ஸ்ட்ராபெரி பழம் :
ஸ்ட்ராபெரி பழம் நன்மைகள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் தீமைகள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
ஸ்ட்ராபெரி பழத்தின் அறிவியல் பெயர் ஃப்ராகேரியா அனனாசா ஆகும். இது தமிழில் செம்புற்று பழம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் ஸ்ட்ரா பெர்ரி பழத்தில் 0.3 கிராம் கொழுப்பு, 0.7 கிராம் புரதம் மற்றும் 7.7 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதில் 4.9 கிராம் சர்க்கரை மற்றும் 2 கிராம் உணவு நார்ச் சத்து அடங்கியுள்ளது.
100 கிராம் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 1 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ, 58.8 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 0.29 மைக்ரோ கிராம் வைட்டமின் இ உள்ளது.
100 கிராம் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 0.41 மில்லி கிராம் இரும்பு, 16.00 மில்லி கிராம் கால்சியம், 153 மில்லி கிராம் பொட்டாசியம், 13 மில்லி கிராம் மக்னேசியம், 0.386 மில்லி கிராம் மாங்கனீசு உள்ளது.
ஸ்ட்ராபெரி பழம் நன்மைகள் :
ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது :
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பொதுவான இருமல் மற்றும் சளியை குணப்படுத்த உதவுகிறது.
ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் தினசரி தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு வைட்டமின் சி உள்ளது.
கீல் வாதத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது :
கீல்வாதம் வரும் வாய்ப்பை குறைக்கவும், கீல்வாத வலியைக் குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நச்சு நீக்கிகள் அதிக அளவில் உள்ளன.
தசைகள் மற்றும் திசுக்களின் சிதைவு, மூட்டுகளில் உள்ள மசகு திரவங்களை கட்டுப் படுத்துவது மற்றும் யூரிக் அமிலம் போன்ற நச்சுப் பொருட்கள் சேர்வது போன்றவை மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.
இதயத்தை பாதுகாக்கிறது :
ஸ்ட்ராபெர்ரிகளில் காணப்படும் அந்தோசயினின்களை மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இவை பிளேட்லெட் உருவாவதைத் தடுக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது.
எடை இழப்புக்கு உதவுகிறது :
ஸ்ட்ராபெர்ரி சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழம் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களான அடிபொனெக்டின் மற்றும் லெப்டின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
அவை பசியைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையைக் குறைக்கவும், உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இவை அனைத்தும் எடை இழப்பை ஊக்கு விக்கின்றன.
பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது :
ஸ்ட்ராபெர்ரி போலிக் அமிலத்தில் சிறந்த மூலமாகும். கர்ப்ப காலத்தில் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள போலிக் அமிலம் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது :
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள நார் சத்து செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது மேல் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
அவை குறிப்பாக குழந்தைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. ஸ்டான்ஃபோர்ட் சில்ட்ரன் ஹெல்த் ஸ்ட்ராபெர்ரிகளை குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு பரிந்துரைக்கிறது. ஏனெனில் அவற்றில் மிதமான நார்ச்சத்து உள்ளது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது :
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது உடலில் சோடியத்தின் விளைவுகளை கட்டுப் படுத்துகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப் படுத்துகிறது :
மற்ற பழங்களை விட ஸ்ட்ராபெர்ரி பழத்தில் குறைவான கிளைசெமிக் குறியீடே உள்ளது. இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.
தினமும் ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்டால் நீரிழிவு தொடர்பான சிக்கல்களைக் குறைக்கலாம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
கண் புரையை தடுக்கிறது :
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் கனிசமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.
மேலும் கண்புரை அபாயத்தைக் குறைப்பதன் மூலமும், ஆரோக்கியமான கண் இரத்த நாளங்களை ஊக்குவிப்பதன் மூலமும், வயது முதிர்வால் ஏற்பாக் மாகுலர் சிதைவை தடுக்கிறது.
சிறந்த ஆற்றல் மூலமாகும் :
ஸ்ட்ராபெர்ரி பழம் எளிய கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும். இது விரைவாக ஆற்றலாக மாற்றப் படுகிறது.
மேலும் இதில் உள்ள அதிக நார்ச்சத்து நீண்ட நேரம் சோர்வடையாமல் இருக்க உதவுகிறது.
பற்களை வெண்மை யாக்குகிறது :
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்க உதவுகிறது.
ஒரு ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் பேக்கிங் சோடாவை கலந்து பிசைந்து பல் துலக்க பல் வெண்மை பெரும்.
ஸ்ட்ராபெரி பழம் தீமைகள் :
அதிக அளவில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிக அளவுக்கு சாப்பிடுவது இரத்த போக்கு கோளாறு உடையவர் களுக்கு இரத்தப்போக்கை அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் கவனத்துடன் சாப்பிட வேண்டும்.
அதிகப்படியான ஸ்ட்ராபெரி பழங்களை உட்கொள்வது சில நபர்களுக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும். மேலும் நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, ரிஃப்ளக்ஸ் மற்றும் வீக்கம் போன்றவை ஸ்ட்ராபெர்ரி அதிக அளவு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகும்