சியா விதைகள் :
சியா விதை இயற்கை வழங்கிய மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று என்றால் மிகையாகாது.
மேலும் கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைக்கவும் இதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது.
சியாவிதைகள் புதினா குடும்ப வகையை சார்ந்த தாவரமாகும். இதன் பூர்வீகம் மெக்ஸிக்கோ என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் சத்து நிறைந்த பூக்கும் வகை தாவரமாகும்.
இதில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுச் சத்துக்கள் உள்ளன. 100 கிராம் சியா விதையில் பி வைட்டமின்களான, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் ஃபோலேட்டின் சிறந்த மூலமாகும்.
மேலும் இந்த விதைகள் தாவர வகை புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் ஒரு சிறந்த மூலமாகும். சியாவிதைகள் மற்றும் சப்ஜா விதைகள் இரண்டும் ஒத்த தோற்றமாளித்தாலும் உண்மையில் இரண்டும் வேறு வகையாகும்.
சியாவிதையின் தாவரவியல் சால்வியா ஹிஸ்பானிகா (Salvia Hispanica) ஆகும்.
இது ஆங்கிலத்தில் சியா சீட்ஸ், சல்பா விதைகள் என்று அழைக்கப்படுகிறது.
சியா விதை நன்மைகள் :
சியா விதைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன;
சியா சீட்ஸ் மார்பக புற்றுநோய்க்கு சிறந்த தீர்வாக சொல்லப்படுகிறது.
இது செரிமான செயல்முறைக்கு உதவுகிறது மேலும் இரைப்பை மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எடை இழப்புக்கு உதவுகிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே இது செல் சேதத்தைக் குறைக்கிறது.
மூளைக்கு மிகவும் நல்லது.
இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இவை தோல், முடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த விதைகளில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருப்பதில் உதவுகிறது.
மேலும் நினைவகம், மனநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆற்றலை அதிகரிக்கிறது.
சியா சீட்ஸ்சில் க்வெர்செடின் என்ற ஒரு வகை ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது இதய நோய் உட்பட பல நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த விதைகளில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் இதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், சியாவிதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது சுருக்கங்களை நீக்கி சரும பளபளப்பு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க உதவும்.
சியா சீட்ஸ்களில் உள்ள அதிக அளவு பாஸ்பரஸ் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் உள்ள எல்-லைசின் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
சியாவிதைகளில் முடி, தோல் மற்றும் நகங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன.
சியா விதை தீமைகள் :
சியா விதைகள் பொதுவாக ஆரோக்கியமானது தான் மேலும் எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இது அனைத்து வயதினரும் சாப்பிடலாம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மை பயக்கும். இருப்பினும் எதாவது உடல் நல கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.
சியாவிதைகள் நார் சத்து நிறைந்திருப்பதால் அதிக அளவு உகொள்வது சிலருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிகப்படியான நார்ச்சத்து உட்கொள்வது வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சியா விதை சாப்பிடும் முறை :
சியா விதைகளை காலையில் குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்வது அவற்றை உட்கொள்வதற்கான சிறந்த நேரம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அவை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன மேலும் நாளின் ஒவ்வொரு உணவின் செரிமானத்திற்கும் உதவுகின்றன. இருப்பினும், சில ஆராய்ச்சிகள் இந்த விதைகளை இரவில் சாப்பிடுவது ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிப்பதாக சொல்கின்றன.