தேங்காய் எண்ணெய் நன்மைகள், பயன்கள், தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெய், தேங்காய் அல்லது கொப்பரை எனப்படும் உலர்ந்த தேங்காயை பிளிவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் முடி ஆரோக்கியாத்திற்கு தலையில் தேய்க்கும் எண்ணெயாகவும், உணவு சமைக்க சமையல் எண்ணெயாகவும், இன்னும் சில மருந்துகள் தயாரிக்க மருந்து எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் வகைகள் :
தேங்காய் எண்ணெய் அவை தயாரிக்கும் முறையை பொறுத்து கன்னி தேங்காய் எண்ணெய் அல்லது விர்ஜின் தேங்காய் எண்ணெய் மற்றும் ரிபைண்டு தேங்காய் எண்ணெய் அல்லது சுத்திகரிப்பட்ட தேங்காய் எண்ணெய் என இரண்டு வகையாக உள்ளன.
விர்ஜின் தேங்காய் எண்ணெய் புதிய தேங்காய்களையும், அதே சமயம் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் பொதுவாக கொப்பரையை தேங்காயை பயன்படுத்தியும் தயாரிக்கப்படுகிறது.
பொதுவாக கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணெயின் லேபிள்களில் பின்வருவன எழுதப் பட்டிருக்கும்.
தேங்காய் எண்ணெய் வகைகள் பின்வருமாறு
எக்ஸ்பெல்லர் பிரஸ்டு :
இயந்திரத்தின் மூலம் நீராவி அல்லது வெப்பத்தைப் பயன்படுத்தி தேங்காயை நன்றாக அழுத்தி பிழிந்து எண்ணெய் எடுப்பது.
கோல்டு பிரஸ்டு :
இந்த முறையில் எண்ணெய் வெப்பத்தைப் பயன்படுத்தாமல் அழுத்தப்படுகிறது. பொதுவாக வெப்பநிலை 120 டிகிரி பாரன் ஹீட்டிற்கு க்குக் கீழே உள்ளது
இது அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
ரீபைன்டு :
சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய் கொப்பரை தேங்காயை பயன்படுத்தி இயந்திரத்தில் அழுத்தி எண்ணெயை பிழிந்து பின்னர் ஆவியில் வேகவைக்கப்படுகிறது அல்லது எண்ணெயை வாசனை நீக்குவதற்கு சூடாக்கப்படுகிறது.
மேலும் அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற களிமண் மூலம் வடிகட்டுவதன் மூலம் “ப்ளீச்” செய்யப்படுகிறது.
சில சமயங்களில் ஹெக்ஸேன் போன்ற இரசாயன கரைப்பான்கள் எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படலாம். மேலும் இந்த முறையில் எடுக்கப்படும் எண்ணெய் சுவை மற்றும் மணமற்றது.
பகுதியளவு ஹைட்ரஜனேற்றம் :
இந்த முறையில் தேங்காய் எண்ணெயில் உள்ள சிறிய அளவு நிறைவுறா கொழுப்புகள் ஹைட்ரஜனேற்றம் அல்லது பகுதியளவு ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுகின்றன
தேங்காய் எண்ணெய் நன்மைகள் :
பொதுவாக கோல்டு பிரஸ்ட் முறையில் தயாரிக்கப் பட்ட தேங்காய் எண்ணெய் ஓப்பீட்டளவில் மற்ற முறைகளில் தயாரிக்கப் பட்ட எண்ணெய்களை விட அதிக ஊட்ட சத்துக்களை தக்கவைப்பதாக சொல்லப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பு :
தேங்காய் எண்ணெய் அதிலுள்ள லாரிக் அமிலம் காரணமாக பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த எண்ணெயில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பில் ஐம்பது சதவீதம் லாரிக் அமிலம் உள்ளது.
இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை திறம்பட கொல்லும் தன்மை உடையது.
மூட்டுவலி சிகிச்சை :
தேங்காய் எண்ணெயில் வலிமையான ஆக்ஸிஜனேற்றிகளான பாலி பினால்கள் உள்ளன.
அவை மூட்டுவலி நோயாளிகளுக்கு வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றன.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் :
தேங்காய் எண்ணெயை சூடு படுத்தி மசாஜ் செய்வது முழங்கால்கள் மற்றும் மூட்டுகளில் வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
லேசான சூடான எண்ணெயை கூந்தலில் தடவினால் மன சோர்வு நீங்கி தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தோல் மற்றும் முடி :
தேங்காய் எண்ணெய் நன்மைகள் பலவற்றில் முக்கியமானது சிறந்த மாய்ஸ்சரைசர், கிளீனர் மற்றும் சன்ஸ்கிரீன் பண்புகளைக் கொண்டுள்ளது ஆகும்.
அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கிட்டத்தட்ட அனைத்து தோல் கோளாறுகளையும் போக்குகின்றன.
தேங்காய் எண்ணெயைக் கொண்டு தலைமுடியை தினமும் மசாஜ் செய்வதன் மூலம் பொடுகு இல்லா உச்சந்தலையை உறுதி செய்ய முடியும். ஏனெனில் அது மயிர்க் கால்களுக்கு ஊட்டமளிக்கிறது.
வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது :
ஆயில் புல்லிங் எனப்படும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை வாயில் 20 நிமிடம் ஊறவைப்பதன் மூலம் வாயில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன.
மேலும் பற்கரை நீக்கி, ஈறுகளை பலப் படுத்தி வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மனநிறைவை மேம்படுத்துகிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் :
தேங்காய் எண்ணெயில் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சையிலும் உதவுகின்றன.
ஆஸ்டியோபோரோசிஸ் நோயினால் ஏற்படும் எலும்பு இழப்பையும் தேங்காய் எண்ணெய் குறைக்கிறது.
சிறந்த ஆற்றல் ஊக்கி :
தேங்காய் எண்ணெய் பெரும்பாலும் விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்படுகிறது.
ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு உடனடியாக ஆற்றலாக மாற்றப்படுகிறது. மேலும், விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது
எடை இழப்பு :
தேங்காய் எண்ணெய் வயிற்றில் உள்ள கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மற்ற சமையல் எண்ணெய்களை விட இந்தக் எண்ணெய் ஜீரணிக்க எளிதானது மற்றும் தைராய்டு மற்றும் நாளமில்லா அமைப்பு சீராக வேலை செய்ய உதவுகிறது.
யூனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தேங்காய் எண்ணெய் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் மேலும் ஆற்றலை எரிப்பதன் மூலம் கணையத்தின் அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது மற்றும் பருமனானவர்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது.
இதய ஆரோக்கியம் :
இதய நோய் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், விர்ஜின் தேங்காய் எண்ணெய் நிறைந்த உணவு நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதாகவும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அல்சைமர் நோய்க்கு நல்லது :
தேங்காய் எண்ணெய் அல்சைமர் நோயாளிகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த எண்ணெயில் நினைவாற்றலை அதிகரிக்கும் கீட்டோன்களில் அதிக அளவில் உள்ளது.
செரிமான ஆரோக்கியம் :
இந்த எண்ணெயில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான லாரிக் அமிலம் மற்றும் மோனோலாரின் கொழுப்பு அமிலங்கள் வலுவான ஆண்டி மைக்ரோபியல், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த பண்புகள் குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் பல்வேறு வகையான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
சர்க்கரை நோய் :
விர்ஜின் தேங்காய் எண்ணெய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது.
இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் இரத்த குளுக்கோஸின் பயன்பாட்டையும் தூண்டுகிறது.
எலும்பு ஆரோக்கியம்:
எலும்புகளின் வலுவுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உடலால் உறிஞ்சப்படும் திறனை உறிஞ்சும் திறனை ஊக்குவிக்கிறது.
எனவே பெண்களுக்கு 40 வயதிற்குப் பிறகு ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்படும் வாய்ப்பை குறைக்கிறது.
தேங்காய் எண்ணெய் தீமைகள் :
தேங்காய் எண்ணெய் நன்மைகள் பல கொண்டிருந்தாலும் அதிக அளவில் உட்கொள்ளும் போது சில பக்க விளைவுகளையை ஏற்படுத்துக்கின்றன.
தேங்காய் எண்ணெய் தீமைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. நிறைவுற்ற கொழுப்புகள் மிதமான அளவே உட்கொள்ளப்பட வேண்டும். அதிக அளவில் உட்கொள்வதால் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தேங்காய் எண்ணெய் குறுகிய காலத்திற்கு மருந்தாகப் பயன்படுத்தப் படும்போது பாதுகாப்பானது.
கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தேங்காய் எண்ணெய் சாப்பிடுவது பாத்துகாப்பானதா என்பது பற்றி போதுமான சான்றுகள் இல்லை.