அரிசி தீமைகள் மற்றும் பக்க விளைவுகள்

0

அரிசி தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி விரிவாகக் காணலாம்.

அரிசி தீமைகள் :

உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாக உள்ளது. பொதுவாக பாதுகாப்பான உணவாக கருதப்பட்டாலும், எச்சரிக்கையாக இருக்க மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சில சாத்தியக் கூறுகள் உள்ளன.

அரிசி தீமைகள்

அந்த வகையில் அரிசி தொடர்ந்து அதிக அளவில் உண்பவர்கள் மற்றும் ஏற்கனவே ஏதேனும் உடல் நலக் கோளாறு உடையவர்களுக்க்கு என்னென்ன பக்க விளைவுகள் மற்றும் தீமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதைக் கீழே காணலாம்.

அரிசி தீமைகள் பின்வருமாறு..

உயர் கிளைசெமிக் குறியீடு :

வெள்ளை அரிசி, உயர் அளவு கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

எனவே இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள் அல்லது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கும் இது அரிசி உணவு கவலையை ஏற்படுத்தலாம்.

எடை அதிகரிப்பு :

அரிசியில் குறைந்த அளவு புரதச் சத்து, அதிக அளவு மாவுச் சத்து உள்ளது. மேலும் 100 கிராம் அரிசியில் 150 கலோரிகள் உள்ளன.

எனவே அரிசி உணவு அதிக அளவில் உண்பது உடல் எடையை அதிகரிக்கலாம்.

ஆர்சனிக் மாசுபாடு :

சில பகுதிகளில், விளையும் அரிசியில் ஆர்சனிக் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆர்சனிக் என்பது மண்ணிலும் நீரிலும் காணப்படும் இயற்கையாக காணப்படும் தனிமமாகும்.

அதிக அளவு ஆர்சனிக் நீண்ட காலமாக உடலில் சேர்வது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.

எனவே அரிசியை நன்றாக ஊற வைத்து கழுவி சமைத்து உண்பது நல்லது.

செரிமான பிரச்சனைகள் :

சிலருக்கு அதிக அளவு அரிசி உணவை உட்கொள்ளும் போது, குறிப்பாக அது சரியாக சமைக்கப்படாவிட்டால், வயிறு உப்புசம் அல்லது வாயு போன்ற செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு :

பலதரப்பட்ட சரிவிகித உணவுகளை உண்ணாமல் அரிசி மட்டும் முதன்மை உணவாக பெரிதும் நம்பியிருப்பது காலப்போக்கில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம்.

ஏனெனில் ஓரே வகையான உணவில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம்.

ஆன்டிநியூட்ரியன்கள் :

அரிசியில் பைடிக் அமிலம் போன்ற சில ஆன்டிநியூட்ரியண்ட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சில தாதுக்கள் உடலால் உறிஞ்சப் படுவதைத் தடுக்கிறது.

வளர்சிதை மாற்ற கோளாறு :

வெள்ளை அரிசி போன்ற உயர் கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்துடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது.

அதாவது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற உடல் நலக் கோளாறுகள் ஏற்பட காரணமாக அமையலாம் என்று சொல்லப்படுகிறது.

பல் பிரச்சனைகள் :

பற்களில் ஓட்டும் வகையிலான அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகள் பற் சிதைவு போன்ற பல் கோளாறுகளை ஏற்படுத்தலாlம்.

அரிசி உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பெரும்பாலும் உட்கொள்ளும் அரிசியின் வகை, தனி நபரின் உடல் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பழக்கங்களைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாக சரிவிகித உணவின் ஒரு பகுதியாக அரிசியை உட்கொள்வது குறிப்பிடத்தக்க எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

அதே சமயம் குறிப்பிட்ட உடல்நலக் கோளாறுகள் அல்லது அரிசி உணவுகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள், ஒரு சுகாதார நிபுணர் அல்லது பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.