தண்டால் பயிற்சி நன்மைகள் மற்றும் பலன்கள்

0

தண்டால் :

தண்டால் பயிற்சி ஆங்கிலத்தில் புஷ்-அப் என்று அழைக்கப்படுகிறது. இது வீட்டிலேயே வைத்து எந்த உபகரணங்களும் இல்லாமல் செய்யப்படும் ஒரு வகை கடின பயிற்சியாகும்.

தண்டால்

தினமும் தொடர்ந்து தண்டால் பயிற்சி செய்வதன் மூலம், வயிற்றுப் பகுதி, முதுகுப் பகுதி, கைகள், கால்கள், மார்புப் பகுதியில் உள்ள சதைகள் கடினமாகி பார்ப்பதற்கு கட்டுமஸ்தான தோற்றம் தரும்.

தண்டாள் பயிற்சியில் செய்வதற்கு இலகுவானது முதல் கடிமானது வரை மற்றும் தரையில் செய்வது முதல் உபகரணங்கள் மீது செய்வது வரை ஏராளமான வகை தண்டாள் பயிற்சி முறைகள் உள்ளன.

தண்டால் நன்மைகள் :

தினமும் தண்டால் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

உடல் வலிமை :

தண்டால் தினமும் செய்வது மார்பில் உள்ள தசைகள் (பெக்டோரலிஸ் மேஜர்), கைகள் (குறிப்பாக ட்ரைசெப்ஸ்) மற்றும் தோள்கள் போன்ற உடல் மேல் உறுப்புகளை வலிமைப் படுத்துகிறது.

நிலைத்தன்மை :

தன்டால் செய்யும்போது உடலின் மையப்பகுதியில் உள்ள அனைத்து தசைகளுக்கும் வேலை கொடுக்கப்படுகிறது.

மேலும் மலக்குடல் மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள சதைகளும் வலிமையாகின்றன.

எளிதானது :

புஷ்-அப் செய்வதற்க்கு என்று ஏதும் சிறப்பு உபகரணங்கள், பயிற்சியாளர்கள் யாரும் தேவையில்லை.

ஒரு சிறிய இடம் இருந்தாலே போதும். இந்த பயிற்சியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

செயல்திறன் :

புஷ்-அப்கள் பொதுவாக தோள்பட்டை மற்றும் டைனமிக் மூட்டு ஆரோக்கியம் மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும் பயிற்சிகளில் சேர்க்கப்படுகின்றன. இந்த திறன் குறிப்பாக  சிறந்த தடகள செயல்திறனுக்கு அவசியம் ஆகும்.

ஒரே நேரத்தில் பல தசைகளுக்கு பயிற்சி :

உடற்பயிற்சி நிலையத்தில் அதிக நேரம் செலவழிக்க இயலாதவர்களுக்கு புஷ்-அப்கள், பிளாங்க் போன்ற பயிற்சிகள் அதிக நன்மையை அளிக்கின்றன.

ஏனெனில் அவை ஒரே நேரத்தில் உடலின் பல பெரிய தசைகளுக்கு ஒர்க் அவுட் கொடுக்க உதவுகின்றன.

முதுமையில் ஆரோக்கியம் :

சுவரில் சாய்ந்து செய்யும் தன்டால் போன்ற லேசான பயிற்சிகள் வயதாகும்போது உடல் வலிமையை மேம்படுத்த உதவுகிறது.

வயதானவர்கள் இயன்ற அளவுக்கு வலிமையோடு இருக்க முயற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது :

உடல் எடை குறைக்கும் உடற்பயிற்சியை விரும்புபவர்கள் நடைப் பயிற்சியுடன் தன்டால் போன்ற கடினமான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

தோரணையை மேம்படுத்துகிறது :

தண்டாள் பயிற்சி முதுகு, தோள்கள் மற்றும் வயிற்றை வலுப்படுத்துவதன் மூலம், உடல் தோரணையை மேம்படுத்த உதவுகிறது. வளைந்த தோரணை முதுகு வலி, தலைவலி போன்றவற்றுக்கு வழி வகுக்கும்.

எலும்பு வலிமை :

எலும்பு தாது அடர்த்தி என்பது எலும்பு வலிமை மற்றும் ஆரோக்கியம் எலும்பு தாது அடர்த்தியைப் பொறுத்து அமைகிறது.

பொதுவாக எலும்பின் அடர்த்தி குறைவாக இருந்தால், எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தண்டாள் அல்லது புஷ்-அப்கள் போன்ற எடை தாங்கும் மற்றும் எதிர்ப்பு பயிற்சிகள் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது.

வளர்ச்சி ஹார்மோன் :

மனித உடல் மனித வளர்ச்சி ஹார்மோன் அல்லது HGH எனப்படும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உயரத்தை அதிகரிக்கவும், தசைகளை உருவாக்க உதவுகிறது.

வயது அதிகரிக்கும் போது, மனிதர்களில் வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி குறைகிறது.

தினமும் தன்டாள் போன்ற உடற்பயிற்சிகள் செய்வது இந்த ஹார்மோன் வெளியிடப் படுவதைத் தூண்டுகிறது.

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி :

அறியப்படாத புஷ் அப் நன்மைகளில் ஒன்று, ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்வது.

பொதுவாக வயது அதிகரிக்கும் போது, ​​டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. ஆனால் தினசரி மற்ற பிற உடற்பயிற்சிகளுடன் தன்டாள் பயிற்சியையும் சேர்ப்பதன் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கலாம்.