துரியன் பழம் நன்மைகள், சத்துக்கள் மற்றும் தீமைகள்

0

துரியன் பழம்  நன்மைகள், உண்பசத்து கிடைக்கும் சத்துக்கள் மற்றும் துரியன் பழம் தீமைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

துரியன் பழம் 

துரியன் பழம் சமீப காலங்களில் தான் இந்தியாவில் அறியப் படுகிறது. துரியன் பழம் இந்தோனேசியா, தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட  பழமாகும்.

தூரியன் பழம்

துரியன்  பழங்களின் ராஜா’ என்று என்று அழைக்கப்படுகிறது.

துரியன் பழம் வகைகள் :

இது இந்தோனேசிய தீவான போர்னியோ மற்றும் சுமத்ராவை பூர்வீகமாகக் கொண்ட பழ வகையாகும்.

இந்தோனேசியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட வகையான துரியன் தாவரங்கள் வளருகின்றன. ஆனால் அவற்றில் ஒன்பது வகைகள் மட்டுமே உண்ணக் கூடியதாக உள்ளது. 

இவற்றில் ஒரே ஒரு துரியன் பழ வகை மட்டுமே வணிக ரீதியாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கிடைக்கிறது. இதன் அறிவியல் பெயர் துரியோ ஜிபெடினஸ் ஆகும்.

துரியன் பழத்தில் உள்ள சத்துக்கள் :

துரியன் பழம் 100 கிராமில் 147 கலோரிகள் உள்ளன. மேலும் 5.3 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் புரதம், 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 3.8 கிராம் நார்ச்சத்து உள்ளன.

விட்டமின்கள்

துரியன் பழத்தில் உள்ள சத்துக்கள் விட்டமின்கள்

100 கிராம் துரியன்பழத்தில் 2 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ, 19.7 மி.கி வைட்டமின் சி உள்ளது.

தாதுச் சத்துக்கள்

துரியன் பழத்தில் உள்ள சத்துக்கள் தாதுக்கள்
100 கிராம் துரியன் பழத்தில் 0.43 மில்லி கிராம் இரும்புச் சத்து, 6.00 மில்லி கிராம் கால்சியம், 30 மில்லி கிராம் மக்னேசியம் மற்றும் 436 மி.கி பொட்டாசியம் உள்ளது.

துரியன் பழம் நன்மைகள் :

துரியன் பழம் நன்மைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தூக்கிறது

துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் பழம் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பை சீராக்குகிறது.

துரியனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இது நீரிழிவு அறிகுறிகளை குறைக்கிறது.

மேலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் (ஜிஐ) ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. எனவே துரியன் பழம் இரத்த சர்க்கரை திடீரென உயர வழி வகுக்காது.

இரத்த அழுத்தத்தைக் கட்டு படுத்துகிறது

தூரியன் பழம் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். பொட்டாசியம் உட்கொள்வதை அதிகரிப்பது இரத்த அழுத்த அளவைக் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மேலும் இரத்த நாளங்களில் அழுத்தத்தைக் குறைக்கவும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது

துரியன் பழத்தின் அதிகப்படியான கலோரிகள் கலோரிகள் காரணமாக உடல் எடை அதிகரிப்பதில் உதவுகிறது.

100 கிராம் துரியன் சாப்பிடுவது சுமார் 147 கலோரி ஆற்றலை வழங்குகிறது.

இரத்த சோகையிலிருந்து பாதுகாககிறது

தூரியன் பழத்தில் உள்ள இரும்பு சத்து மற்றும் பி வைட்டமின் ஃபோலேட்ட. இரத்த சிவப்பு செல்கள் உற்பத்தியாக காரணமாக அமைகின்றன.

தூக்கமின்மையை சரி செய்கிறது

துரியன் பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மூளையில் செரோடோனின் ஆக மாறுகிறது.

செரட்டோனின் மன அழுத்தத்தை தளர்த்தி மற்றும் மகிழ்ச்சி உணர்வைத் தூண்டுகிறது.

மேலும் இது இரத்த ஓட்டத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோனை வெளியிட உதவுகிறது.

மெலடோனின்  சோர்வாகவும் தூக்கமாகவும் உணர வைப்பதன் மூலம் தூக்கமின்மையை குணப்படுத்த உதவுகிறது.

இயற்கை பாலுணர்வு ஊட்டியாகும்

தூரியன் பழம் சிறந்த பாலுணர்வு ஊக்கியாகும். மேலும் இது லிபிடோவை மேம்படுத்துகிறது மற்றும் பாலியல் வாழ்க்கையில் புத்துணர்ச்சி அளிக்கிறது.

துரியனில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி விறைப்புத் தன்மைக்யை அதிகரிக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவாகும்

துரியன் பழத்தில் ஃபோலேட் இருப்பது கருவில் இருக்கும் குழந்தையின்  மூளை மற்றும் முதுகெலும்பு உருவாவதில் முக்கிய பங்காற்றுகிறது.

கருத்தரிப்பை தூண்டுகிறது

ஈஸ்ட்ரோஜன் என்பது ஒரு ஹார்மோன் ஆகும். இது கருத்தரிக்க உதவுகிறது.

கருவுறுதல் தள்ளிப் போகும் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலோர் பொதுவாக உடலில் குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவைக் கொண்டுள்ளனர்.

துரியன் பழம் அதிக அளவு இந்த ஹார்மோனைக் கொண்டுள்ளது.

மேலும் ஆண்கள் மற்றும் பெண்களில் கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றும் விந்து இயக்கத்தை அதிகரிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

முதுமையை தாமதப் படுத்துகிறது

தூரியன் பழம் அதன் வைட்டமின் மற்றும் கரிம வேதியியல் வினையிலிருந்து உருவாகும் பல்வேறு வகையான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

இந்த ஆக்சிஜனேற்ற பண்புகள்  பிரீ ரேடிக்கல்ஸிற்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கிறது.

இதனால் முன்கூட்டியே மூப்பு ஏற்படும் வாய்ப்புகளை குறைத்து, சுருக்கங்கள், மால்குலர் சிதைவு, முடி உதிர்தல், பல் தளர்த்தல், கீல்வாதம், புற்றுநோய் போன்ற தோற்ற அறிகுறிகளை தாமதப படுத்துகிறது.

பொழிவான தோற்றத்தை தருகிறது

துரியன் பழத்தில் உள்ள அதிக அளவு நீர் சத்து மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளும் இணைந்து சரும வறட்சியை போக்கி பொழிவான தோற்றத்தை தருகிறது.

ஜீரண சக்தியை சீராக்குகிறது

தூரியன் பழம் அதிக அளவு நார்ச் சத்துக்களைக் கொண்டுள்ளது. நார் சத்துக்கள் பெரிஸ்டால்டிக் இயக்கம் மற்றும் செரிமான மற்றும் இரைப்பையில் சீரண அமிலங்கள் சுரப்பைத் தூண்டுகிறது.

குடலில் அடைப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற நிலைமைகளைக் குறைப்பதன் மூலம்,  அதிகப்படியான வாய்வு, நெஞ்செரிச்சல், வயிற்று பிடிப்பு அஜீரணம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற உபாதைகளைக் குறைக்கிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது

துரியனில் உள்ள கரையாத நார்ச்சத்து கெட்ட (எல்.டி.எல்) கொழுப்பை உடலில் இருந்து துடைத்து, இருதய அமைப்புக்கு ஏதேனும் சேதம் விளைவிக்கும் முன்பு அதை விரைவாக அகற்றுவதில் உதவுகிறது.

துரியன் பழம் தீமைகள்

துரியன் பழம் தீமைகள் பின்வருமாறு

துரியன் பழம் அழுகிய முட்டைகளை ஒத்த நறுமணத்தை வெளியீடுகிறது. மேலும் துரியன் பழத்தில் ஏராளமாக இருக்கும் மெத்தியோனைன் காமா லைஸால் கந்தக சேர்மங்களால் ஏற்படுகிறது.

விரும்பத்தகாத வாசனை இருப்பதால், துரியன் பழம் பல விமான நிலையங்களிலும் ஹோட்டல்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.