புரதம் வகைகள் அதன் பயன்கள் மற்றும் தீமைகள்

0

புரதம் :

புரதம் என்றால் என்ன? புரதம் வகைகள், அமினோ அமிலம் வகைகள், புரதம் பயன்கள், புரதம் தீமைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

புரதம் என்றால் என்ன?

புரதம் என்பது உடல் செல்களின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சரியான செயல்பாடுகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து ஆகும். புரோட்டீன் பெரும்பாலான உணவு வகைகளில் காணப்படுகிறது.

புரதம் வகைகள்

ஒரு நபருக்கு தேவையான புரத சத்தின் அளவு எடை, பாலினம், வயது மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. உடலுக்கு தேவையான புரதச் சத்து பெரும்பாலும் உணவுகளின் உணவுகளின் மூலமே கிடைக்கிறது.

இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள் போன்ற விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவுகள் மூலமும் விதைகள், கொட்டைகள் மற்றும் பருப்பு போன்ற பருப்பு வகைகள் போன்ற தாவர உணவு மூலங்களிலிருந்து இருந்து புரதம் கிடைக்கிறது. (புரதம் நிறைந்த உணவுகள்)

புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. புரதங்கள் அமினோ அமிலங்கள் எனப்படும் கட்டுமானத் தொகுதிகளால் ஆனவை. சுமார் 20 வெவ்வேறு அமினோ அமிலங்கள் வெவ்வேறு அளவுகளில் இணைந்து காணப் படுகின்றன.

தசை மற்றும் எலும்பு போன்ற புதிய புரதங்களையும், நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் போன்ற பிற சேர்மங்களையும் உருவாக்க உடல் அவற்றைப் பயன்படுத்துகிறது. மேலும் அவை ஆற்றல் மூலமாகவும் பயன்படுத்தப் படுகிறது.

20 அமினோ அமிலங்களில் உடலால் உருவாக்க இயலும் 11 வகை அமிலங்கள் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என அறியப்படுகின்றன.

உடலால் உருவாக்க முடியாத ஒன்பது அமினோ அமிலங்கள் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என்று அறியப்படுகின்றன.

இவைகளை உங்கள் உணவில் போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும், இதனால் உங்கள் உடல் செயல்படும்.

புரதம் வகைகள் :

புரதம் அவற்றில் உள்ள அமினோ அமிலங்களின் அளவுகளின் படி முழுமையான புரதம் மற்றும் முழுமையற்ற புரதம் இரண்டு வகையாக உள்ளது.

ஒரு புரதச் சத்தின் ஊட்டச்சத்து மதிப்பு அதில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்களின் அளவைக் கொண்டு அளவிடப்படுகிறது.

பொதுவாக வெவ்வேறு உணவுகளில் வெவ்வேறு அளவு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன.

முழுமையான புரதம் :

அசைவ உணவுகள் கோழி, மாட்டிறைச்சி அல்லது மீன் மற்றும் பால் பொருட்கள் போன்றவவற்றில் அனைத்து வகை அத்தியாவசிய அமினோ அமிலங்களும் காணப் படுகின்றன.  அவை ‘முழுமையான’ புரதம் அல்லது உயர்தர புரதம் என அறியப்படுகின்றன.

முழுமையற்ற புரதம் :

பீன்ஸ், பருப்பு, பருப்புகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற தாவர உணவுகளில் காணப்படும் புரதங்கள்  பொதுவாக அனைத்து வித அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டிருப் பதில்லை. எனவே அவை ‘முழுமையற்ற’ புரதங்களாகக் கருதப்படுகின்றன.

புரதம் பயன்கள் :

சிறந்த ஆற்றல் மூலம் :

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்து இரண்டையும் விட புரோட்டீன் நீண்ட நேர ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் உடலை இயக்கும் தொழிலாளி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க :

மேலும் பசியின் அளவைக் குறைக்கும் திறன் புரதச் சத்தில் உள்ளதால் அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவும். எனவே உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பயனளிக்கிறது.

வளர்ச்சிதை மாற்றம் :

பசியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் புரதத்தை சாப்பிடுவது தற்காலிகமாக வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

ஆற்றலை பயன்படுத்த உதவுகிறது :

உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை ஜீரணிக்கவும் உபயோகப் படுத்தவும் தேவையான உடல் ஆற்றலைப் பயன்படுத்தும் நிகழ்வு உணவின் வெப்ப விளைவு அல்லது உணவின் தெரிமிக் விளைவு (TEF) என்று அழைக்கப்படுகிறது. மேலும் புரதத்தின் தெர்மிக் விளைவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பை விட அதிகமாக உள்ளது.

சிறந்த உடல் அமைப்பை பெற உதவுகிறது :

கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்து புரதம் நிறைந்த உணவுகளை போதுமானவன அளவு உட்கொள்வதன் மூலம் தொப்பையை குறைத்து சிறந்த உடல் அமைப்பை பெற முடியும்.

தசைகளை பராமரிக்க உதவுகிறது :

புரதம் தசைகளின் முக்கிய கட்டுமானப் பொருளாக இருப்பதால், போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது தசை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, கடின உழைப்பு போன்றவை செய்தால் போதுமான அளவு புரதத்தை சாப்பிட வேண்டும்.

ஒட்டு மொத்த உடலுக்கு நல்லது : 

புரதம் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் முக்கிய கட்டுமான தொகுதிகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக புரத உணவை உட்கொள்வது காயங்கள் விரைவாக ஆறுவதை ஊக்குவிக்கிறது.

புரதம் நன்மைகள் :

  • உடலில் ஏற்படும் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்களை தூண்டுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • பசியை குறைத்து  நீண்ட நேரம் நிறைவாக உணர செய்வதன் மூலம் எடை குறைக்க உதவுகிறது.
  • கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட்டுகளுடன் ஒப்பிடும்போது ஜீரணிக்க அதிக கலோரிகள் தேவைப்படுகின்றன.
  • உடல் திசுக்களை கட்டியெழுப்புதல் மற்றும் பராமரிப்பதன் மூலம்  தோலை உறுதியாகவும் ஆரோக்கிய மாகவும் வைத்திருப்பதில் உதவுகிறது.
  • சரியான வளர்ச்சி சிதை மாற்றம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. குறிப்பாக குழந்தை பருவம், இளமைப் பருவம் மற்றும் கர்ப்ப காலத்தில்.
  • புரதங்கள் உணவை ஆற்றலாக மாற்றுவதற்கு தேவையான நொதிகளை உருவாக்குவதன் மூலம் உணவை ஜீரணிக்க உதவுகிறது.
  • ஹார்மோன்களை ஒழுங்கு படுத்துகிறது. குறிப்பாக பருவமடையும் போது.

புரதம் தீமைகள் :

மற்ற உணவுப் பொருட்களைப் போலவே, புறதமும் அதிக அளவு உண்பது  நல்லதல்ல.

அதிக அளவு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் தேவைக்கும் அதிகமான கலோரிகள் உடலில் சேர்கிறது. மேலும் இதன் மூலம் சிறுநீரகங்களில் அழுத்தம் அதிகரிக்கிறது.