Homeஉணவுகள்காய்கறிகள்சர்க்கரைவள்ளி கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள்

சர்க்கரைவள்ளி கிழங்கு நன்மைகள் மற்றும் தீமைகள்

சர்க்கரைவள்ளி கிழங்கு (அ) இனிப்பு உருளைக்கிழங்கு நன்மைகள், பயன்கள்மற்றும் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரைவள்ளி கிழங்கு :

சர்க்கரை வள்ளி கிழங்கு இனிப்பு உருளைக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் இப்போமோயா பாட்டாடாஸ் ஆகும். இது நிலத்தடியில் தாவரத்தின் வேர் பகுதியில் வளரும்  கிழங்கு வகை காய்கறி ஆகும். இது ஊதா, சிவப்பு நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள், வெள்ளை நிறம் போன்ற நிரங்களில் காணப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் இதன் நிற வேறுபாடுகளுக்கு காரணம் ஆகும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரை வள்ளி கிழங்கு நார்ச்சத்து மற்றும் இரும்பு, கால்சியம், செலினியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறிப்பிட தக்க மூலமாகும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு நன்மைகள் :

சர்க்கரை வள்ளி கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு அவாசிமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு  கிழங்கு வகை காய்கறியாகும்.  உணவில் சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்ப்பதால் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு நன்மைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் தடுப்பு :

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஊதா நிற சர்க்கரை வள்ளி கிழங்கில் அந்தோசயினின்கள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் உயிரணுக்களின் அப்போப் டொசிஸை அல்லது திட்டமிடப்பட்ட செல் இறப்பை ஊக்குவிக்கிறது.

பார்வையைப் பாதுகாக்கிறது :

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான பீட்டா கரோட்டின் கனிசமான அளவு உள்ளது. ஒரு கப் சர்க்கரை வள்ளி கிழங்கில் 11.3 மில்லிகிராம் பீட்டா கரோட்டின் உள்ளது. 15 மில்லிகிராம் பீட்டா கரோட்டின் சப்ளிமெண்ட் எடுத்து கொள்வது வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷனில் இருந்து பாதுகாப்பதாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

இதய நோய் :

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள அந்தோசயினின்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளன. மேலும் அளர்ச்சிக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளன.

கொழுப்பை குறைக்க உதவுகிறது :

பொதுவாக காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கிறது. அதே சமயம் இந்த வகை கிழங்கில் உள்ள அதிக பொட்டாசியம் அளவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி :

வைட்டமின் ஏ செல்லுலார் தொடர்பு, வளர்ச்சிசிதை மாற்றம்  உள்ளிட்ட பிற உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரத்த அழுத்தம் :

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்ததை சீராக்குவதில் நன்மை பயக்கின்றன. பொட்டாசியம் நிறைந்த உணவுகள், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும், பக்கவாதத்திற்கு எதிராகப் பாதுகாப்பதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும் என்று ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.

நீண்ட ஆயுளை ஊக்குவிக்கிறது:

சர்க்கரை வள்ளி கிழங்கு பீட்டா-கரோட்டின் மூலங்களில் ஒன்றாகும். இது வைட்டமின் ஏ-க்கு முன்னோடியான ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். பீட்டா-கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கள் சேதத்திலிருந்து செல்லை பாதுகாக்க உதவுவதாக அறியப்படுகிறது.

செரிமான ஆரோக்கியம் :

கிழங்கில் உள்ள அதிக பைட்டோஸ்டெரால், மற்றும் நார்ச் சத்து ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. மேலும் டூடெனனல் மற்றும் இரைப்பை புண்களைத் தடுக்கிறது.

கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பி வைட்டமின்கள் ஆகியவை கீல்வாதம் ஏற்படும் வாய்ப்புகளுக்கு எதிராக செயலாபடுகின்றன. பீட்டா-கிரிப்டோக்சாந்தின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மூட்டுவலி மற்றும் பிற அழற்சி சம்பந்தமான நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.

வளர்ச்சிதை மாற்றம் :

கிழங்கில் ஏராளமான முக்கிய ஊட்டச்சத்துக்கள் காணப் படுகின்றன. அதன் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றான மாங்கனீசு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது.

வைட்டமின் ஏ குறைபாட்டைத் தடுக்கிறது :

வைட்டமின் ஏ கண் பார்வை ஆரோக்கித்திற்கு அவசியம் ஆகும். ஆரோக்கியமான எலும்புகள், வலுவான பற்கள், மென்மையான திசு மற்றும் சளி சவ்வுகளை பராமரிக்க வைட்டமின் ஏ அவசியம் ஆகும்.

மன அழுத்தம் :

பொதுவாக மன அழுத்தம் என்பது ஒருவரின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கிறது. அதிக மன அழுத்தத்தை அடிக்கடி மனதுடன் தொடர்புபடுத்தினாலும், உணவுத் திட்டத்திலும் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அதை சரிசெய்ய முடியும். மெக்னீசியம் உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஒரு அத்தியாவசிய கனிமமாகும். மேலும் குறிப்பாக பெண்களில் பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்கிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு உணவில் சேர்த்து கொள்வது மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளிளிருந்து சிறிது நிவாரணம் தரலாம்.

எடை இழப்பை தூண்டுகிறது :

சர்க்கரைவள்ளி கிழங்கு கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும்.  இது பசியை குறைத்து நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கும். கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் உணவு உட் கொள்ளலைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதற்கும், மற்றும் ஹார்மோன்களைத் தூண்டு வதற்கும் மிகவும் முக்கியமானது.

சர்க்கரைவள்ளி கிழங்கு தீமைகள் :

பொதுவாக சர்க்கரை வள்ளி கிழங்கு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் சில பாதகமான விளைவுகள் உள்ளன.

சர்க்கரை வள்ளி கிழங்கு, கேரட் அல்லது பூசணிக்காய் போன்ற பீட்டா-கரோட்டின் நிறைந்த காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவதால் சருமம் ஆரஞ்சு நிறத்தைப் பெறத் தொடங்கும்.

கரோட்டினீமியா என்றழைக்கப்படும் அசாதாரண நிலையின் விளைவாக இந்த நிறமாற்றம் ஏற்படுகிறது.

மேலும்  கரோட்டினீமியா என்னப்படும் இந்த நிலை உண்மையில் ஆபத்தானது அல்ல.

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular