தும்பை நன்மைகள் மருத்துவ பயன்கள் மற்றும் தும்பைச் செடி வகைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
தும்பை
தும்பை தாவரவியல் பெயர் லியுகாஸ் அஸ்பெரா (Leucas Aspera) ஆகும். இது இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.
காடுகளிலும், கிராமங்களிலும் வெள்ளை பூக்கள் மற்றும் நீண்ட நீளமான இலைகளுடன் காணப்படுவதால் எளிதாக அடையாளம் காணலாம்.
தும்பை வகைகள் :
தும்பை செடியில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித்தும்பை என பல வகைகள் உள்ளூன.
தும்பை நன்மைகள் :
தும்பைச் செடியின் இலை, பூ என இரண்டு பகுதிகளிலும் மருத்துவ நன்மைகள் காணப்படுகிறது.
பொதுவாக உடல் உஷ்ணமாக்கி, சளியை அகற்றுவதற்காகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
மேலும் ஒற்றைத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் தும்பை மருந்தாக பயன்படுகிறது.
தும்பை பூக்கள் மற்றும் இலைகள் இரண்டும் பாரம்பரிய வைத்தியத்தில் மற்றும் சமையலிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பூச்சிக் கடி :
தும்பை இலை பூச்சி கடி, தேள் கடி பூரான் கடி மற்றும் பாம்பு கடிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப் படுகிறது.
தும்பையிலையின் சாறு பாம்பு கடித்தவர்களுக்கு வாய்வழியாக கொடுக்கப்படுகிறது. மேலும் கடித்த இடத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தடவப் படுகிறது.
இந்த சிகிச்சை முறை இன்னும் பல கிராமங்களில் அனுபவம் உள்ளவர்கள் முன்னிலையில் பின்பற்றப் படுகிறது.
உடல் சூடு குறைய :
உடல் சூடு குறைய எண்ணெய் தேய்த்துக் குளித்தால், சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு தலைவலி வரலாம். ஆனால், எண்ணெயுடன் தும்பைப் பூக்களைச் சேர்த்து சூடாக்கித் தேய்த்துக் குளித்தால் இந்த பிரச்னை வராது.
தோல் நோய் :
தும்பை இலைச் சாறு தோல் தொற்று காரணமாக ஏற்படும் அரிப்பு போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
தேமல் குணமாக :
தும்பை இலையை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி வர தேமல் குணமாகும்.
தலைவலி குணமாக :
தீராத தலைவலியால் அவதிப்பட்டுபவர்கள், இரண்டு சொட்டு தும்பைப்பூ சாற்றை மூக்கில் விட்டால் குணமாகும் என்று சொல்லப்படுகிறது.
மூக்கடைப்பு நீங்க :
தும்பைப்பூவை எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலையில் தேய்ச்சு குளித்து வந்தால் தலைபாரம், ஒற்றைத் தலைவலி, நீரேற்றம், மூக்கடைப்பு நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
மலச் சிக்கல் குணமாக :
தும்பை இலை, கொத்த மல்லி இலை மற்றும் புதினா இலை மூன்றையும் சம அளவு சேர்த்து சாராகக் குடித்து வந்தால் மலச் சிக்கல் குணமாகும்.
புழுக்கள் வெளியேற :
தும்பைச் சாறு இரண்டு தேக்கரண்டி இரண்டு நாட்களுக்கு குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
காதில் சீல் வடிதல் குணமாக :
தும்பை பூவுடன் பெருங்காயம் சேர்த்து அரைத்து அதை எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்து பின்பு வடுகட்டி இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீல் வடித்தால் குணமாகும்.
புண்கள் ஆற :
தும்பை இலை சிறந்த கிருமி நாசினியாக செயல் படுகிறது. தும்பை இலைச் சாற்றுடன் வெங்காயச் சாறு கலந்து குடித்து வர ஆசன வாயில் உள்ள புண்கள் குணமாகும்.
விக்கல் நீங்க :
சிலருக்கு தீராத விக்கல் ஏற்பட்டு பாடாய் படுத்தும். அத்தகையவர்கள் எந்த வீட்டு வைத்தியமும் பயன் தராத நிலையில் தும்பை பயன் படுத்திப் பார்க்கலாம்.
தும்பைப் பூவை பசும் பாலில் அரைத்துச் சாப்பிட்டால் விக்கல் நிக்கும் என்று சொல்லப்படுகிறது.