புடலங்காய் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள

0

புடலங்காய் மருத்துவ நன்மைகள். பயன்கள். புடலங்காய் தீமைகள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள்

புடலங்காய் :

புடலங்காய் அறிவியல் பெயர் ட்ரைக்கோசாந்தஸ் குக்குமெரினா (Trichosanthes cucumerina) ஆகும். இது ஆங்கிலத்தில் சினேக் கார்டு (Snake Gourd) என்று அழைக்கப்படுகிறது.

புடலங்காய்

இதன் பூர்வீகம் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகும்.

புடலங்காயில் ஆரோக்கியத்திற்கு அவசியமான பல்வேறு ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச் சத்து , புரதம் மற்றும் கலோரிகள் உள்ளன.

மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, மற்றும் மாங்கனீசு, மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் அயோடின் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

புடலங்காய் நன்மைகள் :

நீரிழிவு நோய்க்கு நல்லது :

சர்வதேச உயிரியல் மற்றும் வேதியியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி புடலங் காய் சாதாரண மற்றும் ஸ்ட்ரெப்டோசோடோசின் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

புடலங்காயை நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.

காய்ச்சலை குறைக்கிறது :

புடலங் காய் கஷாயம் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.

ஒரே இரவில், காய்ச்சல்கள் குறைந்து குணமாகும் என்று சொல்லப்படுகிறது

நச்சு தன்மையை நீக்குகிறது :

புடலங் காய் பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு டையூரிடிக் மருந்தாக பயன் படுத்தப்படுகிறது ஏனெனில் இது கல்லீரலை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.

சிறுநீரை பெருக்குவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப் படுவதை துரிதப் படுத்துகிறது.

வறட்சி மற்றும் நீரிழப்பை குறைத்து சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

செரிமான கோளாறு களுக்கு நல்லது : 

செரிமான கோளாறு உடையவர்களுக்கு லேசான மலமிளக்கியாக செயல்படுகிறது.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடல் கோளாறுகள், தசைப்பிடிப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சும் செயல்முறையை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

சில ஆராய்ச்சிகளில் புடலங்காயில் ஆண்டிபயாடிக் பண்புகள் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளன.

மேலும் புடலங்காயில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் கரோட்டின் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் இணைந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்து கின்றன.

புடலங் காய் சைனஸ் மற்றும் சுவாசக் குழாய்களில் சீழ் மற்றும் கபத்தை தளர்த்துகிறது.

இது நோயெதிர்ப்பு அமைப்புக்கு மேலும் நன்மை பயக்கிறது.

எலும்பு ஆரோக்கியம் :

புடலங்காயில் கால்சியம் இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

கால்சியம் பற்றாக்குறை ஆஸ்டியோ போரோசிஸ், ஆஸ்டியோபீனியா மற்றும் ஹைபோகால்சீமியா போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

இதில் உள்ள வைட்டமின் டி உடலில் கால்சியம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கிறது. மேலும் கால்சியம் வயதாகும்போது எழும்பி ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அவசியமாகும்.

உடல் எடையை குறைக்கிறது :

புடலங்காயில் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளது. மேலும் பூஜ்ய அளவு கொழுப்பு இல்லை.

இது நீர்ச் சத்து மற்றும் நார்ச்சத்துடன் முக்கியமான ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் எடை குறைப்பு உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

கூந்தல் பராமரிப்பு :

புடலங் காய்  அலோபீசியாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

மேலும் மயிர்க் கால்களைப் பலப்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.

மேலும் அதில் உள்ள அதிக அளவு கரோட்டின் தோல் மற்றும் முடியை பராமரிக்க உதவுகிறது.

புடலங் காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது பொடுகை கட்டுப்படுத்துவதாக சொல்லப் படுகிறது.

புடலங்காய் மருத்துவ பயன்கள் :

புடலங்காய் இலைகளை, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு தேய்த்தால், உடனடி நிவாரணம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. உடல் வெப்பநிலை மற்றும் சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது.

புடலங் காய் இலைகளில் குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின் சி உள்ளது.

இது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிக்கிறது.

ஆயுர்வேத வைத்தியத்தில் கொத்தமல்லி விதைகளுடன் புடலங் காய் இலைகளை அரைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொண்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

புடலங்காய் பயன்கள் :

புடலங்காயில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் சுவை காரணமாக கூட்டு, பொரியல், சாம்பார் போன்ற பல விதமான சமயல்களில் பயன் படுத்தப் படுகிறது.

அதிலுள்ள வெள்ளரிக்காய் போன்ற சுவை மற்றும் அமைப்பு காரணமாக, அவை ஊறுகாய் செய்யவும் பயன்படுகின்றன.

நன்றாக பழுத்த புடலங் காய் கூல் சில நாடுகளில் தக்காளிக்கு மாற்றாக பயன்படுகிறது.

புடலங்காய் தீமைகள் :

புடலங்காய் விதைகள் அதிகமாக உட்கொண்டல் குமட்டல், அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும்  இரைப்பை கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. புடலங் காய் விதைள் அதிகமாக அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புடலங் காய் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த குறைந்த கலோரிகள் உள்ள காய்கறியை சிறிய அளவில் உட்கொள்வது தாய்க்கும் கருவுக்கும் நன்மை பயக்கும் ஆனால் அதிக அளவில் சாப்பிடுவது கருவுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது.