தட்டை பயறு
தட்டை பயறு தமிழில் தட்டாம் பயறு, பெரும் பயறு, காராமணி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் விக்னா அங்கிகுலாட்டா (Vigna unguiculatal) ஆகும்.
இது ஆங்கிலத்தில் கௌ பீ என்றும் ப்ளாக் ஐட் பீ என்றும் அழைக்கப்படுகிறது.
இது உலகின் பல பகுதிகளில் உயர்தர தாவர புரத ஆதாரமாக உட்கொள்ளப்படும் ஒரு பருப்பு வகையாகும்.
இதிலுள்ள அதிக புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு காரணமாக ஊட்ட சத்துள்ள உணவுகளின் பட்டியலில் உள்ளது.
தட்டை பயரில் ஏராளமான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கிய சத்துக்கள் உள்ளன.
மேலும் அவற்றில் ஃபைடிக் அமிலம் மற்றும் புரோட்டீஸ் தடுப்பான்கள் போன்ற ஆன்டிநியூட்ரியன்களிலும் நிறைந்துள்ளன.
தட்டாம் பயரை ஊற வைத்து உண்பதன் மூலம் அதன் ஊட்டச் சத்து எதிர்ப்பு பண்புகளைக் குறைத்து உடலுக்கு சத்து கிடைப்பதை அதிகரிக்கலாம். கௌபீஸின் சில ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு:
தட்டைப் பயறு நன்மைகள் :
நார்ச்சத்து, தாவர அடிப்படையிலான புரதங்கள், வைட்டமின்கள், இரும்புச் சத்து , செலினியம், துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் நிறைந்த பெரும் பயரில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
எடை குறைப்பு :
தட்டாம் பயரில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் தாவர அடிப்படையிளான புரதங்கள் பசி ஹார்மோன்களைக் குறைத்து எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
மேலும் கரையக்கூடிய நார்ச்சத்துகள் நன்மை செய்யும் குடல் பாக்டீரியாவை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
இதய ஆரோக்கியம் :
கௌபீஸை தொடர்ந்து உட்கொள்வது எல்.டி.எல் அதாவது கெட்ட கொழுப்பு மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
மேலும் இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோய்க்கு நல்லது :
தட்டை பயரில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கிறது.
எனவே, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
சிறந்த ஆக்சிஜனேற்றி :
பெரும் பயரில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
அவை செல் சேதம் மற்றும் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
இளமையோடு வைத்திருக்க உதவுகிறது
பெரும் பயரில் உள்ள சத்துக்கள் கொலாஜன் தொகுப்பையும் ஊக்குவித்து தோல் பழுதுபார்ப்பை மேம்படுத்துகிறது.
மேலும் வயது மூப்பு தொடர்பான அறிகுறிகளைக் குறைக்கிறது மற்றும் சருமபளபளப்பை அதிகரிக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு நல்லது :
தட்டாம் பயரில் ஏராளமான அளவு பி வைட்டமின்களில் ஒன்றான ஃபோலேட் வைட்டமின் உள்ளது.
இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருவில் வளரும் கரு வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும்.
சிறந்த ஆற்றல் மூலம் :
பெரும்பயறு ஒரு அரை கப்பில், ஆரோக்கிமான ஆண்களுக்கு தினசரி தேவையாக பரிந்துரைக்கப்பட்ட மாங்கனீஸில் 40 சதவீதமும், பெண்களுக்கு 52 சதவீதமும் உள்ளது.
மாங்கனீசு ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது உடலின் ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு காரணமான செல் கட்டமைப்புகளைப் பாதுகாக்கிறது.
மேலும் பெரும் பயரில் உள்ள புரதம் உடல் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.
கண் ஆரோக்கியம் :
தட்டைப்பயறு அரை கப்பில் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் ஏவில் 13 சதவீதம் உள்ளது.
வைட்டமின் ஏ உங்கள் கருவிழியைப் பாதுகாப்பதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வைட்டமின் ஏ கண்களுக்கு உயவுத் தன்மையை உடல் உருவாக்க உதவுகிறது மற்றும் விழித்திரையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
முடி ஆரோக்கியம் :
பெரும் பயரில் முடி வளர்ச்சியை அதிகரித்து முடி உதிர்வதைத் தடுக்கும் முடிக்கு உகந்த ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
அடிக்கடி முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தட்டாம் பயிரை அதிக அளவில் உட்கொள்வது, முடி உதிர்தலை குறைக்க உதவும்.
எலும்புகளை பலப்படுத்துகிறது :
தட்டாம்பயறு ஒரு அரை கப்பில் ஆரோக்கியமான சராசரி நபருக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட கால்சியம் உட்கொள்ளல் அளவில் 8 சதவீதம் உள்ளது. இது எலும்பு வலிமைக்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லது :
ஒரு அரை கப் பெரும் பயரில் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட ஃபோலேட் உட்கொள்ளலில் 44 சதவீதம் உள்ளது.
இது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மூளை மற்றும் முதுகுத் தண்டு குறைபாடுகளின் வாய்ப்பைக் குறைக்க உதவும் முக்கிய ஊட்ட சத்து ஆகும்.
தட்டைப் பயறு தீமைகள் :
தட்டாம் பயரில் வயிற்றை சீர்குலைக்கும் ஒரு வகையான நார்ச்சத்து ரஃபினோஸ் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் வலி, வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
இருப்பினும், சமைப்பதற்கு முன் ஊறவைப்பதன் மூலம் ரஃபினோஸின் உள்ளடக்கத்தை குறைத்து சீரான செரிமானத்தை ஊக்குவிக்கலாம்.
மேலும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப் படுவதைத் தடுக்கக்கூடிய பைடிக் அமிலங்கள் போன்ற ஆன்டிநியூட்ரியன்ட்களும் இதில் உள்ளன.
எனவே, அவற்றை ஊறவைத்து சமைப்பது உண்பது சிறந்தது. இது பைடிக் அமில அளவைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும்.