சேப்பங்கிழங்கு என்றால் என்ன, சேப்பங்கிழங்கு நன்மைகள் மற்றும் சேப்பங்கிழங்கு தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு என்பது உலகெங்கிலும் உள்ள பல்வேறு உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகை காய்கறி ஆகும்.
இது சேம்பு என்றும் சேப்பங்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இதான் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாக காணலாம்.
சேப்பங்கிழங்கு நன்மைகள் :
சேப்பங்கிழங்கில் முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஒரு கப் கிழங்கில் தினசரி பரிந்துரைக்கப்பட்ட மாங்கனீசு உட்கொள்ளல் அளவில் மூன்றில் ஒரு பங்கு மாங்கனீசு உள்ளது.
இது நல்ல வளர்சிதை மாற்றம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் இரத்தம் உறைதல் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது.
மேலும் இதிலுள்ள ஊட்ட சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆரோக்கியமான பார்வை, தோல், சுழற்சி மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற பல நன்மைகள் கொண்டுள்ளன.
சேப்பங்கிழங்கு நன்மைகள் பின்வருமாறு
குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது:
சேப்பங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் எதிர்ப்பு மாவுச்சத்து குடல் பாக்டீரியாவால் நொதிக்கப்பட்டு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது.
இது பெருங்குடல் புற்றுநோய் மற்றும் குடல் அழற்சி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
கண் ஆரோக்கியம்:
சேப்பங்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் கிரிப்டோக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஒட்டு மொத்த கண் ஆரோக்கித்திற்கு நண்மை பயக்கிறது.
இவை கண்களில் உள்ள செல்கள் முதிர்ச்சி அடைவதை மெதுவாக்குகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன :
சேப்பங் கிழங்கில் சிறந்த ஆக்சிஜனேற்றிகளான பாலி பினால்கள், குர்செட்டின், பீட்டா கரோட்டின்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைத்துள்ளன.
ஆக்சிஜனேற்றிகள் உடல் ஒட்டு மொத்த ஆரோக்கியாத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வழிகளில் உதவுகின்றன.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது :
மேலும் இதில் குறைந்த அளவு சோடியம் மற்றும் மிக மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது.
எனவே இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்த உணவு தேர்வாக உள்ளது. இருப்பினும் மருத்துவர் ஆலோசனை பெற்று உண்பது சிறந்தது.
உடல் எடை குறைப்பதில் உதவுகிறது :
சேப்பங் கிழங்கில் நார்ச் சத்து நிறைந்துள்ளது இது பசியைக் குறைத்து நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கிறது.
இதன் மூலம் உடல் எடை குறைப்பதில் உதவுகிறது. 100 கிராம் சேப்பங் கிழங்கில் 5.1 கிராம் நார்ச்சத்து மேலும் குறைவான கலோரிகள் உள்ளது.
இரத்த சர்க்கரை மேலாண்மை :
சேப்பங்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட், ரெசிஸ்டண்ட்ஸ்டார்ச் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நல்ல கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
மேலும் இது குறைந்த கிளைசமிக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
சேப்பங்கிழங்கில் அதிக அளவு உள்ள பொட்டாசியம் அதிகப்படியான உப்பை உடைப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் இது இருதய அமைப்பில் அழுத்தத்தை குறைக்கிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ இருதய பிரச்சினைகளை பெரிய அளவில் எதிர்த்துப் போராடுகிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது :
சேப்பங்கிழங்கில் குர்செடின் எனும் ஒரு வகை ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பியுள்ளன. இவை உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்ற செல் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
சரும ஆரோக்கியம் :
சேப்பங் கிழங்கில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
இவை சரும சுருக்கங்களைக் குறைத்து பளபளப்பான சருமத்தை ஊக்குவிக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்
சேப்பங்கிழங்கிலுள்ள மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியம், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கிறது. மெக்னீசியம் உடலை வலுவாகவும், சரியாக செயல்படவும் உதவுகிறது.
அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன :
சத்துக்கள் அதிகம் உள்ள சேப்பங்கிழங்கில் எதிர்பாராத அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.
இதில் இயற்கையாக உள்ள 20 அமினோ அமிலங்களில் கிட்டத்தட்ட 17 அமினோ அமிலங்களும் மற்றும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன.
இவை கெட்டக் கொழுப்பைக் கரைப்பதற்கும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.
சேப்பங்கிழங்கு தீமைகள் :
சேப்பங்கிழங்கு தீமைகள் சில பின்வருமாறு
சேப்பங்கிழங்கை ஒரு போதும் பச்சையாக உண்ணாக் கூடாது. இதில் கால்சியம் ஆக்சலேட் என்ற கசப்புச் சுவையுள்ள சேர்மம் உள்ளது. இது பச்சையாக சாப்பிடும் போது வாய் மற்றும் தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தும்.
இரைப்பை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சேப்பங் கிழங்கைத் தவிர்க்க வேண்டும்.
சேப்பங்கிழங்கு தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரக கற்கள் மற்றும் கீல்வாதத்தை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.