சீரகம் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் (ஜீரா)

0

சீரகம் நன்மைகள் மருத்துவ பயன்கள், பக்க விளைவுகள் மற்றும் சீரகம் தீமைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீரகம் :

சீரகம் குமினம் சிமினம் (Cuminum cyminum) என்ற தாவரத்தின் விதை ஆகும். இதன் பூர்வீகம் வடக்கு ஆசிய நாடுகள் ஆகும்.

சீரகம்

உலக அளவில் இந்தியா ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பயிரிடப் படுகிறது.

சீரகம் நன்மைகள் :

பல தலைமுறைகளாக அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு முதல் தலைவலி வரையிலான கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க சீரகத்தைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள மக்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கற்கள், கண் நோய் மற்றும் தொழுநோய்க்கு கூட இதைப் பயன்படுத்தினர்.

தற்போது ஆராய்ச்சிகள் சீரகத்தின் பாரம்பரிய பயன்பாடுகளில் உள்ள உண்மை தன்மையை நிரூபித்து வருகிறது.

சீரகம் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

கொழுப்பை குறைக்கிறது :

இதயதை பாதிக்கும் அதிக அளவு கொழுப்புகளை ஹைப்போ லிபிடெமிக்  என்னும் பொருள் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஜீரா ஹைப்போலிபிடெமிக் பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

ஒரு ஆய்வில், தயிரில் சீரகப் பொடி கலந்த உணவுப் பொருள் கொழுப்பைக் குறைக்க உதவியது என்று தெரிய வந்துள்ளது. ( 1, 2, 3. 4 )

பாக்டீரியா எதிர் பண்பு :

ஜீரா உடலில் உள்ள நோய்வாய்ப்படுத்தும் சில பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

உணவை விசமாக்கக்கூடிய ஈ.கோலை என்ற பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை இது கட்டுப்படுத்துவதாகக் தெரிய வந்துள்ளது. ( )

புற்றுநோய் தடுப்பு

உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி பெருகத் தொடங்கும் போது புற்றுநோய் உருவாகிறது.

புற்றுநோய் கட்டிகள் இந்த அசாதாரண உயிரணுக்களின் தொகுப்பாகும்.

பல விலங்குகளில் நடத்த பட்ட ஆய்வுகளில், கல்லீரல், வயிறு மற்றும் பெருங்குடல் புற்று நோய்களால் ஏற்படும் பல்வேறு வகையான கட்டிகளின் வளர்ச்சியை சீரக விதைகள் தடுக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். ( ).

எனினும் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களை சீரக விதைகள் தடுப்பது என்பது பற்றி ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

நீரிழிவு நோய் :

நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதன் அறிகுறி களையும் விளைவுகளையும் குறைக்க ஜீரா உதவுகிறது.

பாரம்பரியமாக நீரிழிவு நோய் மருந்துகளில் சீரகம் பயன்படுத்தப் படுகிறது.

ஒரு ஆய்வில் சீரக விதைகள் சாப்பிடுவது இரத்தத்தில் யூரியா அளவைக் குறைக்க உதவும் என்று தெரியவந்துள்ளது.

இருப்பினும் சீரகம் இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு கட்டுப் படுத்துகிறது என்பது பற்றி இன்னும் ஆய்வுகள் தேவை. ( )

சீரகம் உடல் எடை குறைய :

ஜீரா உடல் எடையை உதவக்கூடும் என்று பல ஆரம்ப கட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஒரு ஆய்வில், சீரகப் பொடியை எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் எடை, இடுப்பு சுற்றளவு, கொழுப்பு நிறை மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) ஆகியவற்றைக் குறைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ( )

நினைவாற்றல் :

ஜீரா மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கிறது. (… ).

உடலின் மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு ஜீரக விதைகள் உதவுதன் மூலம் பார்க்கின்சன் நோய்க்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளது.

சீரண ஆரோக்கியம் :

சீரகத்தில் நார்ச்சத்து மற்றும் கார்மினேடிவ், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது.

மேலும் சீரகத்தில் உள்ள ஆல்டிஹைடு மற்றும் பைரசின்கள் இயற்கையான மலமிளக்கியாக செயல் படுகின்றன.

மலம் வெளியேற்ற அமைப்பில் உள்ள காயங்கள், தொற்றுகள் மற்றும் மூல நோயை குணப்படுத்த உதவுகிறது. ( )

தூக்க மின்மையை போக்குகிறது :

சீரகத்தில் எண்ணெய்கள் மனதை அமைதிப் படுத்தும் ஹிப்னாடிக் பண்புகளை கொண்டுள்ளன.

இது பொதுவாக தூக்க மின்மையை ஏற்படுத்தும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.

மேலும் சீரகத்தில் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனான மெலடோனின் கணிசமான அளவு உள்ளது.

மேலும் இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற துக்களும் உள்ளன.

இவை அனைத்தும் மூளையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்து வதற்கும் சரியான நேரத்தில் தூக்கத்தைத் தூண்டுவதற்கும் அவசியமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

சீரக விதைகளில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமா மற்றும் சளி சிகிச்சைக்கு  தீர்வாக அமைகிறது.

இது ஒரு சளி நீக்கியாக செயல்பட்டு சுவாசக் குழாயில் உள்ள சளியை தளர்த்தி எளிதாக நீக்குகிறது.

மேலும் சீரக எண்ணெய் ஒரு கிருமி நாசினியாகவும், நோய்த் தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ( ).

ஆக்சிஜனேற்றிகளின் சிறந்த மூலம் :

சீரக விதைகளில் அபிஜெனின் மற்றும் லுடோலின் என்ற இயற்கை ஆக்ஸிஜனேற்றிகள் ல்களைத் தாக்கும் ப்ரீ ரேடிக்கல்களை குறைக்கின்றன.

ஆன்டிஆக்சிடண்ட்கள் சருமத்தை வயதான தோற்றத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

சீரகம் மருத்துவ பயன்கள் :

  • சீரகம் வயிற்றுப்போக்கு, பெருங்குடல், குடல் பிடிப்பு மற்றும் வாயு உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன் படுகிறது.
  • வீக்கத்தை போக்க சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்க டையூட்ரிக் ஆக பயன்படுகிறது.
  • மாதவிடாய் தொடங்க, மற்றும் பாலியல் ஆசையை அதிகரிக்க பாலுணர்வூட்டிகளில் பயன் படுகிறது.

சீரகம் தீமைகள் :

பொதுவாக அளவோடு சீரகம் உட்கொள்வது ஆரோக்கியமான நபர்களுக்கு எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்து வதில்லை.

ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுதும், ஏற்கனவே சில உடல் நிலை கோளாறு உடையவர்களுக்கும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்து கின்றன. சீரகம் தீமைகள் பின்வருமாறு

சீரகம் பக்க விளைவுகள் :

சீரகத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் சீரகம் தீமைகள் பற்றி காணலாம்.

சீரகம் போதைப்பொருள் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

எனவே, அவற்றை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.

அதிக அளவு உட்கொள்ள கூடாது. சீரக விதைகளின் அதிகப்படியான உட்கொள்ளல் மன மேகமூட்டம், அயர்வு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்து கின்றன.

கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் :

கர்ப்ப காலத்தில் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சீரகத்தை எடுத்துக்கொள்வதன் பாதுகாப்பு குறித்து போதுமான நம்பகமான ஆதாரங்கள் இல்லை.

இரத்தப் போக்கு கோளாறுகள் :

ஜீரா இரத்தம் உறைவதை தாமதப் படுத்துவதாக சொல்லப்படுகிறது.

இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் சீரகம் எடுத்துக் கொள்ளும் போது கவனம் தேவை.

நீரிழிவு நோய் :

சீரக விதைகள் சிலருக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீரிழிவு நோய் உடையவர்கள் சீரகத்தைப் பயன்படுத்தும் போது இரத்த சர்க்கரையை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை :

ஜீரா இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அறுவைசி கிச்சையின் போது மற்றும் அதற்குப் பிறகு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு சீரகத்தைப் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.