வைட்டமின் பி6 உணவுகள், நன்மைகள்

5

வைட்டமின் பி6 :

வைட்டமின் பி6, பைரிடாக்சின் என்று அழைக்கப்படுகிறது. இது எட்டு பி குருப் வைட்டமின்களில் ஒன்றாகும். பி வைட்டமின்களின் குழு சரியான செல் செயல்பாட்டிற்கு முக்கியமானது.

பைரிடாக்ஸின் வைட்டமின் பி6 உணவுகள்

மேலும் முக்கிய செயல்பாடான வளர்சிதை மாற்றம் இரத்த அணுக்களை உருவாக்குதல், மேலும் செல்களை ஆரோக்கியமாக வைத்திருத்தல் போன்றவற்றில் உதவுகின்றன.

இது மற்ற பி வைட்டமின்களைப் போல் நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும்.

எனவே அதிகப்படியான வைட்டமின் B6 உடலில் தங்காமல் சிறுநீர் மூலம் வெளியேற்ற படுகிறது. எனவே தினமும் போதுமான வைட்டமின் பி 6 ஐப் பெற வேண்டும்.

வைட்டமின் பி6 குறைபாடு :

பைரிடாக்ஸின் குறைபாடு பொதுவாக அரிதானதாகும். ஆனால் உடலில் ஊட்ட சத்துக்கள் உறிஞ்சப் படும் திறனில் குறைபாடு இருந்தாலோ அல்லது ஈஸ்ட்ரோஜன்கள், கார்டிகோ ஸ்டீராய்டுகள், வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் அல்லது வேறு சில மருந்துகளை எடுத்துக் கொண்டாலோ மற்றும் நீண்ட கால குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் வைட்டமின் பி 6 குறைபாடு தோன்றலாம்.

பல நேரங்களில் வைட்டமின் பி6 குறைபாடுகள், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் போன்ற பிற பி வைட்டமின்களின் குறைபாட்டினாலும் தோன்றலாம்..

வைட்டமின் பி6 குறைபாடு அறிகுறிகள்:

  • கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு,
  • உணர்வின்மை
  • இரத்த சோகை
  • மன அழுத்தம்
  • குழப்பம்
  • பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு
  • ஊறல், தோலழற்சி
  • நாக்கின் வீக்கம்,  அல்லது குளோசிடிஸ்
  • உதடுகளின் வீக்கம்

வைட்டமின் B6 தினசரி தேவை :

50 வயது வரை உள்ள வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட  (RDA) வைட்டமின் பி 6 அளவு 1.3 மில்லிகிராம் ஆகும்.

NLM படி, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 1.7 mg RDA உள்ளது, அதே சமயம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பரிந்துரைக்கப் பட்ட அளவு 1.5 மில்லி கிராம் ஆகும்.

வைட்டமின் பி6 பயன்கள் :

  • வைட்டமின் B6 உடலில் உள்ள உயிரணுக்களில் 100 க்கும் அதிகமான இரசாயன எதிர்வினைகளில் ஈடுபட்டுள்ளது.
  • ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றவும்,
  • இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும்,
  • மரபணுப் பொருளை உருவாக்கவும்,
  • அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தை உடைக்கவும்,

உடல்கள் வைட்டமின் B6 ஐப் பயன் படுத்துகின்றன.

மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை பராமரிப்பதற்கும்,

கர்ப்பம் மற்றும் குழந்தை பருவத்தில் நமது மூளையின் இயல்பான வளர்ச்சியை ஊக்கு விக்கவும் உடலால் பயன்படுத்தப் படுகிறது.

வைட்டமின் பி6 நன்மைகள் :

ஆக்சிஜனேற்றி :

வைட்டமின் பி6 ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். எனவே உடல் செல்களில் இருந்து தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்கிறது.

என்றும் இளமை :

வைட்டமின் பி 6 சருமத்தை புத்துணர்ச்சியூட்டுகிறது. மேலும் சுருக்கங்கள், புள்ளிகள், கருவளையங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைத்து இளமையோடு வைத்திருக்க உதவுகிறது.

அல்சய்மர் மற்றும் டிமென்சியா :

வைட்டமின் பி 6 அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் வராமல் தடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மனச் சோர்வு :

மனச்சோர்வு, பதட்டம், வலி ​​மற்றும் சோர்வு ஆகியவற்றைத் தடுத்து மனநிலை மாற்றங்களைச் சீராக்க மூளைக்கு உதவுகிறது.

மேலும் இது மனசோர்வுக்கு காரணமான புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் ஹார்மோன் சமநிலையை கட்டுக்குள் வைக்கிறது.

கண் பார்வை :

வைட்டமின் பி 6 கண் பார்வைக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரைகளைத் தடுக்க உதவுகிறது.

செரிமானம் :

வைட்டமின் பி6 நிறைந்த உணவுகள் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்க உதவுகிறது. இதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

அழற்சி எதிர்ப்பு :

பைரிடாக்சின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

வீக்கம் :

பைரிடாக்சின் நிறைந்த உணவுகள் உட்கொள்ளல் முடக்கு வாதத்தினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

சிறுநீரக கற்கள் :

சப்ளிமெண்ட் வடிவத்தில் ஹைபராக்ஸ லூரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தையும் இது தடுக்கிறது.

வைட்டமின் பி6 உணவு வகைகள் :

  • 100 கிராம் பிஸ்தா பருப்பில் சுமார் 1.7 மி.கி வைட்டமின் பி6 கிடைக்கிறது.
  • 100 கிராம் கோழி இறைச்சியில் 0.9 மி.கி வைட்டமின் பி 6 கிடைக்கிறது
  • 100 கிராம் சால்மன் மீன்களில் 0.9 மி.கி வைட்டமின்  6 உள்ளது.
  • 100 கிராம் மாட்டிறைச்சியில் 0.5 மில்லிகிராம் பைரிடாக்சின் உள்ளது.
  • 100 கிராம் கொண்டைக் கடலையில் 0.5 மில்லிகிராம் வைட்டமின் பைரிடாக்சின் உள்ளது.
  • 100  கிராம் வாழைப்பழத்தில் 0.4 மி.கி. வைட்டமின் B6 உள்ளது.
  • 100 கிராம் அவகாடோ பழத்தில் 0.3 மில்லிகிராம் வைட்டமின் பி 6 உள்ளது.
  • 100 கிராம் இனிப்பு உருளைக் கிழங்கில் 0.2 மில்லிகிராம் வைட்டமின் பி6 உள்ளது.

5 COMMENTS

  1. […] மேலும் வைட்டமின் பி6, வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்களும் கனிசமான அளவு உள்ளன. […]