டிராகன் பழம் நன்மைகள், டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் டிராகன் பழம் தீமைகள் பற்றி பதிவிடப்பட்டுள்ளது.
டிராகன் பழம் :
டிராகன் பழம் தமிழில் தருகன் பழம், அகிப் பழம், விருத்திரப் பழம் என்று அழைக்கப்படுகிறது. டிராகன் பழம் சமீப காலமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதன் வெளிப்பகுதி கண்ணைக் தவரும் சிகப்பு நிறத்தில், வெளிர் பச்சை நிற செதில் களோடு காணப்படுகிறது. இந்த அமைப்பு ‘டிராகன்’ எனும் மிருகத்தை நினைவுபடுத்துவதால், இது ‘டிரா கன் பழம்’ என்று அழைக்கப்படுகிறது.
டிராகன் பழத்தின் உட்பகுதி வெள்ளை நிற சதைப்பற்றைக் கொண்டது. சிறிய கருப்பு நிற விதைகள் உட்பகுதி முழுவதும் பரவிக் காணப் படுகின்றன.
டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள் :
டிராகன் பழம் நன்மைகள் :
(பிதயா) தருகன் பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச் சத்துக்களைக் கொண்டுள்ளது.
எடை குறைப்பு :
தருகன் பழத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். இந்தப் பழத்தை அப்படியே சாப்பிட முடியாதவர்கள். சாலட்டாக செய்து சாப்பிடலாம்.
வைட்டமின்-சி யின் சிறந்த மூலமாகும் :
ட்ராகன் பழம் வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும். 100 கிராமுக்கு சுமார் 8-9 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது தினசரி தேவைக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள அளவில் 12-15% ஆகும்.
வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது, உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கும், தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதற்கும் உடலுக்கு சக்தியை அளிக்கவும் உதவுகிறது
ஆஸ்துமா :
சளியால் உண்டாகும் ஆஸ்துமா, இருமல் போன்ற நோய்களுக்கு தருகன் பழம் சிறந்த மருந்தாகும்.
இதில் உள்ள வைட்டமின் சி ஆஸ்துமாவை குணப் படுத்தும் தன்மை கொண்டது.
இரத்த சோகை :
இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்தசோகை நோய் குண மாகும்.
புற்றுநோய் :
தருகன் பழத்தில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி2 போன்ற சத்துக்கள் உள்ளன.
மலச்சிக்கல் :
உண்ணும் உணவு நன்றாக செரித்து, கழிவுகள் வெளியேறுவதற்கு நார்ச்சத்து அவசியமானது.
தருகன் பழத்தில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது.
இதன் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
கண் குறைபாடு :
தருகன் பழத்தில் புரதங்கள், என்சைம்கள் உள்ளன. இவை செல்களைப் புதுப்பிக்கவும், சீர் செய்யவும் உதவுகின்றன.
கண் அழுத்த நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு தருகன் பழத்திலுள்ள சத்துக்கள் உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவை நுரையீரல், சிறுநீரகத்தின் முறையான செயல்பாட்டிற்கும் உதவுகின்றன.
வைட்டமின் ஏ யின் சிறந்த மூலமாகும் :
ட்ராகன் பழத்தில் வைட்டமின்-ஏ மற்றும் கரோட்டினும் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீன் இணைந்து சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
இது கண் ஆரோக்கியாத்தையும் மேம்படுத்துகிறது. சருமத்தை பராமரிக்க வைட்டமின்-ஏ தேவைப்படுகிறது.
கரோட்டின் நிறைந்த இயற்கை பழங்களின் நுகர்வு நுரையீரல் மற்றும் வாய்வழி குழி புற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதாக அறியப்படுகிறது
நோய் எதிர்ப்பு சக்தி :
வைட்டமின் சி டிராகன் பழத்தில் நிறைந்துள்ளது. இதுநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், நியாசின், வைட்டமின் பி1, பைட்டோஅல்புமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள், நோய் ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை.
மேலும், தருகன் பழம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையுiம், ரத்த அழுத்தத்தையும் கட்டு்படுத்தும் திறன் கொண்டது.
முகப் பொலிவை கூட்டுகிறது :
தருகன் பழத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்களை குறைக்கலாம்.
இதில் உள்ள வைட்டமின் சி சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஆகும்.
இது சருமம் வெடிப்பதைத் தடுத்து சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இதயத்தை பாதுகாக்கிறது :
தருகன் பழத்தில் கெட்ட கொழுப்பை (எல்டிஎல் கொலஸ்ட்ரால்) குறைக்கும் பீட்டாலைன்கள் உள்ளது.
பழத்தின் உள்ளே இருக்கும் சிறிய கருமையான கருப்பு விதைகளில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
அவை இதயத்திற்கு நல்லது மற்றும் இருதய நோய்களின் அபாயங்களைக் குறைக்கிறது.
எலும்புகள் ஆரோக்கியம் :
ட்ராகன் பழத்தில் 18% மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகள் வலிமை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் சிறந்த உணவு :
ட்ராகன் பழத்தில் வைட்டமின் பி, ஃபோலேட் மற்றும் இரும்பு சத்து உள்ளது. இது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்ற பழமாக அமைகிறது.
பி வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் ஆற்றலை அதிகரிக்கிறது.
மேலும் இதில் உள்ள கால்சியம் கருவின் எலும்பு வளர்ச்சிக்கு காரணமாகும். மெக்னீசியத்தின் உள்ளடக்கம் பெண்களுக்கு மாதவிடாய் நின்ற சிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
தருகன் பழத்தின் விதைகள் பைட்டோஅல்புமின் என்ற ஆக்ஸிஜனேற்ற பைட்டோ கெமிக்கல் கலவையைக் கொண்டுள்ளன.
பைட்டோ அல்புமினின்கள் பசியின்மை போக்குகிறது. மற்றும் மலமிளக்கியாகவும் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உதவி செய்கிறது
டிராகன் பழம் தீமைகள் :
நல்ல செய்தி என்னவென்றால், டிராகன் பழத்தை சாப்பிடுவதால் எந்தவிதமான பக்க விளைவுகள் அல்லது உடல்நல அபாயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
எனினும் ட்ராகன் பழம் அலர்ஜி சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்துவது போல் உணர்ந்தால் தவிர்த்து விடுவது நல்லது.
அதிக அளவு பொட்டசியம் இருப்பதால் சிறு நீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.