செலினியம் நிறைந்த உணவுகள் நன்மை, தீமைகள்

1

செலினியம்

செலினியம் நன்மைகள், பயன்கள், தீமைகள், செலினியம் நிறைந்த உணவுகள் மற்றும்  செலனியம் குறைபாடு பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

செலினியம் என்றால் என்ன?

செலினியம் உடலுக்கு தேவைப்படும் அத்தியாவிஷய கனிமங்களுள் ஒன்றாகும்.

இனப்பெருக்கம் முதல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது வரை உடலில் நடக்கும் பல அடிப்படை செயல்பாடுகளுக்கு அவசியமாகும்.

செலினியம்

உணவு வகைகளில் உள்ள செலினியத்தின் அளவு அவை வளர்ந்த மண்ணில் உள்ள செலினியத்தின் அளவைப் பொறுத்தது.

மேலும் மழை, ஆவியாதல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் pH அளவுகள் அனைத்தும் மண்ணில் உள்ள செலினியம் அளவை பாதிக்கலாம்.

இது உலகின் சில பகுதிகளில் செலினியம் குறைபாட்டை மிகவும் பொதுவானதாக ஆக்கலாம். இருப்பினும் இது ஒப்பீட்டளவில் அரிதானதாக சொல்லப்படுகிது.

செலினியம் மிகவும் குறையும் பொது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதே சமயம் அதிகப்படியான செலினியம் நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தும்.

செலினியம் தினசரி தேவை :

எவ்வளவு செலினியம் சரியானது என்பதைத் தீர்மானிக்க நேசணல் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் ஹெல்த் (National Institutes of Health) என்ற அமைப்பின் வழிகாட்டுதல்கள் கீழே குறிப்பிடப் பட்டுள்ளன.

14 வயதுக்கு மேல் உள்ள ஆரோக்கியமான நபருக்கு தினமும் 55 மைக்ரோ கிரமும், 9 முதல் 13 வயதுகள் வரை 40 மைக்ரோ கிரமும் 4முதல் 8 வயது வரை 30 மைக்ரோ கிராமும், 1 முதல் 3 வயது வரை 20 மைக்ரோ கிராமும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது

செலினியம் குறைபாடு :

செலினியம் குறைபாடு உடலில் அயோடின் இல்லாதபோது ஏற்படலாம். சில சமயங்களில் ஆரோக்கிய குறைபாடு காரணமாக உடலால் உறிஞ்சப் படும் திறன் குறைந்த நிலையிலும் தோன்றலாம்.

செலினியம் குறைபாடு அறிகுறிகள் :

செலினியம் குறைபாட்டினால் ஏற்படும் நோகளில் முடி உதிர்தல், சோர்வு, ஹைப்போ தைராய்டிசம், வாய் துர்நாற்றம், இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் சிரோசிஸ் போன்ற கல்லீரல் பிரச்சனைகளும் அடங்கும்.

செலினியம் தீமைகள் :

மனித உடலுக்கு  தேவையான செலினியம் உண்ணும் உணவு மூலம் கிடைக்கிறது. இது 400 மை. கி ஐ தாண்டக்கூடாது.

ஏனெனில் அதிகப்படியான செலினியம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

குழந்தையின்மை, கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணம் தொடர்பான உடல் நலப் பிரச்சினை களுக்கு வழிவகுக்கும்.

கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 60 ம். கி வரை செலினியம் தேவைப்படுகிறது.

செலினியம் பயன்கள் :

செலினியம் உடலில் நடைபெரும் பல செயல்பாடுகளில் பயன்படுகிறது. அவற்றில் சில

  • இனப்பெருக்கம்
  • தைராய்டு சுரப்பியின் செயல்பாடு  டிஎன்ஏ உற்பத்தி
  • உடல் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாத்தல் மற்றும்
  • புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் தொற்று நோயிலிருந்து உடலைப் பாதுகாத்தல்

செலினியம் நிறைந்த உணவுகள்:

செலினியம் நிறைந்த உணவுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • செலினியம் அதிகம் உள்ள உணவுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பிரேஸில் கொட்டை ஆகும். 100 கிராம் பிரேசில் கொட்டையில் 1917 மை. கி செலினியம் உள்ளது.
  • சூரியகாந்தி விதை 100 கிராமில் 79.3 மை. கி செலினியம் உள்ளது.
  • 100 கிராம் மெலிந்த மாட்டிறைச்சியில் 44.8 மை. கி செலினியம் உள்ளது.
  • 100 கிராம் கோழி இறைச்சியில்  37.8 மை. கி வரை செலினியம் உள்ளது.
  • 100 கிராம் சமைத்த சிப்பியில் 154 மை. கி செலினியம் உள்ளது.
  • 100 கிராம் மத்தி மீனில் தோராயமாக 52.7 மை. கி செலினியம் உள்ளது.
  • 100 கிராம் காளானில் 26.0 மை. கி.வரை செலினியம் உள்ளது.
  • ஒரு வேக வைத்த முட்டையில் 20 மை. கி செலினியம் உள்ளது.
  • ஒரு முட்டையில் 14 மை. கி செலினியம் உள்ளது.
  • ஒரு கோப்பை சமைத்த ஓட்ஸில் 13 மை. கி செலினியம் உள்ளது.
  • ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 5 மை.கி செலினியம் உள்ளது.

1 COMMENT