சோடியம் பயன்கள் மற்றும் தீமைகள்

5

சோடியம்

சோடியம் என்பது மிகவும் வினைத்திறன் கொண்ட ஒரு வகை உலோகம் ஆகும். இது மிகவும் எதிர்வினையாக இருப்பதால் இயற்கையில் எப்போதும் உப்பாகவே காணப்படுகிறது.

சோடியத்தின் மிகவும் பொதுவான உணவு வடிவம் சோடியம் குளோரைடு ஆகும். சோடியம் குளோரைடு பொதுவாக டேபிள் உப்பு என்று குறிப்பிடப்படுகிறது.

சோடியம் பயன்கள் 

சோடியம் பயன்கள்

சோடியம் என்பது உடலின் எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாகும்.

உடலின் பெரும்பாலான சோடியம் இரத்தத்திலும் செல்களைச் சுற்றியுள்ள திரவத்திலும் உள்ளது.

சோடியம்  உடலில் நீர் சத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

சாதாரண நரம்பு மற்றும் தசை செயல்பாட்டில் சோடியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலுக்கு சோடியம் உணவு மூலம் கிடைக்கிறது மற்றும் அதை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் பாதி பேருக்கு சோடியம் அதிக அளவுக்கு உட்கொண்டாதால் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சோடியம் தினசரி தேவை :

ஆரோக்கியமான நபருக்கு தினசரி தேவையான சோடியத்தின் அளவு (RDI) என்பது 2,300 மிகி அல்லது சுமார் 1 தேக்கரண்டி உப்பு ஆகும்.

சிறுநீரகங்கள் சிறுநீரில் வெளியேற்றப்படும் சோடியம் அளவை சரிசெய்வதன் மூலம் உடலில் சோடியத்தின் சீரான அளவை பராமரிக்கிறது.

சோடியம் குறைபாடு :

உடலில் உள்ள நீர் சத்து சமநிலைப் படுத்துவதுக்கு சிறிது உப்பு அல்லது சோடியம் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்காக சிறுநீரகங்கள் சோடியம் மற்றும் நீர் சமநிலையை கட்டுப்படுத்தும் திறனை இழக்கும்போது பின் வரும் அறிகுறிகள் தோன்றுகின்றன

தாகம்  , உயர் இரத்த அழுத்தம் , டயாலிசிஸ் போது அசௌகரியம்.

உணவில் சோடியம் அளவை குறைவாகப் பயன்படுத்துவதன் மூலம், இந்தப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தலாம்.

சோடியம் தீமைகள் :

சோடியம் நுகர்வு மற்றும் இழப்பு சரிவிகிதத்தில் இல்லாதபோது, உடலில் உள்ள மொத்த சோடியத்தின் சமநிலை பாதிக்கப்படுகிறது.

இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைவது ஹைப்போ நட்ரேமியா, அதிகரிப்பது ஹைப்பர்நட்ரேமியா என்றும் அழைக்கப்படுகிறது.

அதிக அளவு சோடியம் உள்ள உள்ள உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது அல்லது அளவுக்கு அதிகமான சமையல் உப்பை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வது இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் சிரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

எனவே அத்தகைய நபர்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து சோடியம் சேர்த்து கொள்வது அவசியம் ஆகும்.

அதிகப்படியான சோடியம் உட்கொள்ளல் நினைவக இழப்பையும் ஏற்படுத்தலாம்.

சரிவிகித உணவில் சோடியம் ஒரு முக்கியமான சத்தாகும். இருந்தபோதிலும், அது உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிற்று புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

5 COMMENTS