வைட்டமின் பி2 உணவுகள் மற்றும் நன்மைகள்

5

வைட்டமின் பி2 நன்மைகள், பயன்கள், வைட்டமின் பி 2 குறைபாடு மற்றும் வைட்டமின் பி2 நிறைந்த உணவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் பி2 :

ரிபோஃப்ளேவின் வைட்டமின் பி2 என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவைப் படுகிறது.

வைட்டமின் பி2 உணவுகள்

இது கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளை உடைத்து ஆற்றலை உற்பத்தி செய்ய உதவுகிறது.மேலும் இது ஆக்ஸிஜனை உடலால் பயன்படுத்த அனுமதிக்கிறது.

வைட்டமின் பி2 பயன்கள் :

ரிபோபுளோவின் உடலுக்கு ஆற்றலை உற்பத்தி செய்ய உதவுவதோடு ஆக்ஸிஜ னேற்றியாகவும் செயல்படுகிறது.

இது உடல் செல்களை சேதப் படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது.

ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்கள் மற்றும் டிஎன்ஏவை சேதப்படுத்தி வயதான செயல்முறையை ஊக்கு விக்கின்றன.

மேலும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றிற்கும் காரணமாக அமைகின்றன.

உடலில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை செயல்நிலைக்கு மாற்றுவதற்கு வைட்டமின் பி2 தேவைப்படுகிறது.

வளர்ச்சிதை மாற்றம் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு இது அவசிமானதாகும்.

வைட்டமின் பி2 குறைபாடு :

வைட்டமின் பி 2 உணவுகளின் மூலம் கிடைப்பதால் அதன் குறைபாடு அரிதானது.

இருப்பினும், வயதானவர்கள் மற்றும் குடிப் பழக்கம் உடைவர்கள், மோசமான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களினால் வைட்டமின் பி2 குறைபாடு ஏற்பலாம். 

வைட்டமின் பி2 குறைபாடு அறிகுறிகள் :  

சோர்வு, வளர்ச்சி குறைவு, செரிமான பிரச்சனைகள், வாயின் ஓரங்களில் புண்கள், நாக்கு வீக்கம், கண் சோர்வு  தொண்டை வீக்கம், தொண்டை புண் மற்றும் கண் கூசுதல்

வைட்டமின் பி2 நன்மைகள் :

ரிபோஃப்ளேவின் அல்லது வைட்டமின் பி2 என்பது கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது ஒட்டுமொத்த மனித ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதன் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கண் ஆரோக்கியம் :

வைட்டமின் B2 ஆரோக்கியமான கருவிழிகள் மற்றும் சரியான பார்வையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நேசனல் சென்டர் ஆப் பயோடெக்னாலஜி மையத்தின் கூற்று படி, கண்ணில் உள்ள முக்கியமான ஆக்ஸிஜனேற்றியான குளுதாதயோனைப் பாதுகாக்க வைட்டமின் பி 2 தேவைப்படுகிறது.

வைட்டமின் பி2 மற்றும் நியாசின் நிறைந்த உணவை உட்கொள்வது கண்புரை உருவாகும் அபாயத்தைக் குறைக்கும் என யூ எஸ் நேஷனல் லைப்ரரி ஆப் மெடிசின் (NLM) தெரிவித்துள்ளது.

சத்துக்கள் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது :

இரத்த ஓட்டத்தில் உள்ள சில வைட்டமின்கள், இரசாயனங்கள் மற்றும் தாதுக்களின் அளவுகள் ரிபோபுளோவின் அளவையும் பொறுத்து அமைகிறது.

உதாரணமாக   இது இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம் போன்ற தாதுக்களையும், வைட்டமின் பி1, வைட்டமின் பி3 மற்றும் வைட்டமின் பி6 போன்ற பிற வைட்டமின் களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.  மேலும் இரும்பு சத்தை உடல் பயன்படுத்த உதவுகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது :

கொழுப்புகள், கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்தில் உதவுவதன் மூலம் ஆற்றல் உற்பத்தியில் ரிபோஃப்ளேவின் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயல்பான வளர்ச்சிக்கு அவசியம் :

ரிபோஃப்ளேவின் உடலில் புரதங்கள் உருவாவதில் உதவி செய்கின்றன.இது உடலின் இயல்பான வளர்ச்சிக்கு அவசியமானதாகும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது :

மனிதர்களில் புதிய சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் உருவாவதற்கு வைட்டமின் பி 2 அவசியம் ஆகும். இது உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு ஆக்சிஜன் எடுத்து செல்வதை ஊக்குவிக்கிறது.

திசுக்களை சரிசெய்கிறது : 

ரிபோஃப்ளேவின் திசுக்களை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காயங்கள் மற்றும் பிற காயங்களை குணப்படுத்துவது மற்றும் முழுமையாக குணமடைய நீண்ட நேரம் எடுக்கும்.

வளர்ச்சியை ஊக்கு விக்கிறது :

இனப்பெருக்க உறுப்புகளின் சரியான வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் தோல், திசு, கண்கள், சளி சவ்வுகள், நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற உடல் திசுக்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு ரிபோஃப்ளேவின் மிகவும் அவசியமானதாகும்.

சரும பராமரிப்பு :

ரிபோஃப்ளேவின் சருமத்தின் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவத்தின் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது மற்றும் முகப்பரு மற்றும் தோல் பொதுவான தோல் கொப்புளங்களை உள்ளிருந்து சுத்தம் செய்ய உதவுகிறது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது :

உணர்வின்மை மற்றும் பதட்டம் போன்ற பல்வேறு நரம்பு மண்டல சம்பந்தமான கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெற வைட்டமின் பி 2 உதவுகிறது.

ரைபோஃப்ளேவின், வைட்டமின் B6 உடன் பயன்படுத்தப்படும் போது, கார்பல் டன்னல் நோய்க்குறியின் (CTS) வலிமிகுந்த அறிகுறிகளுக்கு சிகிச்சை யளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வைட்டமின் பி2 நிறைந்த உணவுகள் :

  • விலங்குகளின் கல்லீரல் வைட்டமின் பி2 வின் சிறந்த மூலமாகும். 100 கிராம் கல்லீரலில் சுமார் 3.63 மிகி வைட்டமின் பி 2 உள்ளது.
  • 100 கிராம் மாட்டிறைச்சி சிறுநீரகத்தில் 2.8 மில்லி கிராம் ரிபோஃப்ளேவின் உள்ளது.
  • 100 கிராம் பாதாம் பருப்பில் கிட்டத்தட்ட 1.1மி கி  பி 2 உள்ளது.
  • 100 கிராம் சோயாபீனில் கிட்டத்தட்ட 0.87 மில்லி கிராம் வைட்டமின் பி 2 உள்ளது.
  • 100 கிராம் மீன் முட்டையில் சுமார் 0.7மிகி  வைட்டமின் பி 2 உள்ளது.
  • சூரிய ஒளியில் காய வைத்த உலர் தக்காளி 100 கிராம் அளவில் 0.5 மி கி வைட்டமின் பி 2 உள்ளது.
  • 100 கிராம் முட்டையில் சுமார் 0.5 மில்லி கிராம் வைட்டமின் பி 2 உள்ளது.
  • சால்மன் மீன் 100 கிராமுக்கு 0.5 மில்லி கிராம் வைட்டமின் பி 2 உள்ளது.
  • 100 கிராம் பட்டன் காளானில் 0.5 மி கி   வைட்டமின் பி 2 உள்ளது.
  • 100 கிராம் கணவாய் மீனில் சுமார் 0.412 மிகி வைட்டமின் பி 2 உள்ளது.
  • 100 கிராம் மட்டி மீனில் பரிமாறலுக்கு 0.4 மி கி வைட்டமின் பி 2 உள்ளது.
  • புளூஃபின் டுனா என்ற உப்பு நீர் மீன் 100 கிராமில் 0.3 மில்லி கிராம் வைட்டமின் பி2 உள்ளது.

5 COMMENTS