தர்பூசணி விதை நன்மைகள், சத்துக்கள்

0

தர்பூசணி விதை நன்மைகள், தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

தர்பூசணி விதை  :

பொதுவாக பழங்கள் சாப்பிடும்போது சதை பற்றுள்ள பகுதிகளை சாப்பிட்டு விட்டு கொட்டைகளை (விதைகளை) உமிழ்வது வழக்கம்.

தர்பூசணி விதை

ஆனால் தர்பூசணி விதைகளில் உள்ள ஊட்டச் சத்துக்களை பற்றி தெரிந்திருந்தால் அவற்றை யாரும் தூக்கி எரிய மாட்டார்கள்.

தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள் :

தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த கலோரிகள் :

ஒரு அவுன்ஸ் தர்பூசணி விதையில் தோராயமாக 158 கலோரிகள் உள்ளது. இது லேஸின் உருளைக்கிழங்கு சிப்ஸ் (160 கலோரிகள்) ஐ விட அதிகம் ஆகும்.

மெக்னீசியம் :

தர்பூசணி விதை 4 கிராமில் 21 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. இது தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ள மதிப்பில் 5 சதவிகிதம் ஆகும்.

இரும்பு சத்து

ஒரு சில தர்பூசணி விதைகளில் 0.29 மி.கி இரும்பு சத்து உள்ளது. அல்லது தினசரி மதிப்பில் சுமார் 1.6 சதவீதம் உள்ளது.

இருப்பினும், தர்பூசணி விதைகளில் பைட்டேட் எனும் சேர்மம் உள்ளது. இது இரும்பு உறிஞ்சுதலைக் குறைத்து அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கிறது.

நல்ல கொழுப்புகள் :

தர்பூசணி விதைகள் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும்.

ஒரு பெரிய கைப்பிடி (4 கிராம்) முறையே 0.3 மோனோ சாச்சுரேட்டட் மற்றும் 1.1 கிராம் பாலி சாச்சுரெட்டட் கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது.

துத்தநாகம் :

தர்பூசணி விதைகள் துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும். தர்பூசணி விதை ஒரு அவுன்ஸில் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட மதிப்பில் சுமார் 26 சதவிகிதம்  உள்ளது.

இருப்பினும், இரும்பைப் போலவே, பைட்டேட்டுகளும் துத்தநாகத்தை உறிஞ்சுவதை குறைக்கின்றன.

தர்பூசணி விதை நன்மைகள் :

தர்பூசணி விதைகளில் புரதங்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

தர்பூசணி விதை நன்மைகள்

இது உடலுக்கு ஆச்சரியமான பலன்களை வழங்க உதவுகிறது. சில முக்கியமான தர்பூசணி விதை நன்மைகள் இங்கே விவரிக்கப் பட்டுள்ளன.

சரும ஆரோக்கியம் :

முளைத்த தர்பூசணி விதைகள் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முதலியவை நிறைந்திருப்பதால் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

தர்பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது ஒட்டுமொத்த சரும தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

இது அரிப்பு, தோலழற்சி மற்றும் வறண்ட தோல் மற்றும் பிற தோல் சம்பந்தமான பிரச்சினைகளை போக்குகிறது.

இதில் காணப்படும் துத்தநாகம் அதன் புரதக் கட்டுமான பொருள்கள் தோல் செல்களின் வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகிறது.

முடியை வலுப் படுத்துகிறது :

தர்பூசணி விதைகளில் புரதங்கள், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது,

அவை முடியை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

விதைகளில் உள்ள மாங்கனீசு முடி உதிர்தல் மற்றும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம் :

தர்பூசணி விதைகள் இதய ஆரோக்கியத்தை பல வழிகளில் ஊக்குவிக்குகிறது.

மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாக உள்ளது.

இந்த நல்ல கொழுப்புகள் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த விதையில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது, இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து சாதாரண இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

தர்பூசணி விதைகள் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வாசோடைலேட்டராக (இரத்த நாளங்களின் விரிவாக்கம்) செயல்படுகின்றன.

இது இதயத்தின் ஆரோக்கியமான செயல் பாட்டிற்கு காரணமாக அமைகிறது.

முழு உடலிலும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்வதில்  இரும்பு சத்து முக்கியமானது.

தர்பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது.  இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது உங்கள் இதயத்தில் கால்சியம் இயக்கங்களை ஒழுங்கு படுத்துகிறது.

இரத்த சர்க்கரை :

இரத்த சர்க்கரையின் ஏற்ற இறக்கங்களால் அவதிப் படுபவர்கள்  இந்த விதைகளை உங்கள் உணவில் சேர்க்க முயற்சிக்கவும்.

மெக்னீசியம் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கும் கார்போ ஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.

இந்த விதைகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி :

தர்பூசணி விதைகளில் இரும்பு சத்து மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. அவை நோயெதிர்ப்பு செயல்பாடுகளை மேம் படுத்துகின்றன. இந்த விதைகளில் பி வைட்டமின்களும் உள்ளன.

ஆஸ்டியோபோரோசிஸ் :

எலும்புகள் பலவீனமாக இருந்தால் மற்றும் எலும்புப்புரை போன்ற நிலைமைகள் இருந்தால் உணவில் தர்பூசணி விதைகளை சேர்க்க முயற்சி செய்யவும்.

தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் எலும்பு கோளாறுகளை தடுக்கலாம். ஏனெனில் அவை மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் நிறைந்தவை.

நரம்பு மண்டலம் :

தர்பூசணி விதைகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தர்பூசணி விதை நன்மைகள் பலவற்றில் ஓன்று அது வைட்டமின் B யின் வளமான ஆதாரமாகும். மனநிலை கோளாறுகள், டிமென்ஷியா போன்ற கோளாறு உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

விந்து ஆரோக்கியம் :

சில சமயங்களில் தர்பூசணி விதை ஆண்மை குறைவுக்கு மருந்தாக செயல்படுகிறது.

தர்பூசணியில் அதிக அளவு துத்தநாகம் உள்ளது. இது ஆண் இனப்பெருக்க அமைப்புக்கு முக்கியமானது.

ஆண் மலட்டுத்தன்மையின் முக்கிய பிரச்சினையான விந்தணுவின் தரத்தை மேம்படுத்த துத்தநாகம் உதவும்.

ஆற்றல் :

தர்பூசணி விதைகளில் நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆற்றலை அதிகரிக்க மற்றும் நீண்ட காலத்திற்கு பராமரிக்க உதவுகிறது.

தர்பூசணி விதைகளைப் பற்றி பலருக்குத் தெரியாது என்றாலும், அவை மிகவும் சுவையாகவும், அதிக ஊட்டச்சத்துடனும் உள்ளன.

பசியாக உணரும் போதெல்லாம் அவற்றை சிற்றுண்டியாகச் சாப்பிடலாம், அது அதிக நேரம் ஆற்றலோடு வைத்திருக்கும்.