ராஸ்பெர்ரி பழம் நன்மைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் ராஸ்பெர்ரி பழம் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
ராஸ்பெர்ரி பழம் :
ராஸ்பெர்ரி பழம் ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வகை பழம் ஆகும். அங்கிருந்து இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் விரைவில் வட அமெரிக்கா வரை பரவியது.
ராஸ்பெர்ரி உற்பதியில் உலக அளவில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக மெக்ஸிகோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் உள்ளன
ராஸ்பெர்ரி பழத்தில் உள்ள சத்துக்கள்
100 கிராம் ராஸ்பெர்ரி பழத்தில் 0.7 கிராம் கொழுப்பு, 1.2 கிராம் புரதம் மற்றும் 12 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. மாவு சத்தில் 4.4 கிராம் சர்க்கரை மற்றும் 6.5 கிராம் நார் சத்து அடங்கியுள்ளது.
விட்டமின்கள் :
100 கிராம் ராஸ்பெர்ரி பழத்தில் 26.2 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 0.87 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் மற்றும் 7.8 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது.
தாதுச் சத்துகள் :
100 கிராம் ராஸ்பெரி பழத்தில் 0.69 மில்லி கிராம் இரும்பு சத்து, 25.00 மில்லி கிராம் கால்சியம் மற்றும் 151 மில்லி கிராம் பொட்டாசியம் , 29 மில்லி கிராம் பாஸ்பரஸ், 22 மில்லி கிராம் மக்னேசியம் உள்ளது
ராஸ்பெர்ரி பழம் நன்மைகள்
ராஸ்பெர்ரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப் பட்டுள்ளன.
மூளை ஆரோக்கியம் :
ராஸ்பெர்ரி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சரியான விகிதத்தில் உள்ளன.
குறிப்பாக ஃபிளாவனாய்டுகள் மூளையின் வலிமையை மேம்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது.
ராஸ்பெர்ரி பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல் பாட்டை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம் :
ராஸ்பெரி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இதய செயல்பாட்டிற்கு நன்மை பயக்கிறது.
மேலும் ராஸ்பெரி பழத்தில் உள்ள அந்தோசியானின்கள் மற்றும் பயோஆக்டிவ் பாலிபினால்கள் இதய பிரச்சினைகள் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
மேலும் இதனுடன் வைட்டமின் சி சேர்ந்து பிளேக் உருவாவதைக் குறைத்து தமனிகள் அடைபடாமல் பாதுகாக்கிறது.
மேலும் ராஸ்பெரி பழங்களில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களைக் குறைத்து இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
பைட்டோநியூட்ரியண்ட்கள் இதய தமனிகளில் உள்ள அடைப்பு களை நீக்க உதவுகிறது.
மேலும் வைட்டமின் ஏ இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீரிழிவு மேலாண்மை :
ராஸ்பெரி பழம் பைட்டோ நியூட்ரியண்டுகளின் சிறந்த மூலமாகும். இது சில ஹார் மோன்களுடன் இணைந்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப் படுத்துகிறது.
ராஸ்பெரி பழங்களை முழுவதாகவோ அல்லது சாறு பிழிந்து ஜுசாக தொடர்ந்து உட்கொள்வது டைப் -2 நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
புற்றுநோயைத் தடுக்கிறது :
ராஸ்பெரி பழத்தில் உள்ள எலாஜிக் அமிலம் புற்றுநோயை ஏற்படுத்தும் உயிரணுக்களுக்கு எதிராக போராடுவதாக சொல்லப்படுகிறது.
அவை தோல், மார்பகம், சிறுநீர்ப்பை மற்றும் உணவுக்குழாய் போன்ற உறுப்புகளில் பாதிக்கும் புற்றுநோய்க்கான காரணிகளை எதிர்த்துப் போராடும் அளவுக்கு வலிமையானது.
மேலும் ராஸ்பெரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்று நோய் ஏற்படுத்தும் உயிரணுக்களின் பரவலைக் குறைக்கவும் உதவுகின்றன.
கண் பார்வை :
ராஸ்பெர்ரி பழத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினாலிக் கலவைகள் உள்ளன.
அவை கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது மேலும் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்
ராஸ்பெர்ரி பழத்தில் கனிசமான அளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்து செரிமான செயல் முறையையும் மேம்படுத்துகிறது.
பாலியல் ஆரோக்கியம் :
ராஸ்பெர்ரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் கருவுறுதலை மேம்படுத்துவதற்கும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்து வதற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஆக்ஸிஜனேற்றிகள் விந்தணுக் களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இதனால் மேம்பட்ட பாலியல் வாழ்க்கையை உறுதி செய்கிறது.
வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆண்களில் கருவுறுதல் சக்தியை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மேலும் இதில் உள்ள புரோந்தோ சயனிடின்கள் இணப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தகின்றன.
மேலும் உடல் செல்களை தளர்த்தி பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது.
எடை இழப்பு :
ராஸ்பெர்ரி பழங்களில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள நார்ச் சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.
மெக்னீசியம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் கொழுப்பை வேகமாக எரிக்கிறது.
நினைவாற்றல் :
ராஸ்பெரி பழங்களில் உள்ள் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் நினைவகத்தை மேம்படுத்து கிறது. இதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
ராஸ்பெரி பழங்களில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றொரு காரணம் அதில் அடங்கியுள்ள வைட்டமின் சி ஆகும்.
வைட்டமின் சி உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
ராஸ்பெர்ரி பழம் தீமைகள் :
ராஸ்பெர்ரி பழத்தின் பக்க விளைவுகள் பற்றி ஆராய்சிகள் குறைந்த அளவே செய்யப்பட்டுள்ளன. எனவே அதிக அளவு ராஸ்பெர்ரி சாப்பிடுவதால் ஏற்படும் நீண்ட கால பக்க விளைவுகள் பற்றி யாருக்கும் தெரியாது.
ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம். ஒவ்வாமை எதிர்வினைகளில் முக்கியமாக படை நோய், மூச்சு விடுவதில் சிரமம், முகம், உதடுகளில் வீக்கம், நாக்கு அல்லது தொண்டை ஆகியவை அடங்கும்.