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
சருமம் :
நியாசின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது சரும பளபளப்பு மற்றும் பிரகாசத்தை மேம்படுத்துகிறது.
மேலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
ஹீமோகுளோபின் :
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சோர்வு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல், முடி உதிர்தல் போன்ற குறைபாடுகளை உருவாக்கும்.
துவரம்பருப்பு தாவர அடிப்படையிலான இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும்.
எனவே இது இயற்கையாகவே இரும்புச் சத்தை அழித்து ஹீமோகுளோபின் குறைபாட்டை போக்குகிறது.
தாவர புரதம் :
துவரம் பருப்பில் அசைவ உணவுகளுக்கு இணையான அளவு புரதம் நிறைந்துள்ளது. உடல் தசை மற்றும் கட்டுமானத்திற்கு இது அவசியமாகும்.
சைவ உணவு உண்பவர்களுக்கு துவரம் பருப்பு சிறந்த புரதச் சத்து மூலமாக அமைகிறது.
மாவுச் சத்து :
துவரம்பருப்பு மாவுச் சத்தின் சிறந்த மூலமாகும். மாவுச் சத்து உடலுக்கு ஆற்றல் அளிக்க அவசிமாகும்.
மேலும் இது சிக்கலான மாவுச் சத்தைக் கொண்டுள்ளதால் மெதுவாக செரிமானம் ஆகி நீண்ட நேரத்திற்கு ஆற்றலைத் தருகிறது.
போலிக் அமிலம் :
துவரம்பருப்பு ஃபோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். கருவின் வளர்ச்சிக்கு ஆரோக்கித்திற்கு ஃபோலிக் அமிலம் அவசியம் ஆகும்.
நார்ச் சத்து :
துவரம்பருப்பு நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இது குடல் இயக்கத்தில் சீரான தன்மையை மேம்படுத்தவும், மலச் சிக்கலைப் போக்கவும் உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், இதய நோய், பக்கவாதம், சில வகையான புற்றுநோய்கள், வகை 2 நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
துவரம் பருப்பு தீமைகள் :
துவரம் பருப்பு பொதுவாக அனைவரும் சாப்பிட பாதுகாப்பானது மற்றும் எந்த தீவிர பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
இருப்பினும், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் துவரம் பருப்பு சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.