தேற்றான் கொட்டை நன்மைகள், மருத்துவ பயன்கள் மற்றும் தேற்றான் கொட்டை தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
தேற்றான் கொட்டை
தேற்றான் கொட்டை அறிவியல் பெயர் ஸ்ட்ரைக்னோஸ் பொட்டாடோரம் ஆகும்.
இது லோகனியேசி குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப மண்டல மர வகையாகும். இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியா, மியான்மர், இலங்கை மற்றும் பர்மா ஆகிய நாடுகளின் வெப்ப மண்டல பகுதியாகும்.
சங்க காலத்தில் தேற்றான் கொட்டை ‘இல்லம்’ என்று அழைக்கப்பட்டது. மேலும் முல்லை நிலங்களில் செழிப்பாக வளர்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
அக்காலத்தில் அகநானூறு, பெரு நாராற்றுப் படை, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் தேற்றான் விதை பற்றி குறிப்புகள் உள்ளன.
தேற்றான் கொட்டை பயன்கள் :
தேற்றான் கொட்டை தண்ணீரை தெளிவுபடுத்துவதறகும், பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் காகிதம் மற்றும் ஜவுளித் தொழில்களில் பயன்படுத்தப் படும் பாலிசாக்கரைடு பசை தயாரிக்கப் பயன்படுகிறது.
தேற்றான் கொட்டை மருத்துவ பயன்கள் :
கொழுப்பைக் குறைக்கவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும், இரத்தத்தை சீராக்கவும், அடிக்கடி சிறு நீர்க் கழித்தலைக் குறைக்கவும், உடலைத் தேற்றவும், பால் வினை நோய்களால் ஏற்படும் புண்களை குணப்படுத்தவும், விந்து எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும் மருந்துகள் மற்றும் சூரணங்கள், லேகியங்கள் தயாரிக்கப் பயன் படுகிறது.
தேற்றான் கொட்டை நன்மைகள் :
நீரைத் தெளிய வைக்கும் பண்பு கொண்டதால் இது ஆங்கிலத்தில் ‘கிளியரிங் நட்ஸ்’ (Clearing Nuts) அதாவது சுத்தம் செய்யும் கொட்டை என்று அழைக்கப்படுகிறது.
தேற்றான் கொட்டை நன்மைகள் பின்வருமாறு
தோல் நோய்கள் நீங்க :
தேற்றான் கொட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் தோல் நோய்களுக்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
இதன் தாவர வேரை அரைத்து தோலில் பூசினால் தோல் அரிப்பு, எரிச்சல், தோலழற்சி மற்றும் பிற தோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது :
தேற்றான் கொட்டைப் பொடியுடன் தேன் கலந்து மஞ்சள் காமலை நோய்க்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
சிறுநீர் தொற்றுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது :
அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று போன்ற உபாதைகளுக்கு தேற்றான் கொட்டை சிறந்த தீர்வாக உள்ளது.
தேற்றான் கொட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அரை டீஸ்பூன் அளவு வெந்நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் படிப்படியாக குணமாகும். மேலும் இது சிறுநீரகக் கோளாறுகளையும் குணப்படுத்த உதவுகிறது.
புண்களை ஆற்ற உதவுகிறது :
பாலுறவு நோய்களால் ஏற்படும் பாலியல் தொடர்பான புண்களை குணப்படுத்த தேட்ரான் கொட்டை பொடி உதவுகிறது.
மேலும் இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் உதவுகிறது.
கண் எரிச்சல் நீங்க :
கண்களில் ஏற்படும் அதிக உஷ்ணம், வீக்கம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தேற்றான் கொட்டை சிறந்த தீர்வாக உள்ளது.
தேட்ரான் கொட்டைப் பொடியை கண்களைச் சுற்றிப் பூசுவது கண் தொடர்பான பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது :
தேற்றான் கொட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப் படுகிறது.
தேற்றான் கொட்டைச் சாற்றில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும் தாவரக் கலவைகள் உள்ளதாக ஆவுகளில் தெரிய வந்துள்ளது.
ஜீரணக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது :
தேற்றான் கொட்டை ஜீரணத்திற்கு உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது.
மேலும் இது வயிற்றுப்போக்கு, மலச் சிக்கல் போன்ற ஜீரணக் கோளாறுகளுக்கு சிறிதளவு வாய் வழியாகக் கொடுக்கப்படுகிறது.
Sypulis affect
அருமையான பதிவு நன்றி