சோற்றுக் கற்றாழை நன்மைகள் மற்றும் தீமைகள்

0

சோற்றுக் கற்றாழை :

சோற்றுக் கற்றாழை அறிவியல் பெயர் அலோவேரா ஆகும். இது ஆங்கிலத்திலும் அலோவேரா என்றே அழைக்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையில் 99.5% நீர் காணப்படிகிறது. மேலும் மியூகோபோலிசாக்கரைடுகள், அமினோ அமிலங்கள், ஹைட்ராக்ஸிகுவினோன் கிளைகோசைடுகள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் சிக்கலான கலவையால் ஆனது.

கற்றாழை அதன் நன்மைகள் காரணமாக ஆயுர்வேதத்தில் “குமரி ” என்று அழைக்கப்படுகிறது.

இந்த பதிவில்  சோற்றுக் கற்றாழை பயன்கள், நன்மைகள், தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி காணலாம்.

சோற்றுக் கற்றாழை நன்மைகள் :

சோற்றுக் கற்றாழை அதன் ஆரோக்கியம் மற்றும் மருத்துவப் பண்புகளுக்காக பாரம்பரியமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. சோற்றுக் கற்றாழை நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

செரிமான அமைப்புக்கு நல்லது:

சோற்றுக் கற்றாழை செரிமான அமைப்பை சுத்தம் செய்ய உதவுகிறது. இது குடல் இயக்கத்திற்கும் உதவ, சிறந்த மலமிலக்கியாகவும் செயல் பட்டு மலச்சிக்கலை தடுக்கிறது.

இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) சிகிச்சையில் உதவுகிறது.

நச்சு நீக்க உதவுகிறது :

கற்றாலைச் சாறு, வெறும் வயிற்றில் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது செரிமான அமைப்பையும் சுத்தப்படுத்துகிறது.

வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது :

அலோவேரா நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு காரணமாக மவுத்வாஷ்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது பல் ஈறுகளில் உள்ள பிளேக்குகள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மேலும் ஈறுகளில் இரத்தப்போக்கைக் குறைக்கவும் உதவுகிறது.

அலோவேராவின் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு வாய் முழுவதும் கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது:

கற்றாலை உட்கொள்ளும் போது, ​​இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்கிறது.

அலோவேரா வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

அலோவேரா சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளைக் கொன்று, பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.

காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது:

அலோவேரா பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து காயங்கள் விரைவில் ஆறுவதை ஊக்குவிக்கிறது.

தீக்காயங்கள், வெட்டுக்கள், பூச்சி கடித்தல் மற்றும் அரிக்கும் தோலழற்சிக்கு சிகிச்சையளிக்க இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது :

கற்றாலை சாறு குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது.

மேலும் இது பசியைக் குறைத்து நிறைவாக வைத்திருப்பதில் உதவி செய்வதன் மூலம் அதிகப்படியான கலோரிகள் உட்கொள்வதைத் தடுக்கிறது.

மேலும் இது வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்குவிப்பதன் மூலம் கொழுப்பை எரித்து எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.

பழங்கள் ஆயுளை அதிகரிக்கிறது:

சில பழங்கள் மற்றும் காய்கறிகள் மீது அலோவேரா ஜெல் பூசுவது அவற்றின் ஆயுளை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்தது அவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

சோற்றுக் கற்றாழை சாப்பிடும் முறை :

சோற்றுக் கற்றாழை மேற்பகுதியை நீக்கிவிட்டு உள்ளே உள்ள ஜெல் போன்ற அமைப்பைத் தான் சாப்பிட வேண்டும்.

இந்த ஜெல் போன்ற அமைப்பு கற்றாழைச் சோறு என்றும் அழைக்கப்படுகிறது.

சாப்பிடும் முன் இந்த ஜெல் பகுதியை தனியாகப் பிரித்து குறைந்தது பத்து முறை அரிசி கலைந்த தண்ணீரில் அல்லது சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

இந்த ஜெல்லில் உள்ள பிசு பிசுப்பு தன்மை முற்றிலும் நீங்கும் வரை கழுவ வேண்டும்.

கற்றாழை தீமைகள் :

கற்றாழை ஜெல் பூச்சாக பயன்படுத்துவது சிலருக்கு தோல் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

அத்தகையவர்கள் அலோவேரா பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்களுக்கு கற்றாளை ஜெல்லை நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற சமையலறை பொருட்களுக்கு ஒவ்வாமை இருப்பவர்கள் கற்றாளை ஜெல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை ஏதாவது இருப்பின் இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே கற்றாழையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கற்றாழையை வாய்வழியாக உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

கற்றாளை உட்கொள்வது மற்ற மருந்துகளின் உறிஞ்சுதல் திறனைக் குறைக்கும். எனவே ஏதேனும் மருந்துகளை உட்கொள் பவர்கள் மருத்துவர் ஆலோசனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கற்றாளையில் மலமிளக்கிய பண்புகள் உள்ளதால், இது அதிக அளவு சாப்பிடும் போது வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

ஏதேனும் உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி சோற்றுக் கற்றாலை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அதிக அளவு அல்லது தொடர்ந்து அலோவேரா ஜெல் உண்பவர்களுக்கு கீழ் காணும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவை

  • குறைந்த பொட்டாசியம்
  • வயிற்றுப்போக்கு
  • தசை பலவீனம்
  • எலக்ட்ரோலைட் சமநிலையின்மை
  • வயிற்று வலி
  • சிறுநீரக பிரச்சனைகள்