வைட்டமின் பி1 நிறைந்த உணவுகள் நன்மைகள்

0

வைட்டமின் பி1 :

வைட்டமின் பி1, தியாமின் அல்லது தையமின் என்றும் அழைக்கப்படுகிறது.

தையமின் (அ) வைட்டமின் பி1

இது எட்டு பி வைட்டமின்களில் ஒன்றாகும். இந்த பி வைட்டமின்கள், பெரும்பாலும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் என்று குறிப்பிடப் படுகின்றன.

முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்ட வைட்டமின் பி என்பதால் இதற்கு பி1 என்று பெயரிடப்பட்டது.

அனைத்து பி வைட்டமின்களும் நீரில் கரையக்கூடியவை ஆகும். எனவே உடலால் அவற்றை சேமிக்க இயலாது.

வைட்டமின் பி1 குறைபாடு :

வைட்டமின் பி 1 உணவுகளின் மூலம் உடலுக்கு கிடைப்பதால் இதன் குறைபாடு என்பது அரிதானது.

இருப்பினும் மது அருந்துபவர்கள், கிரோன் நோய் உள்ளவர்கள், பசியின்மை உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக டயாலிசிஸ் செய்து கொள்பவர்களுக்கு தயமின் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

வைட்டமின் பி1 குறைபாடு அறிகுறிகள்:

தலைவலி,  குமட்டல்,  சோர்வு, எரிச்சல்,  மனச்சோர்வு,  வயிற்று அசௌகரியம், ஆகியவை

தியாமின் குறைபாடு கார்போ ஹைட்ரேட்டுகளை ஜீரணிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இது பைருவிக் அமிலம் எனப்படும் ஒரு பொருளை இரத்த ஓட்டத்தில் உருவாக்க அனுமதிக்கிறது.

இதனால் மன விழிப்புணர்வு இழப்பு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் இதய பாதிப்பு, பெரிபெரி எனப்படும் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

வைட்டமின் பி1 பயன்கள் :

வைட்டமின் பி1 தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டிலும் காணப்படுகிறது.

இது சில வளர்சிதை மாற்ற எதிர்வினைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலின் ஒவ்வொரு உயிரணுவும் ஆற்றலுக்காகப் பயன்படுத்தும் அடினோசின் ட்ரைபாஸ்பேட் (ATP) உருவாவதற்கு தையமின் அவசியம் ஆகும்.

அனைத்து பி வைட்டமின்களும் உணவை எரிபொருளாக மாற்ற உதவுகிறது. அதாவது மாவுச் சத்தை குளுக்கோஸாக மாற்ற உதவுகிறது. இது உடல் ஆற்றலை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறது.

வைட்டமின் பி1 நன்மைகள் :

கல்லீரல், தோல், முடி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் தேவை. அவை நரம்பு மண்டலம் சரியாக செயல்படவும், மூளை சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன.

வளர்ச்சிதை மாற்றம் :

வைட்டமின் பி1 உடலில் கொழுப்புகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு அமைப்பு :

மற்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களைப் போலவே, தியாமினும் சில நேரங்களில் “மன அழுத்த எதிர்ப்பு” வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது.

ஏனெனில் இது மன அழுத்த சூழ்நிலைகளைத் தாங்கும் உடலின் திறனை மேம்படுத்துகிறது.

கண்புரை :

தியாமின் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து, கண்புரை உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம் என்று நம்பப் படுகிறது.

புரதம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு கண்புரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அல்சைமர் நோய் :

தியாமின் குறைபாடு வெர்னிக்-கோர்சகோஃப் நோய்க்குறியில் டிமென்ஷியாவை ஏற்படுத்தும். எனவே தியாமின் அல்சைமர் நோய்க்கு உதவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பு கின்றனர்.

தையமின் அல்சைமர் நோயாளிகளின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இன்னும் பல ஆறாட்சிகள் தேவை

மனச்சோர்வு  :

வைட்டமின் குறைபாடு மன அழுத்தம் மற்றும் மன சோர்வை ஏற்படுத்துவதாக சொல்லப் படுகிறது.

எனவே தயமின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் மன சோர்வை குறைக்க உதவுகிறது.

வயது அறிகுறிகளை குறைக்கிறது :

வைட்டமின் பி 1 ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது வயதான அறிகுறிகளான சுருக்கங்கள், புள்ளிகள் மற்றும் உறுப்புகளை தொடர்ந்து பாதிக்கும் வயது தொடர்பான காரனைகளின் பாதிப்புகளை குறைக்கிறது.

செரிமானத்தை ஊக்கு விக்கிறது : 

வைட்டமின் பி 1 வைட்டமின் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சீராக சுரக்க உதவுகிறது. இது முழுமையான செரிமானத்திற்கு அவசியம் ஆகும்.

நினைவாற்றல் மேம்பாடு :

தையமின் நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் பெல்ஸ் பால்சி போன்ற பல நரம்பு கோளாறுகளை சரி செய்யும் சிகிச்சையிலும் பயன்படுத்தப் படுகிறது.

இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி :  

தையமின் சிவப்பு இரத்த அணுக்கள் (RBCs) உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் இரத்த சிவப்பு அணுக்கள் அவசியம் ஆகும்.

மதுப் பழக்கத்தின் விளைவுகள் :

நாள் பட்ட குடிப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளான சிரோசிஸ், தொற்றுகள், ஹைப்பர் தைராய்டிசம் போன்ற குறைபாடுகளை குறைக்க தையமின் உதவுகிறது.

வைட்டமின் பி1 நிறைந்த உணவுகள் :

  • சால்மன் மீன் 100 கிராமில் 0.3 மி.கி வைட்டமின் பி1 உள்ளது
  • 100 கிராம் பச்சை பட்டாணியில் 0.3 மில்லி கிராம் வைட்டமின் பி 1 உள்ளது
  • 100 கிராம் டோஃபுவில் 0.2 மி.கி தையமின் உள்ளது
  • 100 கிராம் ஆரஞ்சு பழ சாற்றில் 0.38 மி.கி வைட்டமின் பி 1 உள்ளது.
  • 100 கிராம் தயிரில் 0.03 மிகி தியாமின் உள்ளது.
  • சிப்பி 100 கிராமில் 0.3 மி.கி வைட்டமின் பி 1 கிடைக்கிறது.